Wednesday, January 16, 2013

ரேபிஸ்டுகளின் ரேபிஸ்டுகள்

இந்த டெல்லி ரேப் மேட்டர  பத்தி யாருகிட பேசுனாலும் எல்லாரும் சொல்ற ஒரே பதில், இந்த பொண்ணுங்க டிரஸ் பண்ற விதம் அப்படி. இதுங்க ஒழுங்கா டிரஸ் பண்ணா இந்த பிரச்சினையே வராதுனுதான்.இது மாதிரி ஆளுங்கள பார்த்தா  எனக்கு எப்படி தோனுதுனா , "எனக்கு அந்த ரேப் மாதிரி சந்தர்ப்பம்  அமையல, வந்தா நானும் பண்ணுவேன். " அப்படின்னு சொல்ற  மாதிரி தோணுது. இது மாதிரி சொல்ற எல்லாமே அவர்களுக்கு  தெரிந்தோ தெரியாமலோ ரேபிச்ச்டுகளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சொல்ற மாதிரி "இவர்கள் அவர்களை விட ஆபத்தானவர்கள் " தான் போல.

கேட்டா எல்லாரும் என்ன சொல்லுவாங்கனா ,அது மாதிரி டிரஸ் பண்ணா டெம்ப்ட்  ஆகுது , அதனால ரேப் பண்றாங்கன்னு. எனக்கு என்ன கேட்க தோனுதுனா "டெம்ப்ட்  ஆனா ரேப் பன்னிருவின்களா?". தெரியாமதான் கேட்குறேன் , நாம எத பார்த்துதான் டெம்ப்ட் ஆகாம  இருக்கோம்?எல்லாத்துக்கும்தான்  டெம்ப்ட் ஆகுறோம்.அப்படின்னு பார்த்தா உணர்ச்சிகள் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா? பெண்களுக்கு இல்லையா? எத்தன ஆம்பளைங்க ரோட்ல முண்டா பனியனோட,லுங்கியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்கள பார்த்து பொண்ணுகளுக்கு டெம்ப்ட் ஆகாதா ? கண்டிப்பா ஆகும்...ஆனா அவங்க கண்ட்ரோல் பண்ணிக்கணும்.ஆனா ஆண்கள் கண்ட்ரோல்  பண்ணிகமாடாங்க. என்ன ஒரு ஆணாதிக்கம்?.ஆண்களுக்கு உள்ள அதே உணர்ச்சிகள் தான பெண்களுக்கும் இருக்கும்.

பெண்கள் ரோட்ல நடந்து போயிடு இருக்கும் போது , செயின் அறுத்துட்டு ஓடுறாங்க திருடனுங்க . அதுக்காக பெண்கள் வீட்ட விடு வெளிய வரும் போது நகைகள் எல்லாத்தையும் அவித்து வச்சிட்டுதான் வரணும் அப்படின்னு சொல்ல முடியுமா? திருடங்களுக்கு நகைய பார்த்தா டெம்ப்ட் ஆகும், அதுனால நகைய போடாதிங்கனு சொல்ல முடியுமா? வீடு புகுந்து இல்ல பேங்க் புகுந்து கொள்ளை அடிக்கிறாங்க...அதுனால பேங்க் நடத்தாதிங்கனு  சொல்ல முடியுமா? முடியாது . திருடர்கள் எல்லாம் சேர்ந்து இது மாதிரி  ஒரு அறிக்கை விடுறானுங்க " பெண்கள் நகைய போட்டுட்டு வரதுனாலதான் எங்களுக்கு டெம்ப்ட் ஆகுது.அதனால யாரும் நகை போடாம வெளிய வாங்க.நாங்க திருட மாட்டோம்னு" சொன்னா எப்படி இருக்குமோ அது மாதிரிதான் ரேப் விசயத்துக்கு நம்ம ஆளுங்க பேசுற விசயமும் எனக்கு தோணுது .

பர்தா போட்ட பெண்ணையே ரேப் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க . 5 வயது பொண்ணுங்கள கூட ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் நம்ம என்ன சொல்ல போறோம்? .....கண்டிப்பா பதில் இருக்காது . விட்டா பிறக்குற பெண் குழந்தைகள் கூட துணியோடதான் பிறக்கணும்னு ரூல்ஸ் கொண்டு வருவாங்க போல. கரெக்டுதான் ...அத பார்த்தும் நம்ம ஆளுங்க டெம்ப்ட் ஆகிடாங்கனா என்னா  பண்றது?

இது கூட பரவாயிலா...ஒருத்தர்கிட பேசிக்கிட்டு இருக்கும்போது சொல்றாரு...."சார்.....நாலு பசங்க நிக்கிற இடத்துல ஒரு பொண்ணு தனியா போனா , கைய பிடிச்சி இழுக்குறது மனித இயல்பு சார் " அப்படிங்கிறாரு. இத எப்ப மனித இயல்பா சேர்த்தாங்கன்னு  எனக்கு தெரியல?.அது உங்க பொண்ணா இருந்தா என்ன சார் பன்னுவிங்கன்னு திருப்பி கேட்டா பதில் இல்ல .

ஆக...நான் எப்படி இருக்கனும் , எப்படி டிரஸ் பண்ணனும்னு decide பண்றது நானாதான் இருக்கனும்.அடுதவங்களுகாக எல்லாம் யோசிச்சி என்னால பண்ணிக்கிட்டு இருக்க முடியாது ..அது  ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி .அது உடையிலும் பொருந்தும்.

பிரதீப்  

Sunday, June 10, 2012

ஆயிசா - பள்ளி கூடம் ஒரு பலி கூடம் ஆன கதை

ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய , எழுதி கொண்டிருக்கும் ஒரு ஆசிரியரின் ஒரு புத்தகத்தின் ஒரு முன்னுரைதான் இது. 10 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியராக பணி புரிந்தவரை , எது தமிழ் மொழி பெயர்தளை செய்ய தூண்டியது அதுவும் ஆங்கில விஞ்ஞான புத்தகத்தை என்பதுதான் அவர் சொல்லியது , நான் சொல்ல வருவது......

அப்போது அவர் , பூமி எப்படி ஒரு காந்தமாக செயல் படுகிறது என்பதை ஒரு வகுப்பில் எடுத்து கொண்டு இருந்துரிகிறார் எல்லா வருடமும் எடுப்பது போல,ஆனால் இந்த வகுப்பில் அவர் இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. 

" மிஸ்" ....
" என்ன வாந்தி வருதா ..வந்தா கிளம்பு "
"இல்ல மிஸ் ஒரு சந்தேகம்"

ஆச்சர்யம்....இருந்தாலும் காட்டி கொள்ளாமல் "என்ன" என்று கேட்க ..

" ஒரு காந்தத்தை ரெண்டாக வெட்டினால் என்ன ஆகும்" 

ரொம்ப இலகுவாக "ரெண்டு காந்தம் வரும்"..

"அந்த காந்தத்தை வெட்டிகிடே  போனா ...உதாரணமாக நமக்கு இந்த காந்தத்தை துண்டாகி கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா எண் என்று வெச்சிட்டா ?"

"ரொம்ப சிம்பிள்மா....முடிவுறா எண்ணிகையில் காந்தம் கிடைக்கும்"

அடுத்து என்ன கேட்பாளோ என்று பயந்து "உட்காரு" என்று சொல்லி விட்டு , ஏதேதோ நடத்தி விட்டு சென்று விட்டார் வகுப்பிலிருந்து.

இருந்தாலும் விடவில்லை அந்த மாணவி....."மிஸ் மிஸ்....காந்தத பத்தி இன்னும் ஒரு சந்தேகம் இருக்கும் மிஸ்...."

"என்னமா....டைம் ஆகிருசுல ....சீக்கிரம் சொல்லு ...."

"முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை ஒரே நேர்கோட்டில் வைத்தால் ...எதிர் எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்  மிஸ்?"

"................"

"ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தொகை இழுக்கும்..ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டு இருக்கும் இல்லையா ...மிஸ் ?"

"ஆமா ...அதுகென்ன "

"என் சந்தேகம் அங்கனதான் இருக்கு.எல்லா காந்தங்களின் கவர்திறனும் ஒன்றென கொண்டால் அவை ஒட்டி கொள்ளத்தான் வாய்ப்பே இல்லையே. ..எப்புறமும் நகராமல் அப்படியேத்தான இருக்கும் .."  

".................."

"ஏன்நாம இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிகையிலான காந்தங்களை நேர்கோட்டில் வைத்தது போல் அமைக்க பட்டதா வசிக்க கூடாது ? அந்த கோணத்துல பூமிங்கிற காந்தத ஆராயலாம் இல்லையா ..."

பதிமூன்று வருட பள்ளி வாழ்கையில் இப்படிப்பட்ட கேள்வியை அவர் கேட்டதில்லை ....

"the truth of matnes.....வெற்றோட் ஸ்டுடென்ட்கிண்க்லீ எழுதியது...அருமையா  இருக்கு ..படிகிரிங்களா மிஸ் ..."

"உன் பேர் என்ன"

"ஆயிஷா".

அறை வாங்கியவள் போல் புத்தகத்தை வாங்கி கொண்டு ஆசிரியர் அறைக்குள் சென்று விட்டார்.

பின்பு அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் விசாரிக்கும் பொழுது ...அவள் இது மாதிரி  பல  கேள்விகள் மற்ற ஆசிரியர்களிடம் கேட்டு அடி வாங்குவாள்  என்றும்....தாய் தந்தை இல்லாததால் சித்தி வீட்டில் இருந்து படிக்கிறாள் என்றும் இந்த ஆசிரியர் தெரிந்து கொண்டார்...இது மாதிரி சில பல கேள்விகளினால் ஆசிரியருக்கும் மாணவிக்கும் இருந்த நட்பு கூடியது. இது மாதிரி ஒரு சந்திப்பில் ...இன்னொரு புத்தகத்தை எடுத்து கொடுத்து...இதை படித்தேன் மிஸ் ...ஆனால் எல்லாம் ஆங்கிலத்தில் இருபதினால் சரியாக புரிய வில்லை...நீங்கள் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும்....செயிறிங்களா மிஸ் ? என்று கேட்க ...பாப்போம் என்று சொல்லி விட்டு....அடுத்த ஒரு கேள்வியை ஒரு கேட்டு இருக்கிறாள்..

"மிஸ் ....துணி துவைக்கும் போதும் அழுக்கு போது...உடம்புக்கு போடுற சோபுளையும் அழுக்கு போகுது....இத அதுக்கு போட்ட ஏன்னா....அத இதுக்கு போட்ட என்ன....."

"ஏண்டி இப்படியெல்லாம் கேட்டு ஏன் உயிரை வாங்குற" 

கேள்வி ஈசியாக இருந்தாலும்..பதில் தான் சரியாக வர வில்லை என்று நினைத்து கொண்டு சென்று விட்டார்.

இன்னொரு நாள் அழுது கொண்டே ஆசிரியரிடம் வந்து நிக்க ....என்ன என்று கேட்கும் பொழுது வரலாறு ஆசிரியர் அடித்து விட்டார் என்று கூறி இருக்கிறார்ள் .

" என்ன அப்படி கேட்ட?"

அவரிடம் இதான் மிஸ் கேட்டேன்....

"அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யாரு மிஸ் "

"புத்த பிச்சு "
"அவர் பெயர் என்ன மிஸ்"
"........."
"அவர் பெயர் உபகுப்தர் மிஸ்"

"தெரிஞ்சு வசிகிடே என்னைய கேட்டு அவமான படுதுரியா ?" என்று கேட்டு ...வெழு வெழு என்றுவெளுத்து விட்டார்.....

பின்பு  இந்த மிஸ்ஸிடம் ......

"அடி வாங்குனா வலிகாம  இருக்குறதுக்கு எதாச்சும் மருந்து இருக்கா  மிஸ்"  என்று அழுதுகிட்டே கேட்டு சென்று  விட்டாள்.

இப்படி பட்ட  வேளையில் தான் அந்த சோகம் நடந்து இருக்கிறது...

"மிஸ் ..உங்கள  ஆயிசா வேதியியல் லேபுக்கு வர சொல்றா  "..

"ஏன் அவ  இங்க வர மாட்டாளா"

"தெரியில    மிஸ் ...உங்கள வர சொன்னா "

சரி என்று அங்கு செல்ல..

"வாங்க மிஸ்....அடி வாங்குனா வலிகாம இருக்குறதுக்கு நான் ஒன்னு கண்டு  பிடிச்சி  இருக்கேன்  மிஸ் ..வந்து பாருங்க " 

"வேதியியல nitres oxide வந்து உடல்  மரத்து போறதுக்காக operation theatrela  பண்றாங்களாம் ...அதான் நான் இந்த தவளைக்கு  first போட்டேன்...அது அப்படியே இருக்கு மிஸ்....அதான் அடுத்து எனக்கு ஒரு ஊசி போட்டேன். "

" அடி பாவி என்னடி பண்ணி வச்சிருக்கே ....என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தவளை இறந்து போக  ...." இவளை ஹோச்பிடளுக்கு  அழைத்து  சென்று இருக்கிறார்கள் ...ஆனால் போகிற  வழியிலேயே  ஆயிசா உயிரை  விட்டு இருக்கிறாள் 

இந்த நிகழ்வு ஆசிரியருக்கு ஒரு பெரிய நெருடலை ஏற்படுத்த , இது போன்ற மற்ற ஆசியாகளுக்கு உபயோகமாக இருக்கட்டும் என இந்த தமிழ் மொழி பெர்யர்ப்பை இவர் கையில் எடுத்து இருக்கிறார்.

இந்த புத்தகத்தில் இவர் , தற்போது உள்ள கல்வி முறையையும் சாடி இருக்கிறார். 

