Thursday, September 16, 2010

எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!







பல மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் மகளை "pre -kg " இல் சேர்த்து விட்டோம் ஒரு நார்மலான பள்ளியில். ஜாதியில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் படிவத்தில் ஜாதி இடத்திற்கு ஒன்றும் போடாமல் விட்டு விட்டோம். அப்போது அவர்கள் பள்ளியில் ஆட்கள் சேர வேண்டும் என்பதற்காக சரி என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சிறிது கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் உங்கள் ஜாதி என்ன என்று நச்சரித்து விட்டார்கள். நாங்களும் ஜாதியில் உடன்பாடு இல்லை , அதனால் ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை. "நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் , நாங்கள் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.

சரி,, கண்டிப்பாக கொண்டுக்கதான் வேண்டுமா என்று தெரிந்த சில வழகரிசர்களிடம் விசாரித்தபோது, அப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இப்போது எல்லா பள்ளிகளிலும் , ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை, கட்டாயமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விட்டால் , ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் என் குழந்தைக்கு ஜாதியை முன் வைத்து கொண்டிருக்கும் எந்த சலுகையும் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று ஒரு எங்களிடம் ஒரு ஐடியாவையும் கொடுத்தார். அதற்கும் ஒத்து வரவில்லை என்றால், வழக்கு போட்டு கொள்ளலாம் என்றார்.

அவர் சொல்வது சரிதான். பள்ளி நிர்வாகம் ஒத்து வரவில்லை என்றால் வழக்கு தொடரலாம். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து அந்த பள்ளியும் அதே மாதிரி கேட்டு விட்டால் அந்த பள்ளியில் வழக்கு தொடர முடியும். ஆனால் அதற்கு பின்பு நமது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க முடியுமா என்று நினைத்தால், கண்டிப்பாக முடியாது.பிரச்சினைதான் வளரும். ஜாதியிலும் உடன்பாடு இல்லை, ஆனால் பள்ளியிலும் சேர்கதான் வேண்டும். என்ன செய்வது என்று தெரிய வில்லை.ஒன்று சரி என்று ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் நமது கொள்கை இதில் அடி பட்டு விடும். இல்லை கொள்கைதான் முக்கியம் என்று நினைத்தால் , குழந்தைகளை வீட்டில் வைத்து நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல..என்னதான் செய்வது......? ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள், இதில் கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் எல்லாம் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டார்கள் என்று தெரிந்தால் நமக்கும் சிறிது புண்ணியமாக இருக்கும்..........

ஜாதியை தெரிவிப்பதினால், தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைப்பது உண்மைதான். இவ்வாறு தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து படித்து, நல்ல வேளையிலும் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு , தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று நினைகிரார்களா என்றால்.....இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்(ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள்). இந்த சலுகையினால் ஓரளவு தாழ்ந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் முன்னேறி கொண்டு இருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தோசம் முன்னேறட்டும்.பல நூற்றாண்டுகள் அடிமைகளாக , படிப்பறிவே இல்லாமல் இருந்தவர்கள் படிக்கதான் வேண்டும்...எல்லா சமுதாயரையும் போல முன்னேறதான் வேண்டும்.

ஆனால், நம்முடைய எண்ணம் ஜாதி என்ற ஒரு நிலையே இருக்க கூடாது என்பதுதான். ஆக இவ்வாறு சலுகைகளை பெற்று படித்து வந்தவர்கள் , தன்னுடைய அடுத்த வம்சதினற்கு ஜாதியை வைத்து வரும் எந்த சலுகையும் வேண்டாம் என்று உதறி தள்ளினால் ஓரளவு ஜாதி என்ற நிலையை குறைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத்தான் நான் கருதுகிறேன். பள்ளியில் ஜாதியை கேட்பது ஒரு விதத்தில் சலுகைகளுகாகதான் என்பதால், ஓரளவு முன்னேறியவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று ஜாதியை உதறி தள்ளினால், ஜாதி என்ற குறியீடு ஓரளவு நீக்க படும் , பள்ளி நிர்வாகமும் இதற்கு ஏதாவது வழி செய்யும்.

ஜாதி என்ற ஒரு நிலையை பள்ளியிலேயே நிறுத்தி விட்டோம் என்றால் ஓரளவு ஜாதியின் பயன் பாட்டை குறைத்து விடலாம். ஆனால் இதற்கு இந்த சமுதாயமும் , அரசாங்கமும் வழி விடுமா என்று யோசித்தால் கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இதை குறைபதற்கு, சிவப்பதிகாரம் படத்தில் சொல்வது போல " எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!"