வெற்றி ---- இந்த வார்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.
:)))))
"Success is just like being pregnant: everybody congratulates you, but nobody knows how many times you were fucked." - Gurnicht Von Nicht (1946-).
Thursday, September 24, 2009
Sunday, September 13, 2009
நானும் ஒருவன்

கீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.
தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.
ஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.
கல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண்டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.
தென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.
அழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.
ஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.
எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.
கடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.
நமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.
ப.பிரதீப்
Subscribe to:
Posts (Atom)