"எண்கள் தான் எல்லாவற்றையும் நிர்ணயம் செய்கின்றன. மதிப்பெண்கள்,வரிசை எண், தேர்வு எண். எங்கும் எண்கள் .எண்கள்தான் பள்ளியை ஆள்கின்றன.எல்லா ஆசிரியர்களும் ஒரு வகையில் மாணவர்களின் அறிவை அவமான படுத்தி கொண்டுதான் இருகிறார்கள்.நானும் அவர்களில் ஒருத்தியா ....? பள்ளி கூடங்கள் பலி கூடங்கள் ஆகி விட்டன. எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள் .அவற்றிற்கு ரெடிமேட் பதில்கள்.வெறும் மனப்பாடம் செய்யும் ஒரு இயந்திரமாய் மாணவர்கள் வளர்ந்து கொண்டு இருகிறார்கள்"


அவர் சொல்வதும் சரிதான். சமீபத்தில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் ஒரு பேட்டியில் இப்படி கூறி இருந்தார்." எனக்கு தெரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களும் , பிட் அடித்து அல்லது காபி அடித்து வெற்றி பெரும் மாணவர்களும் ஒன்றுதான் " ...எவ்வளவு உண்மை.

இன்று நீங்கள் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்றால் , புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் உண்டு..இல்லையேல் வாங்க முடியாது. ஆக எல்லா பள்ளிகளும் மனபாடம் செய்வதையே  மாணவர்களுக்கு போதிகின்றார்கள். சொந்த  சரக்கு மதிப்பு இல்லை இப்படி இருக்க  எந்த  பள்ளியில் குழந்தைகளை படிக்கச் வைத்தால் என்ன . இன்றும்  சில முக்கிய பள்ளிகளுக்கு கூட்டம் அலை மோதி வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறோம். இது மாதிரி படிப்தற்கு ஏன் வரிசையில் நின்று படிக்கச் வைக்க வேண்டும். சாதாரண பள்ளியில் படிக்கச் வைத்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது. 

உதாரணத்திற்கு என்னை எடுத்து கொண்டால் , நான் மேல்கல்வி முடித்து வெளியே வரும் பொழுது எனக்கு என்ன தெரியும் என்று யோசித்து பார்த்தால், தமிழ் , ஆங்கிலம் எழுத படிக்கச் தெரிந்ததை தவிர ஒன்றும் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் ஆங்கிலம் சுத்தம். எழுத படிக்கச் தெரிந்ததை தவிர வேற சொந்தமாக பேச, எழுத தெரியாது. எவ்வளவு ஈசியான கதை என்றாலும் அதை மனபாடம் செய்து தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலையைத்தான் தமிழ் வழி கல்வி கற்று கொடுத்து இருக்கிறது.

ஆக ஆசிரியர் கூறுவது போல பள்ளி கூடம் ஒரு பலி கூடமாக ஆகாமல் , கண்டிப்பாக உயிர்தெழ வேண்டும்.பள்ளியில் பல மாற்றங்கள் வர வேண்டும் ,சொந்த சரக்குக்கு மதிப்பு இருக்க வேண்டும். அந்த சொந்த சரக்கை மதிப்பிடும் அளவிற்கு ஆசிரியர்களின் நிலையும் உயர வேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு விளையாட்டையும் ஒரு படிப்பாக  வைக்க  வேண்டும். அது   ஓரளவிற்கு  physical fitness m  வளர்க்கும்  விதமாக  இருக்கும் சமசீர்கல்வி ஒரு muthal padi. இன்னும்  வளர  வேண்டும். வளரும். :-)


Sunday, May 20, 2012

ஜாதியும் .....தோஷங்களும்

நபர் 1 : அந்த பொண்ண ஏன்டா வேணாம்னு சொல்லிட்ட?
 நபர் 2: அது sc பொண்ணுன ...அதான் வேணாம்னு சொல்லிட்டேன்


 ரோட்டில் கடந்து போகின்ற பொழுது கேட்ட உரையாடல் இது. திரும்பி கேட்க வேண்டும் என்று தோன்றியது " ஏன் sc பொண்ணுனா அவங்களுக்கு உணர்ச்சிகள் கிடையாதா அல்லது மேட்டர் இல்லையான்னு" . தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது ஏதாவது ஒரு தனிப்பட்ட தேவைக்காகவோ இன்னமும் இந்த ஜாதியை பிடித்து கொண்டுதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.வயதானவர்கள் இதை சொன்னாலும் பரவாயில்லை ஆனால் இன்றைய இள வயதினரும் இதை சொல்லி கொண்டு அலைவதுதான் வருத்தமான செய்தியாக உள்ளது. அந்த அளவுக்கு அவர்களுக்கும் இள வயதிலிருந்தே ஜாதியை ஊற்றி வளர்த்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை.


 இந்தியாவிலிருந்து நிலாவிற்கு மனிதனை அனுப்பினால் கூட ஜாதி ஒதுக்கீடு செய்துதான் இந்தியா அனுப்பும் என்று பலர் தங்களது வெறுப்பை காமித்து கொண்டு இருக்கிறார்கள். வரவேற்க தக்கது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே வேளையில் இவர்களிடம் ,ஜாதி இல்லை என்று கூற சொல்லுங்கள். சொல்ல மாட்டார்கள். ஆக கீழே இருப்பவர்கள் கீழேயே இருக்க வேண்டும், மேலே வந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இவர்களை எடுத்து கொள்ளலாம். கீழே உள்ளவர்கள் மேலே வர வேண்டும் என்பதின் ஒரு நோக்கம் தான் இந்த ஜாதி ஒதுக்கீடு.ஆக இதை வேண்டாம் என்று சொல்பவர்கள் ஜாதியும் இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்கும். அப்போது இவர்கள் ஜாதி ஒதுக்கீடை எதிர்ப்பதில் ஒரு நியாயம் இருக்கும்.


ஜாதி, மதம் என்று நான் வேண்டாம் என்று சொன்னாலும் நானும் ஒரு வகையில் இதை வளர்ப்பதில் ஒரு மறைமுக ஒரு பங்கை எடுத்து கொண்டுதான் இருக்கிறேன் என்று நினைக்கிறன்.  அதாவது , ஒரு குழந்தை படித்து முடித்து எந்த துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் முடிவு எடுப்பதை விட அந்த மாணவன் தேர்ந்து எடுத்தால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை ஓரளவு நாம் ஒத்து கொள்கிறோம். அவன் துறையை தேர்ந்து எடுப்பதில் சரி. ஆனால், அவன் எந்த மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் அல்லது எடுக்க கூடாது  என்பதை நாம் அவனிடம் கேட்காமலே சிறு வயதிலேயே அவனுக்கு திரித்து விடுகிறோம். ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு பாதிரியார் , திருமணம் செய்து வைக்கும் பொழுது உனக்கு சம்மதமா என்று இருவரிடமும் கேட்டு திருமணம் செய்து வைக்கிறார். ஆனால் பிறந்தவுடன் எடுக்கும் பப்டிசம் அவனுடைய  சம்மதத்தை கேட்காமலேயே அவனுக்கு நீ இந்த மதத்தைதான் நம்ப வேண்டும் என்று சொல்லி விடுகிறோம். இது எந்த விதத்தில் சரி? இது போன்று ஒவ்வொரு மதத்திலும் ஒரு சம்பிரிதாயம். இது சரியா என்பது கேள்விக்குறியே. சாதியற்ற , மதமற்ற ஒரு மனிதனை உருவாக்கி , அவன் பக்குவம் அடைந்த பிறகு அவனுடைய போக்கில் விட்டு , உனக்கு மதம் பிடித்தால் அதை பின்பற்று. இல்லை என்றால் மதமற்ற வாழ்கை வாழ் என்று கூறினால்.....அது சரி என்று தோன்றுகிறது. !!!!


 அது போல இந்த numerlogy காரர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. வர வர குழந்தை நமக்கு பிறகிறதா அல்லது numerlogy காரர்களுக்கு பிறகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், என்ன கலர் அவர்களுக்கு ஒத்து போகும் , எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பதை கூட அவர்கள்தான் உறுதி செய்கிறார்கள். பெற்றோர்களுக்கு ஒரு வேலையும் இல்லை குழந்தை பெற்று கொள்வதை தவிர்த்து. நண்பர் ஒருவர் புலம்பி கொண்டு இருந்தார், குழந்தைக்கு இந்த பெயர் வைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் வைக்க முடிய வில்லை. அந்த பெயர் வைக்க கூடாது என்று numerlogist சொல்லி விட்டார் என்று. சுத்த முட்டாள் தனமாக இருந்தது. தெரிந்தோ தெரியாமலோ , பிறப்பிலேயே அவர்களுடைய தன்னம்பிக்கையை குறைக்க நாம் வழி செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. பெயரில் என்ன இருக்கிறது? நமக்கு ஒரு பெயர் பிடித்து விட்டால் கண்டிப்பாக வைத்து விட வேண்டும், அது எந்த மதத்தின் பெயராக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி.


 இவர்கள் ஒரு பக்கம் என்றால், அடுத்தது இந்த ஜோசிய காரர்கள் தொல்லை. பிறந்த நேரத்தை வைத்து , குழந்தையின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று சொல்லி இவர்கள் படுத்தும் பாடு பெரும்பாடு. சமீபத்தில் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது. அது சிறிய மருத்துவமனை என்பதால் குழந்தை பிறக்கும் பொழுது அழுகும் சத்தம் தெளிவாகவே கேட்டது.சரி என்று என் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கும் பொழுது அதில் ஒரு நேரம் காட்டியது. என் அப்பா கடிகாரத்தில் ஒரு நேரம் காட்டியது. சரி இந்த இரண்டு நேரத்தில் எதை எடுத்து கொள்ளலாம் பிறந்த நேரமாக என்று யோசிக்கும் பொழுது நர்ஸ் வந்து ஒரு நேரத்தை சொன்னார். என்னவென்று பார்த்தல் மருத்துவமனையில் ஒரு நேரம் காட்டுகிறது. இதில் எந்த நேரத்தை அடிப்படையாக வைத்து ஜோசிய காரர்கள் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே கணித்தாலும் அது எந்த அளவுக்கு உண்மை ஆக போகிறது என்றும் தெரியவில்லை.




 அப்படியே சரியான குழந்தை பிறந்த நேரத்தை கணித்து விட்டாலும் , குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரியா என்றும் யோசிக்க வைக்கிறது.குழந்தை தாயின் வயிற்றிலும் உயிரோடுதான் இருக்கிறது. ஒரு உயிர் உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொல்வது என்பது சரி. ஆனால் அதை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.ஆக ஆணும் பெண்ணும் இணைந்து பெண்ணின் வயிற்றில் ஒரு கரு உருவாகும் நேரத்தை வைத்து ஜாதகம் சொன்னால் சரி.அது இல்லாமல் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும் நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது என்பது சரியான முறை அல்ல என்றே தோன்றுகிறது. ஆக ஜாதகம் பொய் என்பதே என்னுடைய கணிப்பு.




 இதிலும் இன்னொரும் விஷயம் இன்னும் காமெடி ஆகத்தான் இருக்கிறது. ஜாதகம் கணித்து குழந்தைக்கு செவ்வாய் தோஷம் , புதன் தோஷம் என்று சொல்வது. அப்படியே தோஷம் இருக்கிறது என்று சொன்னாலும் , அதற்கு பரிகாரம் செய்தால் சரி ஆகி விடும் என்பது. கோயிலுக்கு சென்று சில சம்பிருதாயங்கள் செய்தால் சரி ஆகி விடும் என்பதும், சில தோஷத்திற்கு இரண்டு கல்யாணம் நடக்கும், அதில் இரண்டாவதுதான் நிலைக்கும் என்றால் முதல் தாலி வாழை மரத்திற்கு கட்டி அதை வெட்டுவது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பரிகாரம் செய்து நாம் யாரை சந்தோஷ படுத்துகிறோம் , யாரை சந்தோஷ படுத்துவதினால் இந்த தோஷம் மறைகிறது. கண்டிப்பாக யோசித்து பார்க்க வேண்டும். நாம் முட்டாளா அல்லது பரிகாரம் செய்து நாம் சந்தோஷ படுத்துகின்ற அந்த கடவுளா அல்லது கோள்களா ? இந்த தோஷத்தில் உள்ளவர்கள், தோஷம் இல்லாதவர்களோடு இணைந்தால் இருவரில் யாரவது ஒருவர் இறந்து விடுவார் என்றெல்லாம் கேள்வி படுகிறோம். இந்த இணைவது என்பது திருமணம் செய்து இணையும் போதுதான் பலிக்குமா ? ஏனென்றால் எத்தனையோ பேர் விலை மாதர்களிடம் செல்கிறார்கள். அவர்களிடம் செல்லும் போது நாம் தோஷம், ஜாதகம் விசாரித்தா செல்கிறோம் ? அப்படி அவர்களிடம் இந்த தோஷம் இருந்தால் என்ன ஆகும்? அப்போது இதெல்லாம் "பலி"க்காதா ? தோஷம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் கண்டிப்பாக ஏமாற்றுவேலைதான்.




 ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு குழந்தை ஒரு வீட்டில் பிறக்கிறது என்றால் ஒரு தோஷம் கண்டிப்பாக வரும்.அதை நான் ஏற்று கொள்கிறேன். அது சந்"தோசம்".

Monday, November 7, 2011

கடுப்பேதுராங்க மை லார்ட் !!!

