Monday, October 12, 2009

விபச்சாரன்கள்





விபச்சாரம் - இந்த வார்த்தைக்குரிய அர்த்தத்தை முதன்முதலில் உணர்ந்தது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் மப்பில் இருக்கும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணிடம் திட்டு வாங்கும் போதுதான் . இது நடந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில். மற்றொன்று, நடுத்தர வயது உள்ள ஒரு பெண், ஒரு நடுதரதிற்கும் (தரம் இல்லாத) அதிகமான வயது உள்ள ஒரு ஆணிடம் எதோ பேசி , அவரும் பித்து பிடித்தவர் போல அவள் பின் சென்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்து நானும் என் நண்பனும் ஆர்வ மிகுதியில் அவர்களை பின்தொடர்ந்து , பின்பு அந்த காட்சி ஒரு ஹோடெலின் அறை கதவை சாதியதோடு நின்றது. புத்தர் போதி மரத்தில் ஞானம் பெற்றது போல, எங்களுக்கு ஒரு ஹோடேலில் விபசாரம் பற்றிய ஞானம் பிறந்தது.

பொதுவாக விபசாரம் என்ற வார்த்தை எப்போதும் பெண்களை சுற்றியேதான் வந்து கொண்டிருகிறதே தவிர ஆண்களை பற்றி எப்போதும் ஒரு வார்த்தை கூட வந்ததிலை, கேள்வி பட்டது கூட இல்லை. இவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு என்னதான் பெயர்? இதுவும் ஒரு வகையில் ஆணாதிகத்தின் ஒரு பகுதிதான்.

உதாரணத்திற்கு ,

*) ஒன்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் பெண்ணை திருமணம் செய்யும் ஆணை , நாம் பலவாறு கேலி செய்வதுண்டு( பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே) . " ரெண்டு மச்சினிசியா......ம்ம்ம்ம்ம்...மஜாதான்" .ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஆணுக்குதான். இதுவே இதற்கு அப்படியே உல்டாவாக ஒரு பெண்ணை கற்பனை செய்து பாருங்கள். ஒன்றுக்கும் அதிகமான ஆண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை " ரெண்டு மச்சினனா ....ம்ம்ம்ம்ம்ம்....மஜாதான் " என்று என்றைகாவது சொல்லி இருக்கிறோமா. சொல்லத்தான் முடியுமா.. நீ அவர்களுக்கு தாய் போல என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். அப்படியே சொன்னால் அவள் " விபச்சாரி, நடத்தை கெட்டவள், கள்ள காதல்" என்று பல பெயர்கள். இந்த விசயத்தில் ஆண்களுக்கு பெயர் மன்மதன் , பெண்கள் செய்தால் வேறு பெயர்.

*) குடும்ப தலைவன் , சில வீட்டில் அனைவருக்கும் தெரிந்தே "சின்ன வீடு" வைத்து கொள்ளலாம் . அவனுக்கு எந்த பெயரும் இல்லை.தட்டி கேட்டாலும் ஒன்றும் ஆக போவதும் இல்லை. அவன் ஆண் . குடும்ப தலைவன். ஆனால் இதையே பெண் செய்தால் மேலே சொன்ன அனைத்து பெயர்களும் அவளுக்கு வரும்.

*) பலான படங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும், படத்திற்கு வருபவர்களில் , இளசுகள் அதிகமா அல்லது பெரிசுகள் அதிகமா என்று. ஆண்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு அவர்களுடைய இச்சையை தீர்த்து கொள்ள குறிபிட்ட வயதை தாண்டிய பிறகும். ஆனால் பெண்களுக்கு? (அவர்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆசா பாசங்கள் எல்லாம் ஆண்களுகுதானா? பெண்களுக்கு இல்லையா? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றும் தெரியவில்லை ).

*) கடவுளை கூட நாம் விட்டு வைக்க வில்லை இந்த விசயத்தில். கோகுலத்தில் உள்ள கிருஷ்ணன் ,பல பெண்களிடம் விளையாடுவாராம், குளிக்கும் போது துணிகளை எடுத்து விடுவாராம்.அவருக்கு பெயர் மன்மதன். ஆனால் இது மாதிரி குணாதிசயங்கள் நிறைந்த பெண் கடவுளை பற்றி நான் அறிந்ததில்லை. கடவுளில் கூட ஆணாதிக்கமா? எனக்கு எப்போதோ படித்த ஹைக்கூ தான் நினைவுக்கு வருகிறது.

"கிருஷ்ணன் செய்தால் லீலை.
நாங்கள் செய்தால் ஈவ்- டீசிங்கா ?"

மேலே உள்ள விசயங்களில் உள்ள ஆண்களுக்கு என்ன பெயர் தெரியவில்லை?.

சமீபத்தில் தினமலரில் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே. சில நடிகைகளை விபசாரம் செய்தார்கள் என்று கூறிய பத்திரிகை , அவர்களிடம் சென்றவர்களை பற்றி எதுவும் வெளியிட வில்லை. அவர்களுக்கு பெயரும் இல்லை. பொதுவாக சினிமா துறையில் உள்ள பெண்களை பற்றி அனைவரும் அறிந்ததே. ஒரு பெண் நடிகையாக வர வேண்டும் என்றால் ,இன்னும் அந்த பெண் யாருடைய வாரிசும் இல்லை என்றால் , அவள் எத்தனை பேருடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே. முதல் கொலை செய்யும் போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். போக போக எல்லாம் சரி ஆகி விடும். அது போலதான் இதுவும். தொழில் என்று ஆன பிறகு , அதுவும் பழகிய பிறகு அந்த தொழிலை செய்வதில் (விபசாரதைதான்) எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களை இந்த மாதிரி ஆக்கியதே ஆண்கள் (அனைவரும் இல்லை) தான். அவர்கள் அழைத்து செய்யும் பொழுது விபசாரம் இல்லை. ஆனால் அதுவே அந்த பெண்கள் தனியாக செய்தால் மட்டும் விபச்சாரமா? புரிய வில்லை.

ரஜினி ஒரு பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்பு , " மது , மாது இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று கூறியதாக கேள்வி பட்டிருக்கிறேன். இதை ஒரு ஆண் கூறலாம் . இதை பெண் கூறினால், விபச்சாரமா?

சினிமாவில் உள்ள சில பெண்களின் படத்தை மட்டும் பத்திரிகையில் போட்டு இருந்தார்கள். ஆண்களை பற்றி போடுவது என்றால் , 75 % ஆண்களின் போட்டோவை போட வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ஆக . விபசாரம் என்பதில் எப்போதும் பெண்களை பற்றியே குறை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. ஆண்கள் இந்த பெண்களிடம் சென்று படுப்பதை குறைத்தால் , இந்த தொழில் படுத்து போகும் என்பது உண்மை.

ப.பிரதீப்