7 ம் அறிவு படத்த பார்த்துட்டு பல பேரு பல கமெண்ட்ஸ் குடுத்துகிடுதான் இருக்காங்க. சில பேரு படம் சூப்பர் அப்படினும், சில பேரு படம் மொக்கனும், இன்னும் சில பேரு தமிழனு நினைக்கும் போது பெருமையாவும் இருக்குனு சொல்றாங்க. முருகதாஸ் இந்த படத்த பத்தி சொல்லும் போது, இந்த படத்த பார்த்துட்டு நீங்க தமிழனு நினைக்கும் போது ஒரு திமிரு இருக்கும்னு சொல்றாரு. ஆனால் எனக்கு என்ன தோனுதுனா, ஏன் இந்த இன வெறி? ஏன் இந்த மொழி வெறி?

மொழி ங்கிறது ஒரு தகவல் தொடர்பு சாதனம் அவ்வளவுதான். தமிழ் மொழி பழமையானது, வரலாறு மிக்கது.சரி ஒத்துகிறேன்.ஆனால் அத சொல்லிகிட்டே இருக்குறதுனால, அந்த மொழி பேசுற நான் தமிழன் அப்படின்னு சொல்லிகிரதுல என்ன வந்துற போதுன்னு எனக்கு தெரியல. இதுல என்ன திமிரு இருக்கு இல்ல இதுல என்ன பெருமிதம் இருக்கு. ஜஸ்ட் அது ஒரு மொழி அவ்வளவுதான. தமிழ் மொழி பேசுரவந்தான் பெருமையான்வனு நினச்சா...பிறவியிலேயே வாய் பேச முடியாதவங்க, இல்ல பிறவியிலேயே காது கேட்காதவங்க,இல்ல மொழிந்கிரதையே உணர முடியாத நிலையில உள்ளவங்கள எப்படி நீங்க பார்குறிங்க? அவங்க வாழ்வதற்கு உரிமையே இல்லாதவங்களா? அவங்களுக்கு பாவம் மொழிந்கிறதே என்னனு தெரியாது....அவங்கல என்ன பண்ணலாம்? அவங்களுக்கு எல்லாம் திமிரே இருக்க கூடாதா?

எனக்கு என்னமோ இப்படிதான் எல்லாமே தொடர்கிரதொனு தோணுது...நீங்க மொழில தமிழ் மொழிதான் உயர்ந்தது அப்படின்னு சொல்றிங்க....உடனே இன்னொருத்தன் என்ன பண்ணுவான் அப்படினா ஜாதில ஏன் ஜாதி தான் உயர்ந்தது னு சொல்லுவான்..இன்னொருத்தன் மதத்துல என் மதந்தான் உயர்ந்ததுனு சொல்லுவான். அப்புறம் எல்லாம் அடிச்சிக்கிட்டு சாக வேண்டியதுதான்.இது ஒரு பொழப்பா ?

சரி...அப்படியே தமிழ் , தமிழ் னு சொல்றவங்கனாசும் உண்மையா இருகிங்களா ..அதுவும் இல்ல....ஈழ தமிழர்களுக்கு நம்ம என்ன பண்ணிட்டோம்....அப்பப்ப சவுண்ட் கொடுப்போம்...சூடு ஆரிருசுனா மூடிகிட்டு இருப்போம்..இதுதான நடக்குது.....வேற எதாச்சும் இத மீறி நடந்துருச்சா....இல்ல இந்த படத்த எடுத்த முருகதாஸ் தான் உண்மையா இருக்காரா......தமிழ் படத்துல போதி தர்மர் தமிழர்னு சொல்றிங்க.....தெலுகு ல அவர வேற மாதிரி ப்ராஜெக்ட் பன்றிங்கனு சொல்றாங்க..இது தேவையா.....? தமிழ், தமிழ் னு சொல்றவரு என் ஹிந்தி ல போய் படம் எடுக்குரிங்க? தமிழ் மொழிலேயே எடுக்க வேண்டியதுதான....போதி தர்மர வச்சி , நாம தமிழர்னு பெரும படுறதா சொல்றிங்க....ஆனால் அந்த போதி தர்மர் தமிழருக்கு ஒன்னும் பண்ண மாதிரி தெரியல....அவர் என்னடானா சீனா நாட்டுக்கு போய் அங்க போய் எல்லாம் கத்து குடுத்துகிட்டு இருகாரு. எனக்கு என்னமோ அவர் கரெக்டாதான் இருக்குற மாதிரி தோணுது...நம்மதான் அவர தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறோம்.

இதுலந்த ஒன்னும் மட்டும் புரியுது....தமிழரா நடித்துரிகுற சூர்யா வ சாகடிகுனும்னா விசத்த கலந்து கொடுத்தா காலி பண்ணிரலாம் போல...நானும் "நந்தா" படத்துழந்து பார்க்குறேன்...மனுசன இப்படியே சாகடிசிகிடு இருக்காங்க.

ஆக, இது மாதிரி தயவு செஞ்சு மக்களை உசுபேத்துரத நிறுத்துங்க சார்......நீங்க தூக்கி வச்சி ஆடுற தமிழ் இனத்துல முட்டாள் தனமா முடிவு எடுக்குற சில மக்கள் இருக்குறாங்க ..முத்து குமார் மாதிரி, சமீப காலத்துல தீகுளிச்சி இறந்து போன அந்த பொண்ணு மாதிரி....தேவ இல்லாம சில பேர நீங்களே உருவாகாதிங்க....


இது மாதிரி இந்தியா ல இன்னொரு கும்பல் செம்மைய கடுபேதிகிட்டு இருக்காங்க....யாருன்னு கேட்குரிங்கலா....அவர பத்தி ஒரு tag line குடுத்தா புரிஞ்சிரும்னு நினைக்கிறன்....."அவர் கொஞ்ச நாள் முன்னாடி சாப்பிடாம பேசிக்கிட்டு இருந்தாரு.....இப்ப பேசாம சாப்பிட்டுகிட்டு இருகாரு..." அவரேதான் அன்னா ஹசாரே தான்.மனுஷன் ஏதாவது ஒரு விரதம் எடுக்காம இருக்க மாட்டாரு போல..... இவரும், இவர் கும்பலுல இருக்குறவங்க சேட்ட தாங்க முடியல. இவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு வேற. ஒரு 5 பேர் சேந்துகிட்டு உண்ணாவிரதம் இருப்போம்னு அரசாங்கத்த மிரட்டுவான்கலாம், அதனால இவங்க சொல்றத கேட்கனுமா....என்ன நடக்குது இங்க....

ஊழல ஒழிக்கணும்னு சொல்றது எல்லாம் கரெக்டுதான்....ஆனால் அதற்கு ஒரு முறை னு ஒன்னு இருக்குல.....முதல ஒரு பொது நல வழக்கு போடுங்க...இது மாதிரி ஒரு சட்ட மசோதா கொண்டு வரணும்னு.....ஒத்துகலனா ..அதுக்கப்புறம் நீங்க உண்ணாவிரதம் இருங்க.....எதுவுமே பண்ண மாட்டிங்க.....ஆனால் நீங்க சொல்றத எல்லாம் கேட்கனும்னா எப்படி ? தமிழ் நாடுலயும்தான் சமசீர் கல்வி கொண்டு வர கூடாதுன்னு சொன்னங்க....இங்க உள்ளவங்க எல்லாம் உண்ணா விரதமா இருந்தாங்க?....பொது நல வழக்கு போட்டாங்க...அவங்களுக்கு தீர்ப்பு கிடச்சது....இப்ப சமசீர் கல்வி தமிழ் நாட்டுல இருக்கு...இது மாதிரி இந்த கும்பல் எதுவுமே பண்ணல.....ஆனால் இவங்க சொல்றத கேட்கணும்.....அது எப்படி?

பத்திரிகையாளர் ஞானி ஒரு பேட்டில சொல்லி இருப்பாரு.....எந்த ஊழல் சட்டம் கொண்டு வந்து ராஜா, கனிமொழி எல்லாம் சிறையில இருக்காங்கனு? ஆக சட்டம் எல்லாம் கரெக்டான் இருக்கு.....அரசாங்கம்தான் சரியா இருக்கனும்.....அத மாத்துறதுக்கு நீங்க பிரசாரம் பண்ணுங்க....இல்ல நீங்களே நல்ல ஆளுங்கள தேர்வு பண்ணி தேர்தலுல நில்லுங்க....அத விட்டு நீங்க கடந்த தேர்தலுல பிஜேபி ஓட்டு போடுங்கனு சொல்றது சரியா படலையே சார்? பிஜேபி என்ன அவ்வளவு நல்ல கட்சியா? மத வெறி பிடிச்சி பாபர் மசூதிய இடிகிரதுகு ஆழ கூட்டிட்டு போய் அத இடிச்சி, அத தலைமை தாங்கி நடத்திய அத்வானிக்கு ஆதரவு தர சொல்றது எந்த விதத்துல நியாயம் அப்படின்னு தெரியல ?

சரி அந்த கும்பலுல ஒருத்தரா இருக்குற....கிரண் பே(கே)டி மேல இப்ப சுமத்துன குற்றத பார்த்தா இன்னும் கேவலமா இருக்கு....விமான சீட்டுல கொடுத்த காசுல காச அடிச்சிட்டு....அத நான் use பண்ணல...என்னோட டிரஸ்ட் க்கு தான் use பண்ணேன்னு சொன்ன எப்படி ஒத்துக்க முடியும்..? வடிவேலு சொன்னதுதான் நியாபகம் வருது....."ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்டினியா ?" அது மாதிரி "மத்தவங்க பண்ணா ஊழல்...நீங்க பண்ணுனா பொது நலமா?" என்ன லாஜிக் இதுன்னு புரியல.....இந்த கும்பலுக்கு இந்தியா முழுவதும் எப்படி ஆதரவு தந்தாங்கனுதான் புரியல.....ஆனால் அந்த விசயத்துல அன்னா ஹசாரே தன்னுடைய 7 ம் அறிவையும், நோக்கு வர்மதையும் use பண்ணி மக்களை கவர்ந்துடாருனு நினைக்கிறன். ..

Saturday, August 6, 2011

திலீபன் - ஒரு சகாப்தம் !!!





எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் தனது 25 வது வயதில் கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க சார்பில் நின்று, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை எதிர்த்து போட்டியிட்டார். அவர் அந்த தேர்தலில் தோற்றாலும் கணிசமான வாக்குகளை பெற்று அனைவராலும் கவனிக்க பட்டார்.அவர் பெயர் இராமச்சந்திரன்.Lawyer ஆக திருச்சியில் தற்போது பணியாற்றி கொண்டு இருக்கிறார். கவுன்சிலராக தேர்தலில் நிற்பது என்பது சாதாரண விசயமாக இருந்தாலும் தன்னுடைய 25 வயதில் அந்த பதவிக்கு நிற்க வேண்டும் என்று தோன்றியதும், அதற்காக உழைத்து கணிசமான வாக்குகளை பெற்றதும் என்னை பொறுத்த வரையில் ஒரு சாதனையே. அதை அவரிடம் நேராக கூறியும் இருக்கிறேன். எனக்கு தற்போது 29 வயது. 4 வருடங்களுக்கு முன்பு என்னால் அது மாதிரி யோசிக்க முடிந்ததா என்று யோசிக்கும் பொழுது, இல்லை என்கிற பதிலே எனக்கு தோன்றுகிறது. அப்படியே நின்றாலும் அந்த சூழ்நிலையை என்னால் எதிர்கொள்ள முடிகின்ற அளவுக்கு எனக்கு மனபக்குவம் இருந்திருக்குமா என்றாலும், இல்லை என்றே தோன்றுகிறது. ஆக அந்த இளம் வயதில் அவர் அதை அசால்டாக எதிர்கொண்டது ஒரு சாதனையே.

எனக்கு தெரிந்து வரலாற்றில் இளம் வயதில் தன் வயதையும் மீறி சாதித்தவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் சில பேர். பாரதியார், பகத் சிங்க், சேகுவாரா. ஆரிய குலத்தில் பிறந்து ஜாதி இல்லை என்று அந்த காலத்திலே கூறி, தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தவர் பாரதியார் . " இது என்ன சந்தோசம், என் பெண் கல்யாண வயதில் ஒரு கீழ் ஜாதி பையனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் அதுதான் எனக்கு மிக பெரிய சந்தோசம்" என்று கூறியவர். ஆனால் தன்னுடைய 39 வயதில் நோய்வாய் பட்டு இறந்து விட்டார். பகத் சிங்க், தன்னுடைய 24 வது வயதில் சுதந்திர போராட்டத்திற்காக தூக்கில் ஏறிய மாவீரன். சேகுவாரா, மக்கள் எந்த ஒரு நாட்டின் மூலையில் ஒடுக்க பட்டாலும் , அதற்காக போராடுவேன் என்று கூறி , கியூபா புரட்சியில் போராடி வெற்றியை வாங்கி தந்து , அந்த நாட்டில் கிடைத்த உயர் அமைச்சர் பதவியை துறந்து , இன்னொரு புரட்சியில் தன்னுடைய 39 வயதில் உயிர் துறந்த வீரன்.

இந்த மாவீரர்களின் வரிசையில் இருபவர்தான் திலீபன். யார் இந்த திலீபன் ? - விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவனாக இருந்து, இந்திய அரசிடம் தன்னுடைய 5 அம்ச கோரிக்கைகளை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூறி, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து , இந்திய அரசு இவருடைய கோரிக்கைகளை ஏற்காத காரணத்தினால் , உண்ணாவிரதத்தின் 12 வது நாள் முடிவில் தன்னுடைய 24 வது வயதில் உயிரை தமிழ் ஈழ மக்களுக்காக துறந்த ஒரு வீரன்தான் திலீபன். வாஞ்சிநாதன் அவர்கள் எழுதிய " தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள்" என்ற புத்தகத்தை படிக்கும் பொழுது இவரை பற்றிய சில அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன்பு திலீபன் என்பவர் விடுதலை புலிகளின் இயக்கத்தில் இருந்த தலைவர்களுள் ஒருவர் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த புத்தகத்தை படித்த பின்பு இவரை பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாஞ்சிநாதன் அவர்கள் இந்த உண்ணாவிரதத்தின் 12 நாட்களும் திலீபனுடன் கூட இருந்து , திலீபனின் உயிர் அணு அணுவாக அவர் உடலை விட்டு பிரிவதை நேரில் கண்டவர்.

உண்ணாவிரதம் இருப்பது என்பது ஒரு விசயமாக இருந்தாலும், தன்னுடைய 24 வயதில் 5 அம்ச கோரிக்கைகளுக்காக மன உறுதியுடன் இருந்து உயிரை இழப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. அதுவும் 24 வயதில் எங்கிருந்து இவருக்கு இவ்வளவு மன உறுதியும் , மன பக்குவமும் வந்தது என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமான ஒரு விசயமாகவே படுகிறது. பிரபாகரன் அவர்கள் இந்த இளம் வயதில் இவருக்கு அரசியல் பிரிவு தலைவர் பதவியை அளித்திருகிறார் என்றால் இவருடைய தனி தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாஞ்சிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தில், இவரை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். திலீபன் இந்த அற போராட்டத்திற்கு முன்பு , போரில் ஈடுபட்டு தன்னுடைய குடலில் 12 அங்குலத்தை இழந்தவர் என்பதும், ஒரு முறை சிங்கள படையினர் இவரை சூழ்ந்து , கைது செய்யும் பொழுது தனது சாமர்த்தியத்தை பயன்படுத்தி அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதையும் கூறும் பொழுது இவருடைய மன உறுதி, மன பக்குவம், ஆபத்து வரும் பொழுது அதிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்கிற மன முதிர்ச்சி எந்த அளவுக்கு இருந்திருகிறது என்பதை யூகிக்க முடிகிறது.

"உண்ணாவிரதம்" என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்தை இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு முன்பு உண்ணாவிரதம் என்று கூறி இருந்தவர்கள் எல்லாம் , அவ்வபொழுது தண்ணீர் குடிபார்களாம். காந்தி அடிகளும் இதற்கு விதி விலக்கல்ல, அவரும் உண்ணாவிரதத்தின் போது தண்ணீர் குடிபாராம். திலீபனிடம் உடல் மோசமாக இருந்த சமயத்தில், இதை கூறி தண்ணீர் குடிக்க சொன்ன பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் " தண்ணீர் அருந்தி உண்ணாவிரதம் இருப்பது என்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும். அப்படி இருந்து மக்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை. உண்ணாவிரதம் என்றால் தண்ணீரும் இல்லாமல் இருபதுதான் என்று கூறி தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தவர்தான் திலீபன்". அதுமட்டும் அல்லாமல் , உண்ணாவிரத மேடையில் ஏறுவதற்கு முன்பாக வாஞ்சிநாதன் அவர்களிடம் , 5 நாட்கள் கழித்து ஒரு வேலை நான் சுயநினைவு இல்லாமல் போகும் சூழ்நிலையில் எக்காரணம் கொண்டும் எனக்கு மருத்துவ உதவி செய்ய கூடாது என்று கூறி சத்தியம் வாங்கி கொண்டுதான் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினாராம்.

இதை எல்லாம் பார்த்து, சற்று நம்முடைய மன பக்குவத்தை எண்ணி பார்த்தல் , யோசிக்க வேண்டிய விசயாமகவே உள்ளது. நாம் காலேஜ் படிக்கும் பொழுது , பள்ளியில் நாம் நடந்து கொண்ட முறையை யோசித்து பார்க்கும் பொழுது சிரிப்பாகவும் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. காலேஜ் முடித்து வேலையில் சேர்ந்த நாட்களில் , காலேஜ் நாட்களில் எவ்வளவு குழந்தை தனமாக இருந்து இருக்கிறோம் என்று நினைக்க தோன்றுகிறது. இன்னமும் 5 வருடங்கள் கழித்து வேலைக்கு சேர்ந்த நாட்களை யோசித்து பார்த்தால், இவ்வளவு மோசாமாக நாம் இருந்தோமா, நமக்கு மன பக்குவம் இவ்வளவுதான் இருந்ததா என்று நினைக்க தோன்றுகிறது. எப்போதுதான் நாம் திறம் பட முடிவுகளை எடுப்போம்? எப்போது நாம் எடுக்கின்ற முடிவுகள் 5 வருடம் கழித்து யோசித்து பார்க்கும் பொழுது சரி என்று படுகிறதோ அப்போதுதான் நாம் ஓரளவு மனபக்குவதொடுதான் இருக்கிறோம் என்று நம்மை நாமே யூகிக்க முடியும் என்று நினைக்கிறன்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, 24 வயதில் கொள்கைக்காக உயிர் நீத்த திலீபன் ஒரு சகாப்தமே !!!!

இந்த புத்தகத்தை படிக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த நண்பன் வாசுவுக்கு நன்றி :)

Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வி = சமம் இல்லா கல்வி !!!

இப்பொழுது ஆங்காங்கே அனைவராலும் பேசப்படும் , விமர்சிக்க படும் ஒரு செய்தி சமச்சீர் கல்வி. உண்மையில் இது தேவைதானா என்று கேட்கும் பொழுது கண்டிப்பாக தேவையான ஒன்றே. ஏற்றத்தாழ்வு என்ற வார்த்தையை கல்வியில் இருந்தும் ஒழிப்பதற்கு முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் முறை கண்டிப்பாக வரவேற்க தக்கதே.தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே விதமான பாட முறையை பயில வேண்டும் என்பது சரியான ஒன்றே. ஆனால் உண்மையில் இந்த முறையை செயல்படுத்துவதால் எந்த அளவு மாற்றம் இங்கு ஏற்படும் என்று யோசித்து பார்த்தால், பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட போவது இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழ் வழியில் அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவன், முன்பு உள்ள அதே அரசாங்க பள்ளியின் தரம் என்ன உள்ளதோ அதே போலதான் இதையும் படிக்கச் போகிறான். ஆங்கில மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவன், அங்கு உள்ள அதே தரதுடந்தான் இதையும் படிக்கச் போகிறான். ஆக, இதில் என்ன பெரிய மாற்றம் இருக்க போகிறது? பாட முறைகள் மற்றும் சமச்சீர் முறை கொண்டு வருவதினால், அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் உயர போவதும் இல்லை..அதே போல மெட்ரிக் மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் படிக்கும் மாணவனின் தரம் குறைய போவதும் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழ் வழியில் 12 வது படிக்கும் மாணவன், அவனுக்கு உள்ள ஆங்கில பாடத்தில் வரும் essay வை இன்னும் மனபாடம் செய்து கொண்டுதான் தேர்வில் எழுதி கொண்டு இருக்கிறான் அது பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் கூட. இது கேவலமான ஒரு விஷயம் அல்லவா!! அவன் 12 வது முடித்து வெளியே வரும் பொழுது "what is your name ? மற்றும் how old are you ? வை தவிர வேறு ஆங்கில வார்த்தைகளை பேச தெரியாது. ஆனால் ஆங்கில அல்லது மெட்ரிக் பள்ளியில் UKG படிக்கும் குழந்தையிடம் ஆங்கிலம் நம்மால் பேச இயலாது. இது ஒரு உதாரணமே. இது மாதிரி பல உதாரணங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.

முதலில் அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்திட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு அரசாங்க பள்ளியின் உள்ளே சென்று அலசி பாருங்கள் அப்பொழுது அதன் தரம் என்ன என்று தெரியும். அடிப்படை வசதிகள் கூட இருக்காது. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? எந்த ஒழுங்கு முறைகளையும் முக்கால் வாசி ஆசிரியர்கள் யாரும் பின்பற்றுவது இல்லை..இப்படி ஒழுங்கு முறை இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவனின் ஒழுங்கு எப்படி இருக்கும்? இது மாதிரி சில பல காரனங்களுகாகதான் அரசாங்க பள்ளிகளை முற்றிலும் உதறி தள்ளிவிட்டு தனியார் பள்ளிகளில் காலை 3 மணிக்கெல்லாம் LKG சீட்டுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் அவல நிலை இங்கு ஏற்படுகிறது. அது மாதிரி நின்றாலும் அங்கு LKG சீட்டு கிடைபதற்கு பெரும் பாடு பட வேண்டி இருக்கிறது. சிலருக்கு அப்படி நின்றும் அந்த வாய்ப்பு எட்டுவதில்லை.

இந்த மாதிரி சில காரணங்களை பயன்படுத்தி கொண்டு தனியார் பள்ளிகள் நடத்தும் அட்டுழியம் கொடுமையிலும் கொடுமை. சென்னை போன்று மாநகரங்களில் LKG சீட்டுக்கு 50000 ரூபாய் வசூலிக்கும் பள்ளிகள் இருகின்றன. ஒரு பொறியியல் கல்லூரிக்கு கொடுக்கும் கட்டணத்தை LKG சீட்டுக்கு கொடுப்பது மிகவும் கேவலமான ஒரு விசயமாக படுகிறது. அப்படியே கொடுபதாக இருந்தாலும் அது ஒரு upper மிடில் classuku சாத்தியம். மற்றவர்களுக்கு அது ஒரு கேள்வி குறியே? இந்த அவல நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.

தேவை இல்லாததற்கு எல்லாம் மத்திய அரசிடம் நிதி வாங்கும் தமிழக அரசு ,இதற்கு நிதி வாங்கி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு போராட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத இலவசங்களை கொடுக்கும் அரசு, அதை எல்லாம் நிறுத்தி அரசாங்க பள்ளியின் தரத்தினை உயர்த்துவதற்கு செலவிட வேண்டும். தமிழுக்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை ஆங்கிலத்திற்கும் கொடுத்து, ஒரு மெட்ரிக் பள்ளியில் இருந்து வெளி வரும் குழந்தையின் தரத்தோடு , அரசாங்க பள்ளியிலிருந்து வரும் மாணவனின் தரம் சமமாக இருக்க வேண்டும்.

ஆக சமச்சீர் என்பது ஒரு முதல் படியே. மாற்றம் அனைத்து வகையிலும் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான ஒரு மாற்றம் அல்லது ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு கல்வி நிலை தமிழகத்தில் உருவாகும்.

எப்பொழுது அரசாங்க பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் காலையில் 3 மணிக்கு வரிசையில் நிற்கிறார்களோ,அப்பொழுதுதான் சமச்சீர் கல்வி என்ற நிலை முழுமை அடையும் !!!!

Sunday, May 8, 2011

சும்மா...................... டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சென்ற வாரம் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது ஒரு போஸ்டரை பார்த்தேன்...புனித நீராட்டு விழா என்று கூறி அந்த பெண்ணின் போட்டோ வையும் போட்டு இருந்தார்கள்....பார்பதற்கு சற்று வியப்பாகவும், அந்த சிறு பெண்ணை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது....இன்னமும் இது போன்ற கேவலமான சம்பிருதாயங்கள் நமக்கு தேவைதானா என்று....இது ஒரு பெண்ணிற்கு தேவைதான் என்று கூறி 1000 காரணங்கள் கூறினாலும், இந்த காலத்திற்கு இது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக வீட்டில் வைத்து செய்வதை செய்து விட்டு முடித்து கொண்டால் போதுமானது என்றே தோன்றுகிறது. இதை பற்றி ஒரு தெரிந்த நபரிடம் விவாதித்த போது, ஒரு பெண் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பால், ஆகவே செய்து விடுவது நல்லது என்று கூறினார். இப்படி இது போல ஒரு பெண் வளர்ந்த பிறகு எதிர் பார்த்தால் என்றால், நாம் அந்த பெண்ணை சரியான முறையில் வளர்க்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.

இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.

சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.

Wednesday, November 17, 2010

என்னத்த சொல்றது ?







செட்டியாரா ...... அவன் நல்ல விவிரமாதான் இருப்பான். தேவரா...... அவன் நல்ல வீரமாதான் இருப்பான். நாயக்கனா.......அவன் இப்படி இருப்பான்...இந்த ஜாதி காரன் இப்படி இருப்பான் என்று ஒவ்வொரு இனத்தையும் , ஒவ்வெரு ஜாதியையும் பேசுவதை நீங்கள் நடைமுறை வாழ்கையில் கேட்டு இருக்கலாம். அதாவது ஒரு ஜாதியை வைத்து அல்லது ஒரு இனத்தை வைத்து அவன் எப்படி இருப்பான் என்று யூகித்து விடுகின்றோம், அதற்கு ஒரு பழமொழியையும் வைத்து விடுகின்றோம். உண்மையில் அவன் அப்படி இல்லை என்றாலும் ...நீ இப்படிதான் என்று முடிவே செய்து விடுன்கின்றோம். இது உண்மைதானா?..

செட்டியார் இனத்தில் மட்டும்தான் மக்கள் விவரமாக இருகின்றார்களா.. மத்த இனத்து மக்கள் எல்லாம் ஏமாளிகளா...? ....வீரமானவர்கள் அனைவரும் தேவர் இனத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா....மத்த இனத்து மக்கள் எல்லாம் கோழைகளா? இது ஒரு வகையில் பேச்சுக்காக சொல்வது என்றாலும்...சில பேர் இதை உண்மை என்றே நினைத்து கொண்டு அவர்களிடம் உறவாடுவதுதான் பிரச்சினையே......அவன் ஒரு விஷத்தை சாதாரணமாக கூறி இருந்தாலும் ..இவன் இப்படிதான் கூறி இருப்பான் என்று நாமே ஒரு முடிவு செய்து கொள்வதுதான் வேடிக்கையானது. உண்மையில் எவனுடைய குணத்தையும் , அவன் வளர்ந்த மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை வைத்து யூகிகலாமே தவிர...எவனுடைய குணத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பதே உண்மை.

இதே போலதான் பார்பனியத்தை பற்றி பல பேர் சொல்லி கொண்டு இருப்பதையும் , கூறி கொண்டு இருபதையும் பார்த்திருப்போம். பெரியார் சொல்வது போல் அந்த காலத்தில் சரி .....அவர்கள் பார்பனியத்தை வளர்த்தார்கள். உண்மைதான். ஆனால் இந்த காலத்திலும் அவர்கள் இன்னும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்....அந்த இனத்தில் உள்ள மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு இல்லாமலா இருந்து இருக்கும். அல்லது ஐய்யர் இனத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் இந்து மதத்தையும், ஜாதியையும் வளர்கின்றார்களா .....வேறு இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா.....அவர்கள் எல்லாம் ஜாதியை வளர்கவே இல்லையா....? நமக்கு கீழும் ஒரு ஜாதி இருக்கின்றது என்று இருபவர்கள் அனைவரும் ஜாதியை வளர்த்து கொண்டுதான் இருகின்றார்கள்....இது உண்மைதானே.....அந்த இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் அப்படிதான் இருக்க வேண்டும் என்றால் ....பாரதியார் எப்படி வந்தார் பார்பனர் இனத்திலிருந்து.....பெரியார் எப்படி வந்தார் நாயகர் இனத்தில் இருந்து.......அவர்கள் புரட்சி செய்ய வில்லையா?

இதே போன்றுதான் இஸ்லாமிய இனத்தையே கேவல படுத்துவது என்று ஒரு கூட்டமே இருக்கின்றது...... இன்னமும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலையும் இஸ்லாமியார்களை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.....காரணம் அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள மாட்டார்களாம் .....அவர்களும் சுத்தமாக இருக்க மாட்டார்களாம். .என்னமோ கிறிஸ்தவ , இந்து இனத்தவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் நியமான்வர்கள் என்பதை போல.....இந்து மதத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் இயக்கம் இல்லாமலா இருக்கிறது?




ஆக ஒரு தனி பட்ட மனிதரின் நடவடிகையை வைத்து ஒரு இனத்தையே கூறுவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்படிதான் ஒரு முறை நண்பரிடம்......தீவிரவாதம் என்றால் இஸ்லாமிய இனத்தை குரிபிடுகிரிர்களே. ....அப்துல் கலாம் எந்த இனம் என்று கேட்டதற்கு .....அவர் மட்டும் என்ன அணு குண்டு, ராகேட் என்று ஆயுதம் தயாரிபதற்குதானே தலைவராக இருந்தார் என்றார் ............இந்த பதிலுக்கு அப்புறம்....அவரிடம் என்னத்த பேசுவது ?

என்னத்த சொல்றது ?

Thursday, September 16, 2010

எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!







பல மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் மகளை "pre -kg " இல் சேர்த்து விட்டோம் ஒரு நார்மலான பள்ளியில். ஜாதியில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் படிவத்தில் ஜாதி இடத்திற்கு ஒன்றும் போடாமல் விட்டு விட்டோம். அப்போது அவர்கள் பள்ளியில் ஆட்கள் சேர வேண்டும் என்பதற்காக சரி என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சிறிது கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் உங்கள் ஜாதி என்ன என்று நச்சரித்து விட்டார்கள். நாங்களும் ஜாதியில் உடன்பாடு இல்லை , அதனால் ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை. "நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் , நாங்கள் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.

சரி,, கண்டிப்பாக கொண்டுக்கதான் வேண்டுமா என்று தெரிந்த சில வழகரிசர்களிடம் விசாரித்தபோது, அப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இப்போது எல்லா பள்ளிகளிலும் , ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை, கட்டாயமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விட்டால் , ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் என் குழந்தைக்கு ஜாதியை முன் வைத்து கொண்டிருக்கும் எந்த சலுகையும் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று ஒரு எங்களிடம் ஒரு ஐடியாவையும் கொடுத்தார். அதற்கும் ஒத்து வரவில்லை என்றால், வழக்கு போட்டு கொள்ளலாம் என்றார்.

அவர் சொல்வது சரிதான். பள்ளி நிர்வாகம் ஒத்து வரவில்லை என்றால் வழக்கு தொடரலாம். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து அந்த பள்ளியும் அதே மாதிரி கேட்டு விட்டால் அந்த பள்ளியில் வழக்கு தொடர முடியும். ஆனால் அதற்கு பின்பு நமது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க முடியுமா என்று நினைத்தால், கண்டிப்பாக முடியாது.பிரச்சினைதான் வளரும். ஜாதியிலும் உடன்பாடு இல்லை, ஆனால் பள்ளியிலும் சேர்கதான் வேண்டும். என்ன செய்வது என்று தெரிய வில்லை.ஒன்று சரி என்று ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் நமது கொள்கை இதில் அடி பட்டு விடும். இல்லை கொள்கைதான் முக்கியம் என்று நினைத்தால் , குழந்தைகளை வீட்டில் வைத்து நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல..என்னதான் செய்வது......? ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள், இதில் கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் எல்லாம் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டார்கள் என்று தெரிந்தால் நமக்கும் சிறிது புண்ணியமாக இருக்கும்..........

ஜாதியை தெரிவிப்பதினால், தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைப்பது உண்மைதான். இவ்வாறு தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து படித்து, நல்ல வேளையிலும் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு , தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று நினைகிரார்களா என்றால்.....இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்(ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள்). இந்த சலுகையினால் ஓரளவு தாழ்ந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் முன்னேறி கொண்டு இருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தோசம் முன்னேறட்டும்.பல நூற்றாண்டுகள் அடிமைகளாக , படிப்பறிவே இல்லாமல் இருந்தவர்கள் படிக்கதான் வேண்டும்...எல்லா சமுதாயரையும் போல முன்னேறதான் வேண்டும்.

ஆனால், நம்முடைய எண்ணம் ஜாதி என்ற ஒரு நிலையே இருக்க கூடாது என்பதுதான். ஆக இவ்வாறு சலுகைகளை பெற்று படித்து வந்தவர்கள் , தன்னுடைய அடுத்த வம்சதினற்கு ஜாதியை வைத்து வரும் எந்த சலுகையும் வேண்டாம் என்று உதறி தள்ளினால் ஓரளவு ஜாதி என்ற நிலையை குறைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத்தான் நான் கருதுகிறேன். பள்ளியில் ஜாதியை கேட்பது ஒரு விதத்தில் சலுகைகளுகாகதான் என்பதால், ஓரளவு முன்னேறியவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று ஜாதியை உதறி தள்ளினால், ஜாதி என்ற குறியீடு ஓரளவு நீக்க படும் , பள்ளி நிர்வாகமும் இதற்கு ஏதாவது வழி செய்யும்.

ஜாதி என்ற ஒரு நிலையை பள்ளியிலேயே நிறுத்தி விட்டோம் என்றால் ஓரளவு ஜாதியின் பயன் பாட்டை குறைத்து விடலாம். ஆனால் இதற்கு இந்த சமுதாயமும் , அரசாங்கமும் வழி விடுமா என்று யோசித்தால் கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இதை குறைபதற்கு, சிவப்பதிகாரம் படத்தில் சொல்வது போல " எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!"

Friday, July 23, 2010

அற்பங்களின் தேசபற்று





எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் தொலை காட்சியில் தேசிய கீதம் ஓடினால் கூட எழுந்து நின்று தேசத்தின் மீது பற்றை தெரிவிக்கும் பழக்கம் உடையவன். எனக்கு இந்த விஷயம் தெரிந்த போது சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருந்தது. உண்மையில் தேச பற்று என்பது தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதிலும், மூவர்ண கொடியின் சிறப்பை சொல்வதிலும், தேச தந்தை யார் என்று சொல்வதிலும் , தேசிய கீதத்தை யார் இயற்றினார்கள் என்று சொல்வதிலும் தான் இருக்கிறது என்றால் அப்பேற்பட்ட தேச பற்று எனக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய பேர் தேச பற்று என்பது கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதோடு முடிந்து விடுகிறது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் உண்மையாக அப்பேற்பட்ட சமுதாயத்தில்தான் நாம் வசித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

நம்மை நாமே சற்று கேட்டு கொண்டால், உண்மையாக தேச பற்று என்பது நம்மிடம் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். ராணுவத்தில் ஆள் எடுக்கும் பொழுது கூட, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு , அங்கு பிடித்து இங்கு பிடித்து ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விடுகிறோம், விவரமே தெரியாத வயதில். அந்த 16 , 17 வயதில் உண்மையிலேயே தேச பற்று இருக்குமா என்று கேட்டால் சற்று கடினமே.

ஒரு விஷயம் புரிய வில்லை. நாம் வசிக்கும் வீடு சரி இல்லை என்றால் , அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுகிறோம். நான் வசிக்கும் ஏரியா மக்களே சரி இல்லை என்றால் , அந்த ஏரியா சரி இல்லை என்று கூறி வேறு ஊருக்கு சென்று விடுகிறோம். நாம் வேலை பார்க்கும் இடத்தில், சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்றாலோ அல்லது மேனேஜர் சரி இல்லை என்றாலோ , அந்த வேலையை விட்டே சென்று விடுகிறோம். இதுதான் உண்மையும் கூட. ஆக, நான் வசிக்கும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ள மக்கள் எனப்படும் சமுதாயம் மிகவும் முக்கியம். அதை வைத்துதான் ஒரு இடத்தையே நாம் தீர்மானம் செய்கின்றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது, உண்மையில் நம்மை சுற்றி உள்ள சமுதாயம் சரியாகதான் இருக்கிறதா ?

எப்பேர்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? சற்று சிந்தித்து பாப்போம்.

*) தமிழ் நாட்டை எடுத்து கொண்டால், காவிரி பிரச்சினை. மும்பையை எடுத்து கொண்டால் மராட்டியர் பிரச்சினை. இன்னும் தமிழ் நாட்டை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிடமும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

*) இன்னும் சற்று உள்ளே சென்றால், முக்கியமாக ஜாதி பிரச்சினை, மத பிரச்சினை, இன பிரச்சினை.

சரி நமது அன்றாட வாழ்கையை எடுத்து கொள்வோம்....

சரி ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி , ஆட்டோ வை பிடிக்க அழைத்தோம் என்றால், அவர்கள் கேட்கும் பணம்........இரண்டு மூன்று தடவை அவர்கள் ஆட்டோவில் சென்றால் அந்த ஆட்டோவையே வாங்கி விடலாம். அந்த அளவிற்கு இருக்கிறது. ஆட்டோவில் ஏறினால், மீட்டர் போட வேண்டும். எத்தனை ஆட்டோவில் மீட்டர் இருக்கிறது..? அப்படியே அவரை போட சொன்னோம் என்றால், அவர்கள் நம்மை கேனயனை விட கேவலமாக பார்த்து திட்டி , ஆட்டோவை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.

நம்மிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது என்றால், இந்த மாநகரத்தில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வத்திற்குள், எவ்வளவு பிரச்சினை? முன்னாடி வாகனத்தில் செல்பவர்கள், பின்னாடி யார் வருகிறார்கள் என்று சற்றிலும் சிந்திக்காமல் எச்சிலை உமிழ்ந்து விட்டு செல்வார்கள்...இது முன்னாடி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அல்ல....பஸ்ஸில் செல்பவர்களும் இப்படிதான் . இது மட்டும் அல்ல சிகரெட் சாம்பலை தட்டுவது..அல்லது அப்படியே அனைக்காமல் நடு ரோட்டில் போடுவது போன்ற பல கொடுமைகள்.

சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், நம் மக்களிடம் இல்லாதது சுய ஒழுங்குதான். சரி....இந்த சுய ஒழுங்கை பாது காக்க நம்மிடம் உள்ள போலீஸ் காரர்கள் சுய ஒழுங்கோடுதான் இருக்கிறார்களா....? அதுவும் இல்லை. எங்கும் லஞ்சம்....எதிலும் லஞ்சம்.... ஏன்? போலீஸ் வேளையில் சேர்வதிலும் லஞ்சம்.....பின்பு அவர்களிடம் எங்கு நாம் சுய ஒழுங்கை பாது காக்க சொல்வது......வாய்ப்பே இல்லை.......சரி....அங்குதான் இல்லை....நீதிமன்றம் என்று சென்று நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் , நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள். எங்குதான் செல்வது......இவர்களிடம் கேட்டால் தேச பற்று என்பார்கள்..........இப்படி இருக்கும் சமுதாயத்தில் தேசபற்று எப்படி வரும் ?

ஒரு மாதத்திற்கு முன்பு , ஒரு நில வழக்கு முடிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நியாயமான வக்கீலிடம் சென்றால், அவர் விசாரித்து விட்டு உங்கள் நிலையில் நியாயம் இருக்கிறது என்றாலும் ....வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும் என்று சொல்ல என்னால் முடியாது....ஏன் என்றால் ஏன் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை....நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.....போராடுவோம்....பார்போம் என்று கூறி விட்டார்.....இப்பேற்பட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் இருப்பது எல்லாம் தேச பற்று என்றால் ....தேச பற்றை என்னவென்று சொல்வது......?

இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எடுதால் கூட , நம்மை சுற்றி உள்ளவர்கள் பலர் அலுப்பைகள் தான். இப்பேற்பட்ட அலுபைகள் இருக்கும் நாட்டில் , தேச பற்று என்பது எந்த நிலையில் இருக்கும்...அப்படியே இருந்தாலும் ,இந்த அலுபைகளிடமிருந்து எந்த அளவு தேச பற்று இருக்கும்? கேள்வி குறியே !!!!!!!!

ஜப்பான் நாடு சிறிய நாடாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் சுய ஒழுங்கே.....அந்த நாட்டில் எனக்கு சில வருடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்த்த ஒரு சம்பவத்தோடு முடிக்கிறேன்......இங்கெல்லாம் நாம் சரக்கு அடித்து விட்டால் , அம்மா , அக்க, தங்கையை தவிர மற்ற அனைவரையும் கையை பிடுத்து இழுத்து பார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். யாரையாவது வம்பு இழுத்து ஆக வேண்டும் .....அப்போதுதான் நமக்கு மனது சாந்தி அடையும்.....ஆனால் அங்கு அப்படி இல்லை....சரக்கு அடித்தாலும் அந்த மப்பிலும் அடுத்தவர்களை வம்பு இழுக்க மாட்டார்கள். ஒரு முறை வேலை காரணமாக வீட்டுக்கு கிளம்ப மணி அதிகாலை 2 ஆகிவிட்டது. வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன்....வரும் வழியில் ஒரு சிக்னல். என் முன்பு புல் மப்பில் ஒரு 25 வயது உள்ள ஆள் ஒருவர் சென்று கொண்டு இருந்தார் .....ரோட்டில் யாரும் இல்லை....அதனால் சிக்னலை கிராஸ் செய்து விடலாம் என்று நினைத்து முன்னோக்கி சென்று கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கு முன்பு சென்ற குடிமகன் அந்த மப்பிலும் கிரீன் சிக்னலுக்கு காத்து கொண்டு இருந்தார்..சரி என்று நானும் நின்று விட்டேன்......அதிகாலை 2 மணிக்கு.....இங்கு காலை 10 மணிக்கே சிக்னலை மதிக்க மாட்டோம்.....இதுதான் சுய ஒழுங்கு.

ஆக , தேச பற்று என்று சொல்லி ஊரை ஏமாற்றாமல் , ஏதாவது மாறுவதற்கு வழி செய்வோம்......

முன்பெல்லாம் கிரிக்கெட்டில் இந்திய ஆடினால் , நாம் வின் பண்ண வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்....ஆனால் இப்போதெல்லம் அந்த மாதிரி எண்ணம் கனவில் கூட வருவது இல்லை.......

Sunday, June 6, 2010

ஏண்டா............ நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா?



சமீபத்தில் திருச்சிக்கு சென்று இருந்த போது உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் ஒரு கிறிஸ்தவர்.கல்லறையில் சடலத்தை வைத்து விட்டு , செபங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, குழி தோண்டும் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தது.ஒரு வழியாக எல்லாம் முடிந்து, புதைக்க வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கையில், அங்கு கூடி இருந்தவர்கள் செய்த பஞ்சாயத்துதான் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

- இறந்தவர் பெண் என்பதால், ஒருவர் அவருடைய மூத்த பையனை கூப்பிட்டு போய் மொட்டை அடித்து விட்டு வா என்று கூறினார். இன்னொருவர், அதெல்லாம் தேவை இல்லை....உண்மையான கிறிஸ்தவன் மொட்டை அடிக்க மாட்டான் என்று கூற, இருவருக்கும் இடையே நடந்த அந்த பார்வை பரிமாற்றம் அங்கு அடித்த மதிய வெயிலை விட கொஞ்சம் உஷ்ணம் அதிகமாகவே இருந்தது.
- ஒரு வழியாக அந்த பையன் மொட்டை அடித்து விடு வர, பார்க்கிறவர்கள் அனைவரையும் முகத்தை பார்க்க சொல்லி விட்டு, சவ பெட்டியை மூடி ஆணி அடிக்க ஆரம்பித்தார் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர். அப்போது மீண்டும் அந்த உண்மையான கிறிஸ்தவன் அந்த ஊழியரிடம், எதுவாக இருந்தாலும் ஒத்தை படையில் ஆணி அடித்து முடித்து விடுங்கள், இரட்டை படை வேண்டாம் என்று கூற, அப்போது அடித்து இருந்த ஆணி 8 . சொல்லவா வேண்டும்....உண்மையான கிறிஸ்தவன் மீண்டும் வெகுண்டு எழுந்து, இன்னொரு ஆணியை அடித்தேஆக வேண்டும் என்று கூறி, 9 ஆணியை வைத்து ஒத்த
படையில் அடித்து முடித்தார்கள்.
- ஒரு வழியாக பெட்டியை கீழே இறக்கி, மண்ணை போட்டு மூடி, தண்ணியை ஊற்றி மொழுகி, ஒரு சிலுவையையும் சொருகி முடிக்க...அடுத்து.....பால் தெளிக்கும் படலம் ஆரம்பித்தது. மீண்டும் அந்த பையனை கூப்பிட்டு பால் தெளிக்க சொல்ல, அவன் பாலை தெளித்து கையை சற்று லேசாக உதறினான். அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து, ஏன் இப்படி கையை உதறினாய்? அப்படி எல்லாம் உதற கூடாது என்று சொல்லி ஆளாளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிந்து அந்த பையனுக்கு ( 15 வயது இருக்கும்) , அம்மா இறந்த வலியை விட , இவர்கள் செய்த கூத்தில் ஏற்பட்ட வலிதான் அதிகமாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

என்னிடம் இருந்த கேள்வி இதுதான்......
- மொட்டை அடிப்பதற்கும் , இறந்ததற்கும் என்ன சம்பந்தம்? முடியை கொடுப்பது ஒரு தியாகமா? அல்லது வருத்தத்தை மொட்டை அடித்துதான் காட்ட வேண்டுமா?
- பாலை தெளித்து உதறியது ஒரு குற்றமா? இன்னும் இது மாதிரியான சம்பிருதாயங்கள் இருக்கத்தான் வேண்டுமா? உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறும் இவர்கள், பைபிள் புத்தகத்தில் இருந்து , இது மாதிரி செய்ய சொல்லி இருக்கிறது என்று காட்ட முடியுமா....?

உண்மையில் இங்கு இருபவர்கள் எல்லாம் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? அப்படி உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டால் , திருச்சியில்
இரண்டு விதமான கல்லறைகள் இருப்பதற்கான காரணத்தை கூற முடியுமா? சில பேருக்கு தெரிந்து இருக்கும், சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை...திருச்சியில் இரண்டு கல்லறைகள் உள்ளன..ஒன்று உயர்ந்த சாதி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ..மற்றொன்று தாழ்ந்த சாதி உள்ளவர்களுக்கு. ...ஒருவன் இறந்து கல்லறையில் வைக்கும் போது கூட இந்த சாதி பிரிவினை தேவைதானா? ஒரு முறை திருமாவளவன் அவர்கள் இதை அறிந்து போராட்டம் நடத்தியதாக நியாபகம்.....அவ்வளவுதான்....இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டு ஜாதியையும் , கல்யாணத்திற்கு முன்பு ஜோசியம் பார்க்கும் இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்றால் ...அவர்களிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றுதான்....
இயேசு கிறிஸ்து என்ன ஜாதி ? என்ன கோத்ரம்? என்ன நட்சத்திரம்?




- முக்கியமாக ....அது ஒன்ன ஒத்த படை, இரட்டை படை? இறந்ததற்கு மட்டும் அல்ல....கல்யாணத்திற்கு பொண்ணு பார்பதிலும் கூட , மாப்ளைக்கு ஒத்த படையில்தான் வயது இருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை இங்கு நிலவி கொண்டுதான் இருக்கிறது. கல்யாணத்திற்கு மொய் வைப்பது கூட (101 , 1001 ) இந்த காரனதில்தானோ?
- ஒத்த படை என்று கூறும் ஒருவர் பிறந்தது...இருவர் இணைந்ததால்தான்....அது இரட்டை படை.
- தாய் வயிற்றில் இவர்கள் இருக்கும் மாதம் 10 .....அதுவும் இரட்டை படை.
இப்படி இருக்க.....எங்கிருந்து வந்தது இந்த ஒத்த படை.......தெரிந்தவர்கள்......பதில் இருந்தால் சொல்லவும்.....

ஒன்று மட்டும் தெரிகிறது.......1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது...........
சரி புரகிறது....ஒத்த படையிலேயே சொல்ற்கிறேன்......1001 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.........

Sunday, January 24, 2010

ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்



இன்றைய கால கட்டதில் நிறைய பேர் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கூறி கொண்டு "பிராடு மைன்ட்" ஆகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு வகை. இன்னும் சில பேர் இருப்பார்கள். அதாவது ஒரு தவறை ( என்று உலகம் சொல்வதை) யாருக்கும் தெரியாமல் செய்தால் அது தவறு இல்லை. ஆனால் பலருக்கு முன்பு செய்து விட்டால் அது தவறு என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். பொதுவாக இம்மாதிரியாக இருபவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உண்மையில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக அல்லது பெருமைக்காக நாங்கள் எல்லாம் "ப்ராட் மைன்ட்" என்று திரிபவர்கள். உதாரணத்திற்கு.......






- Pub மற்றும் பார் (bar ) போன்ற இடங்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அம்மாதிரியான இடத்திற்கு செல்பவர்களை பொதுவாக இவ்வுலகம் சரியான மதிப்போடு பார்ப்பது இல்லை. காரணம் கேட்டால், pubku சென்று தண்ணி அடிகிறார்கள் என்றும் , பெண்களோடு அப்படி, இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி இவர்கள் இங்கு certificate கொடுப்பார்கள். இவர்கள் சொல்வது சரியா அல்லது தவறா என்பது என் கேள்வி அல்ல? இதை சொல்லும் ஆட்கள் சரியானவர்களா என்பது தான் என் கேள்வி? இவர்கள் இப்படி வாய் கிழிய தம்பட்டம் அடித்து விட்டு , வீட்டில் சென்று யாருக்கும் தெரியாமல் கதவை சாதி கொண்டு மேட்டர் படம் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லது இதே செயலை வேறு எங்கேயாவது செய்து கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்து இம்மாதிரியான அனைத்து வக்கிர குணங்களையும் மனதில் வைத்து கொண்டு திரிவதை விட , pub அல்லது வேறு இடத்திற்கு சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மேல். எனக்கு தெரிந்து இது தவறும் இல்லை , இந்த இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.





- இன்னும் சில பேர் இருப்பார்கள். அழகான பெண்களை பார்ப்பது பிடிக்கும் , சைட் அடிப்பது பிடிக்கும் என்று சொல்லி கொண்டு கண்ணாலேயே கற்பழித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். இதை சொல்லிவிட்டு தங்களை "ப்ராட் மைன்ட்" என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
*) இவரும், இவரது மனைவியும் எங்கேயாவது செல்லும் போது, இவரோட மனைவியை யாரவது இது மாதிரி வலுவாக சைட் அடித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று சொன்னால் ஒத்து கொள்வார்களா. அல்லது இதே நிலை இவருடைய தங்கையை பார்த்து யாரவது சொன்னால் ஏற்று கொள்வார்களா.

ஏன் இந்த விளம்பரம் ? பார்த்தால் பார்த்தேன் என்று ஒத்து கொள்ள வேண்டியதுதானே.....எனக்கு தெரிந்து ஒரு திரைப்பட பாட்டில் வருவது போல, "ஆண்களில் ராமன் கிடையாது" என்பது உண்மைதான். ( ஆனால் உண்மையில் ராமன் அப்படிதானா என்று சீதையைத்தான் கேட்க வேண்டும் )

- போன வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அவர் மின்னஞ்சலில் அனைவர்க்கும் அழைப்பிதழை அனுப்பினார். அந்த அழைப்பிதழுக்கு பெயராக (1 .jpg ) என்று அனுப்பி இருந்தார். இதில் ஒரு தவறும் இல்லை. சில பேர் இதிலும் ஒரு குறை கூறி கொண்டு " அது எப்படி 1 .jpg என்று வைக்கலாம் . invitation .jpg " என்றுதான் வைத்து இருக்க வேண்டும் என்று அதிலும் குறை கூறி கொண்டு இருந்தார்கள். எனக்கு இதை கேட்டவுடன் ஜீரணிக்கவே முடிய வில்லை. இதில் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியுமா? ஆனால் இவர்கள் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கொண்டு இருப்பார்கள். என்ன சொல்வது என்றே எனக்கு தெரிய வில்லை.

உண்மையில் .......... ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்

Monday, January 11, 2010

sex and resolution

இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே பார்த்த நூறு பேரில் 40 பேர் கேட்கும் கேள்வி ...இந்த வருஷம் என்ன resolution எடுத்து இருக்கீங்க அப்படிங்கிறதுதான்?
உண்மையை சொல்ல போனால் இந்த வருஷம் மட்டும் அல்ல எல்லா வருசமும் பிறக்கும் போது கேட்கபடுகின்ற சில கேள்விகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்........ அதே போன்று எல்லா வருடமும் போல இந்த வருசமும் அதே பதிலைத்தான் சொல்ல போகிறோம்.

- தம் அடிகிரத குறைக்கணும்
- தண்ணி அடிகிரத குறைக்கணும்
- தொப்பைய குறைக்கணும்

இது மாதிரி பல. என்னைய கேட்டா இது மாதிரி சொல்றவங்க வாயதான் குறைக்கணும் முதல்ல. ஏன் என்றால் , இது மாதிரி சொல்றவங்க சொல்லிகிட்டுதான் இருப்பாங்களே தவிர செய்வதாக தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் , மேலே சொன்ன விசயங்களை கொஞ்சம் முயன்றால் செய்து விடலாம். ஆனால் முடியாத சில காரியங்கள், நம் உள்மனதில் ஆணி வைத்து அடித்ததை போன்ற சில விஷயங்கள் மனதை விட்டு அகறாமல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அது மாதிரியான விஷயங்கள் நமக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. அது போன்ற சில விசயங்களை நாம் புது வருடம் அதுவுமாக அகற்ற நினைத்தால் நலம் என்று தோன்றுகிறது. அது போன்ற விசயங்களில் சில ..................................

1 ) தற்போது நடந்த திருநெல்வேலி சம்பவத்தை எடுத்து கொள்வோம். அனைவரும் அந்த அரசியல்வாதிகளையே குறை கூறினாலும், மக்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் செய்து இருக்கலாமே. அவர்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அடுத்தவர்களுக்கு நாம் மற்ற காரியத்தில் உதவி செய்யாமல் இருந்தாலும் , உயிர் போகும் தருவாயிலாவது உதவி செய்து இருக்கலாம். இது மாதிரி காரியங்களில் நாம் உதவி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கமும் ஒரு காரணமாகவே அமைகிறது. அப்படி யாரவது உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவரை அலையவிட்டு , கேள்வி கணைகளை அவரிடம் தொடுத்து , அடுத்த தடவை அவர் நினைத்தாலும் அவரை செய்யவிடாமல் தடுப்பது , இந்த அரசாங்கமும் , காவல்துறையுமே. இனி வரும் காலங்களில் அரசாங்கம் , இது மாதிரி அவசர காலங்களில் உதவுபவர்களை , எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம் என்று கூறினால் , இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழி என்று தோன்றுகிறது.

2 ) அலுவலங்களில் நடக்கும் அரசியல். அரசியல் இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலங்களும் அதற்கு விதி விலக்கல்ல. சில பேர் இன்னும் , தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அடுத்தவர் வேலைக்கு ஆப்பு வைப்பது போன்ற சில கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவர்கள் இப்படி செய்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

3 ) எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும், உலகமே தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும் , இன்னமும் கேவலமான விஷயங்கள் நமக்கு தெரிந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாணத்தின் போது வாய்கூசாமல் கேட்கப்படும் வரதட்சணை பற்றிதான் சொல்கிறேன். சில பேர் சொல்வது உண்டு, இப்போது உள்ள generation மாறி விட்டது.மாப்பிள்ளை கேட்பது இல்லை, அவர்களுடைய தாய் , தந்தை தான் கேட்கிறார்கள் என்று. தெரியாமல் தான் கேட்கிறேன் ? இதுமாதிரி சொல்கிறவர்கள் அனைவரும் , தன்னுடைய தாய் தந்தையை கேட்டுதான் அனைத்து காரியத்தையும் செய்கிறார்களா ? கேட்காமல் தடுக்கவேண்டும் என்றால் தாரளமாக தடுக்கலாம். இது மாதிரி கேவலமான மக்களை வைத்து கொண்டு இன்னும் இந்தியா வல்லரசு ஆக போகிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ... காமெடியாகத்தான் இருக்கிறது.

தினமலர் நாளிதழில் அந்துமணி பக்கதில் ஒரு பெண் , அவருக்கு வரதட்சணை சம்பந்தமாக எழுதிய ஒரு கடிதத்தில் கிழித்து உள்ளார். கட்டாயமாக படிக்கவும்.

http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1135

4 ) நமக்கு தெரிந்து , நம்முடைய சொந்தங்கள் அல்லது நம்முடைய நண்பர்கள் கஷ்ட படும்பொழுது , அவர்களுக்கு பணம் தேவை என்று தெரிந்தும், "கொடுத்தால் வராது" என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் "கோவில்" என்று யாரவது கேட்டால், அதற்காக முழு பணத்தையும் தருவார்கள் . எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிலிக்கு சென்று ஆயிர, லட்ச, கோடி ரூபாய்களை உண்டியலில் செலுத்தும் உள்ளங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. கேட்டால் சாமி குத்தம் ஆகி விடுமாம். சில பேர் நன்கொடை என்று கோவிலுக்கு கொடுப்பார்கள், காரணம் விளம்பரம் ஒன்று மட்டுமே. இன்னமும் சில கோவில்களில் , "உபயம்" என்று Fan , ஸ்பீக்கர் என்று பல இடங்களில் இவர்களுடைய பெயர்கள் பொரித்து இருப்பதாய் பார்க்கலாம்.

இது மாதிரியான கேவலமான புத்தி உடைய அல்பமானவர்கள் , நம்மில் பலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றோம். முடிந்த அளவுக்கு இது போன்ற விசயங்களை புது வருடம் அதுவுமாக மாற்ற முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.

புரிகிறது .....செக்ஸ் என்று சொல்லிவிட்டு அந்த விஷயத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறேனா......கீழே உள்ள லிங்கை படிக்கவும். நம்மில் உள்ள நாமை பிரித்து மேய்ந்து இருக்கிறார் ஒருவர். புதிய பதிவர்தான். படித்து தங்களுடைய பொன்னான கருத்துகளை முடிந்த அளவுக்கு இடவும்....


http://piesasu.blogspot.com/

Saturday, December 5, 2009

அப்படி இருந்தால் அவர் கடவுளா?

சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவனாக வளர்ந்தவன் நான். ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் என் அப்பா இந்து , அம்மா கிறிஸ்டின். அம்மாவுக்கு பற்று கிறிஸ்தவ மதத்தில் அதிகம் என்பதால் நானும் இந்த மததிலேய வளர்த்தேன் , தாயை போல பிள்ளை என்பது போல. ஆனால் சமீப காலமாக இந்த மதத்திலும் சரி, இல்லை எந்த மதத்திலும் சரி , மனது சரியாக ஒத்து போவது இல்லை. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் , புது நன்மை என்ற சடங்கை பற்றி தெரிந்து இருக்கும்.மற்ற மதத்தவருக்கும் இதை பற்றிய தெளிவு இருக்கும் என்று நினைக்கிறன். ஒரு சின்ன அப்பத்தை பிட்டு நாக்கில் வைப்பார்கள், இதைதான் புது நன்மை என்று குறிபிடுவார்கள். நான் புது நன்மை வாங்கிய பிறகு, சில நேரம் வாங்குவேன் , சில சமயம் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாங்காத நாட்களில் என் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்வேன். அதனால் பிடிக்கிறதோ இல்லையோ , இதை வாங்கி விடுவதை ஒரு கடமையாக செய்து விடுவேன்.

இங்குதான் சங்கடமே ஆரம்பிக்கிறது , அந்த அப்பத்தை கொடுக்கும் முன்பு கோவிலில் , கிறிஸ்தவர்கள் மட்டுமே இதை வாங்க வேண்டும் என்று குறிபிடுவார்கள்.
- ஏன் இதை கிறிஸ்தவர்கள் மட்டும் வாங்க வேண்டும்?
- மற்ற மதத்தினர் வாங்கினால் என்ன தவறு ? அல்லது கொடுபதினால் என்ன தவறு?
- இயேசு கோபித்து கொள்வாரா? அல்லது இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தானா? அப்படி இருந்தால் அவர் கடவுளா?

இதை கொடுக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆனால் கொடுபதினால் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து. அந்த காலத்தில் இயேசு, சில மீன் துண்டுகளை வைத்து ஊருக்கே பகிர்ந்து கொடுத்தார் என்று விவிலியத்தில் சொல்வது உண்டு. அப்படி இருக்க, இந்த சிறு அப்பத்தை கூட மற்றவர்களுக்கு பகிர்த்து கொடுக்காத இந்த மத கோட்பாடுகள் ஏற்று கொள்ள படாத ஒன்றாகவே எனக்கு படுகிறது.

பிரச்சினையே இங்குதான் இருக்கிறது. நாம் கடவுளை கடவுளாக பார்ப்பதே இல்லை. அவரையும் மனிதராகத்தான் நாம் பார்க்கிறோம். மனிதராக பார்பதினால்தான், இன்னமும் தேவை இல்லாமல் நம்மை வருத்தி, அவரிடம் நாம் , எனக்கு இதை செய், அதை செய் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். மனிதரிடம்தான் இந்த பண்பு உண்டு. உனக்கு நான் அதை செய்தேனே, எனக்கு நீ இதை கூட செய்ய மாட்டாயா? என்றெல்லாம் நாம் கேட்பது உண்டு.

இன்னமும் வேளாங்கண்ணி கோவிலில் சென்று பார்த்தீர்களேயானால் , முட்டி போட்டு ஒரு இடத்திலிருந்து கோவிலை சென்று அடையும் வரை, மணலில் தன்னை வருத்தி, வேண்டுதல் நிறைவேற்றி கொண்டு இருப்பார்கள் அல்லது தனக்கு ஏதாவது கேட்டு கொண்டு இருப்பார்கள். கோவிலை சென்று அடையும் பொழுது அவர்கள் முட்டியில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும். இந்த வேதனையில் இருந்து வெளிவர அவர்களுக்கு எப்படியும் மாத கணக்கு ஆகும். இப்படி எல்லாம் வேண்டுதல் கடவுள் கேட்கிறாரா? அல்லது அப்படி வருத்தி ஏதாவது செய்தால்தான் கடவுள் நமக்கு செய்வாரா? அப்படி செய்தால் அவர் கடவுளா? . இதை பற்றி நண்பர் joe கூட ஒரு பதிவு எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்தவ மதத்தில் மட்டும் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது இல்லை..எல்லா மதத்திலும் இப்படி தேவை இல்லாத இந்த அநியாங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. என அண்ணனின் நண்பர் ஒருவர், அவருக்கு ஒரு தேவை நடக்க வேண்டும் என்று நினைத்து , ஒரு இந்து கோவிலுக்கு சென்று தன கையில் சூடத்தை ஏற்றி அது அனையும்வரை கையில் ஏந்தி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு அவர் வேண்டியது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய அன்றாட வேலைகள் ஒன்று கூட நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு "நம்பிக்கை" தான் என்று கூறினார். இதன் பெயர்தான் நம்பிக்கையா? எனக்கு புரியவில்லை!!!!!!.

நான் முன்பே கூறியது போல, எனக்கு எந்த மதத்திலும் இப்பொழுது நம்பிக்கை இல்லை. என் அப்பாவின் மதமான இந்து மதத்தில் முற்றிலுமாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் கீழ்வரும் இந்த மூன்று காரணங்கள் தான்.
1 ) மத சடங்குகள்.
2 ) கோட்பாடுகள்.
3 ) முக்கியமாக ஜாதி.

ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை என்பதே எனது கருத்து. தாயின் முன் , அவளுடைய அனைத்து குழந்தைகளுமே அவளுக்கு சமம்தான். அப்படி இருக்க, அது எப்படி ஒரு மதத்தில் இருந்தே ஒருவரை உயர்ந்தவராகவும் , மற்றவரை தாழ்ந்தவராகவும் பார்க்க முடியும். எனக்கு தெரிந்து கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அப்படி இருக்க வாயப்பு இல்லை. இடைசெருகல்கல்தான் அனைத்து மதத்திலும் அதிகமாக இருக்கின்றன. இது அனைவர்க்கும் தெரியும். ஆனால் யாரும் அதை ஏற்று கொள்வதும் இல்லை, அல்லது கண்டு கொள்வதும் இல்லை.

உதாரணத்திற்கு ஜாதி இல்லை என்பது அனைவர்க்கும் தெரியும், காரணம் , ஒருவர் பல நாள் நமக்கு கீழ் வேலை பார்த்து விட்டு , திடிரென்று நமக்கு நிகராக வருவதை, நம்மால் ஏற்று கொள்ள முடிவது இல்லை. அதேதான் ஜாதியிலும் நடக்கிறது. இவ்வளவு நாள் நம்மை விட தாழ்ந்த ஜாதி என்று இருந்தவன், திடிரென்று நமக்கு நிகர் என்று சொல்லி கொள்வதை யாரும் விரும்புவது இல்லை. அதனால்தான் ஒவ்வொரு ஜாதியினரும், இந்த ஜாதி நம்மை விட தாழ்ந்தது என்று சொல்லி கொண்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் தாழ்த்த ஜாதியில் கூட இந்த இந்த பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் உள்ளவர்கள், இவன் நம்மை விட தாழ்ந்தவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க ஜாதி எப்படி ஒழியும்? முடியாத செயல் என்றே தோன்றுகிறது. இந்த காலத்திலும் ஜாதியை வைத்து கொண்டு, கோவிலுக்கு மற்றும் பல இடங்களில் அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது ஏற்று கொள்ள முடியாததாகவே இருக்கிறது........அங்கீகாரம் கிடைக்காத எந்த இடத்திலும் நாம் எதிர்த்து போராட வேண்டும்.........

முன்பே சொன்னது போல, ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை. அதனால் தான் அம்பேத்கர் கூட, கடைசி நாட்களில் புத்த மதத்தை தழுவினார். ஆக, இடை செருகல்களை அகற்றுவோம். தேவை இல்லாததை வளர்த்து விடாமல் , மனிதத்தை வளர்ப்போம்.

Sunday, November 8, 2009

விடை தெரியாத கேள்விகள்




சில நேரங்களில் நாம் பேசுவது ஒன்றாக இருக்கும், அதையே நாம் செய்வது ஒன்றாக இருக்கும். அது மாதிரியான விசயங்களில் ஒரு சில.

ஆணாதிக்க மனோபாவம் உடையவர்களை பற்றி எடுத்துகொள்வோம்.
- அவர்களிடம் சென்று அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என்று கேட்டால் , அம்மாதான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.
- அவர்களுக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருந்தால் , தங்கை மீது அளவுக்கு மீறிய பாசத்தை வைத்து இருப்பார்கள்.
- பருவ காலத்தில் , ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தும் இருப்பார்கள் ( அந்த பெண் மதிக்காத போது கூட ).
- அவர்களுக்கு திருமணம் ஆகியது என்றால் , மனைவி சொல்வதை மட்டும் கேட்டு கொண்டி இருப்பார்கள் (மற்றவர்களை மதிக்காமல் ).
- அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது என்றால் , அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் அதன் மீது அளவுக்கடந்த பாசத்தை வைத்து இருப்பார்கள் , மகனை விட.
- அரசியலை எடுத்து கொண்டால், ஜெயலலிதா தான் அல்லது சோனியா காந்தி தான் என்று முழக்கம் இடுவார்கள்.

இவ்வளவும் செய்து கொண்டு, ஆண்தான் பெரியவன் ,பெண் அடிமையாகதான் இருக்க வேண்டும் என்று மார்தட்டி கொண்டு இருப்பார்கள். இது மாதிரியான ஆள்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம் நடை முறை வாழ்கையில்.

இன்னும் சில பேர் இதற்கு அப்படியே எதிராக, பெண்ணடிமை கூடாது , ஆணாதிக்கம் தவறு என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கே திருமணம் நடக்கிறது என்று எடுத்து கொள்வோம். அவர்களை வீட்டோடு மாப்பிளை என்று கூறினால் , அவர்கள் திருமணம் செய்வார்களா என்று கேட்டால் ....."முடியாது" என்ற ஒரு சொல்தான் பதிலாக இருக்கும்.

அது என்ன......... திருமணத்தின் போது பெண் மட்டும்தான் , அவர்கள் சொந்த பந்தத்தை விட்டு வர வேண்டுமா? இதுவும் ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ , நமக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம்தானே?

இதற்கு என்னை நானே கேள்வி கேட்டு கொண்டால் , எனக்கும் பதில் சொல்ல தெரியவில்லை???????.

இது மாதிரியான முன்னுக்குபின் முரணான பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.....பதில்தான் தெரியவில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் , Ladies First என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்று தான் நினைகிறேன். டாக்டர் ஷாலினி அவர்கள், அவருடைய புத்தகத்தில் கீழே உள்ளவாறு எழுதி இருப்பார். அதை படிக்கும் பொழுது அது உங்களுக்கு புரியும்

"கரு உருவாகும் போது , முதலில் அது பெண்ணாகத்தான் உருவாகுமாம்.. பின்பு க்ரோமோசோம்களின் மாற்றங்களினால் அது ஆணாக மாறும் அல்லது பெண்ணாகவே இருக்கும். ஆக முதலில் உருவாவது பெண் தான். ஆண் அல்ல. அதனால்தான் ஆணுக்கு உபயோகமே இல்லாமல் மார்பகங்கள் இருக்கிறதாம் ".

Monday, October 12, 2009

விபச்சாரன்கள்





விபச்சாரம் - இந்த வார்த்தைக்குரிய அர்த்தத்தை முதன்முதலில் உணர்ந்தது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் நண்பன் மப்பில் இருக்கும் ஒரு விபச்சாரம் செய்யும் பெண்ணிடம் திட்டு வாங்கும் போதுதான் . இது நடந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில். மற்றொன்று, நடுத்தர வயது உள்ள ஒரு பெண், ஒரு நடுதரதிற்கும் (தரம் இல்லாத) அதிகமான வயது உள்ள ஒரு ஆணிடம் எதோ பேசி , அவரும் பித்து பிடித்தவர் போல அவள் பின் சென்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்து நானும் என் நண்பனும் ஆர்வ மிகுதியில் அவர்களை பின்தொடர்ந்து , பின்பு அந்த காட்சி ஒரு ஹோடெலின் அறை கதவை சாதியதோடு நின்றது. புத்தர் போதி மரத்தில் ஞானம் பெற்றது போல, எங்களுக்கு ஒரு ஹோடேலில் விபசாரம் பற்றிய ஞானம் பிறந்தது.

பொதுவாக விபசாரம் என்ற வார்த்தை எப்போதும் பெண்களை சுற்றியேதான் வந்து கொண்டிருகிறதே தவிர ஆண்களை பற்றி எப்போதும் ஒரு வார்த்தை கூட வந்ததிலை, கேள்வி பட்டது கூட இல்லை. இவர்களிடம் செல்லும் ஆண்களுக்கு என்னதான் பெயர்? இதுவும் ஒரு வகையில் ஆணாதிகத்தின் ஒரு பகுதிதான்.

உதாரணத்திற்கு ,

*) ஒன்றுக்கும் அதிகமான பெண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் பெண்ணை திருமணம் செய்யும் ஆணை , நாம் பலவாறு கேலி செய்வதுண்டு( பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்தே) . " ரெண்டு மச்சினிசியா......ம்ம்ம்ம்ம்...மஜாதான்" .ஆனால் இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் ஆணுக்குதான். இதுவே இதற்கு அப்படியே உல்டாவாக ஒரு பெண்ணை கற்பனை செய்து பாருங்கள். ஒன்றுக்கும் அதிகமான ஆண்கள் உள்ள ஒரு குடும்பத்தில் முதல் ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணை " ரெண்டு மச்சினனா ....ம்ம்ம்ம்ம்ம்....மஜாதான் " என்று என்றைகாவது சொல்லி இருக்கிறோமா. சொல்லத்தான் முடியுமா.. நீ அவர்களுக்கு தாய் போல என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். அப்படியே சொன்னால் அவள் " விபச்சாரி, நடத்தை கெட்டவள், கள்ள காதல்" என்று பல பெயர்கள். இந்த விசயத்தில் ஆண்களுக்கு பெயர் மன்மதன் , பெண்கள் செய்தால் வேறு பெயர்.

*) குடும்ப தலைவன் , சில வீட்டில் அனைவருக்கும் தெரிந்தே "சின்ன வீடு" வைத்து கொள்ளலாம் . அவனுக்கு எந்த பெயரும் இல்லை.தட்டி கேட்டாலும் ஒன்றும் ஆக போவதும் இல்லை. அவன் ஆண் . குடும்ப தலைவன். ஆனால் இதையே பெண் செய்தால் மேலே சொன்ன அனைத்து பெயர்களும் அவளுக்கு வரும்.

*) பலான படங்களுக்கு சென்றவர்களுக்கு தெரியும், படத்திற்கு வருபவர்களில் , இளசுகள் அதிகமா அல்லது பெரிசுகள் அதிகமா என்று. ஆண்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு அவர்களுடைய இச்சையை தீர்த்து கொள்ள குறிபிட்ட வயதை தாண்டிய பிறகும். ஆனால் பெண்களுக்கு? (அவர்களும் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆசா பாசங்கள் எல்லாம் ஆண்களுகுதானா? பெண்களுக்கு இல்லையா? இந்த கேள்விக்கு பதில் என்னவென்றும் தெரியவில்லை ).

*) கடவுளை கூட நாம் விட்டு வைக்க வில்லை இந்த விசயத்தில். கோகுலத்தில் உள்ள கிருஷ்ணன் ,பல பெண்களிடம் விளையாடுவாராம், குளிக்கும் போது துணிகளை எடுத்து விடுவாராம்.அவருக்கு பெயர் மன்மதன். ஆனால் இது மாதிரி குணாதிசயங்கள் நிறைந்த பெண் கடவுளை பற்றி நான் அறிந்ததில்லை. கடவுளில் கூட ஆணாதிக்கமா? எனக்கு எப்போதோ படித்த ஹைக்கூ தான் நினைவுக்கு வருகிறது.

"கிருஷ்ணன் செய்தால் லீலை.
நாங்கள் செய்தால் ஈவ்- டீசிங்கா ?"

மேலே உள்ள விசயங்களில் உள்ள ஆண்களுக்கு என்ன பெயர் தெரியவில்லை?.

சமீபத்தில் தினமலரில் வெளியான செய்தி அனைவரும் அறிந்ததே. சில நடிகைகளை விபசாரம் செய்தார்கள் என்று கூறிய பத்திரிகை , அவர்களிடம் சென்றவர்களை பற்றி எதுவும் வெளியிட வில்லை. அவர்களுக்கு பெயரும் இல்லை. பொதுவாக சினிமா துறையில் உள்ள பெண்களை பற்றி அனைவரும் அறிந்ததே. ஒரு பெண் நடிகையாக வர வேண்டும் என்றால் ,இன்னும் அந்த பெண் யாருடைய வாரிசும் இல்லை என்றால் , அவள் எத்தனை பேருடன் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் அனைவரும் அறிந்ததே. முதல் கொலை செய்யும் போதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். போக போக எல்லாம் சரி ஆகி விடும். அது போலதான் இதுவும். தொழில் என்று ஆன பிறகு , அதுவும் பழகிய பிறகு அந்த தொழிலை செய்வதில் (விபசாரதைதான்) எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்களை இந்த மாதிரி ஆக்கியதே ஆண்கள் (அனைவரும் இல்லை) தான். அவர்கள் அழைத்து செய்யும் பொழுது விபசாரம் இல்லை. ஆனால் அதுவே அந்த பெண்கள் தனியாக செய்தால் மட்டும் விபச்சாரமா? புரிய வில்லை.

ரஜினி ஒரு பத்திரிகையில் பல வருடங்களுக்கு முன்பு , " மது , மாது இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று கூறியதாக கேள்வி பட்டிருக்கிறேன். இதை ஒரு ஆண் கூறலாம் . இதை பெண் கூறினால், விபச்சாரமா?

சினிமாவில் உள்ள சில பெண்களின் படத்தை மட்டும் பத்திரிகையில் போட்டு இருந்தார்கள். ஆண்களை பற்றி போடுவது என்றால் , 75 % ஆண்களின் போட்டோவை போட வேண்டியதாக இருக்கும் என்று நினைக்கிறன்.

ஆக . விபசாரம் என்பதில் எப்போதும் பெண்களை பற்றியே குறை சொல்வதில் எந்த புண்ணியமும் இல்லை. ஆண்கள் இந்த பெண்களிடம் சென்று படுப்பதை குறைத்தால் , இந்த தொழில் படுத்து போகும் என்பது உண்மை.

ப.பிரதீப்



Thursday, September 24, 2009

படித்ததில் ரசித்தது

வெற்றி ---- இந்த வார்த்தைக்கு பல பேர் பல அர்த்தங்களை சொல்லி இருக்கலாம். ஆனால் இங்கே ஒருவர் கொடுத்த அர்த்தத்தையும் , அதன் விவரிப்பையும் பார்க்கும் பொழுது சற்று நெருடலாக இருந்தாலும் உண்மை என்பது மறுக்க முடியாதது.

:)))))


"Success is just like being pregnant: everybody congratulates you, but nobody knows how many times you were fucked." - Gurnicht Von Nicht (1946-).

Sunday, September 13, 2009

நானும் ஒருவன்







கீழ்வருவன பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்து வந்த அதுவும் படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு ஓரளவு பொருந்தும் என்று நினைக்கிறேன்.

தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு அல்லது படிகின்றவர்களுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு வரை எந்த வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அதுவரை அவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் தேவை படாது. அதுவரை ஆங்கில தேர்வில வரும் அனைத்து பாடங்களையும் மனபாடம் செய்து ஒட்டி விடலாம். Essay ஆகட்டும் அல்லது வேற ஏதாவது கதை பாடங்களாகட்டும் அனைத்தையும் மனபாடம் செய்து ஓட்டி விடுவோம். கதையை கூட மனபாடம் செய்து எழுதுகிறோமே என்ற குற்ற உணர்வு தோன்றாது அல்லது அந்த கால கட்டத்தில் நமக்கு அந்த எண்ணம் தோன்றவும் தோன்றாது.

ஆனால் அதற்கு பிறகு கல்லூரியில் சென்று சேரும் போதுதான் ஒரு சின்ன ஒரு உணர்வு தோன்றும். பல கல்லூரிகளில் பாட பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில்தான் எடுப்பார்கள். தமிழ் மீடியத்தில் படித்து சென்றவர்களுக்கு கண்ணை கட்டி காற்றில் விட்டது போன்ற உணர்வு தோன்றும். ஆங்கில மீடியத்தில் படித்தவர்களுக்கு இணையாக நம்மால் அங்கு இயங்க முடியாது. கல்லூரி முதல் வகுப்பில் தன்னை அனைவர்க்கும் முன்பு அறிமுகப்படுத்தி கொள்வதில் கூட ஆங்கிலம் நமது வாயில் அந்த ஆட்டம் போடும். அந்த மாதிரி சமயங்களில் ஒருவித தாழ்வு மனப்பான்மை கூட எழும். அப்பொழுதே அதை உணர்ந்து ஓரளவு சரி செய்து கொள்பவர்கள் தப்பிப்பார்கள் . ஏனென்றால் அப்பொழுது ஓரளவு அனைவருமே வகுப்பில் புது மாணவர்களாக இருப்பார்கள். ஆக ஆங்கில அறிவை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும் . ஆனால் அதுவே நான்கு அல்லது ஆறு மாதங்கள் ஆகி விட்டால் அதுவும் ஒன்று தோன்றாது. அனைவரும் நண்பர்கள் ஆகி விடுவார்கள். நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் தேர்வு சமயத்தில் என்று அதையும் அசால்டாக விட்டுவிடுவோம். ஆக இந்த சமயத்திலும் ஆங்கில் அறிவில் கோட்டை விட்டவர்கள் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.

கல்லூரியும் முடிந்து விட்டது. அடுத்து வேலைக்கு சென்றாக வேண்டும் . இப்பொழுதுதான் நம்முடைய ஆட்கள் வெகுவாக பாதிக்க படுவார்கள். ஆங்கில அறிவின் அருமை இப்பொழுதுதான் புரியும்.

தென் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு , அந்த இடத்தில் பெரிய அளவு அவர்கள் படித்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் இல்லாததால் சென்னை வந்து விடுவார்கள். வந்தாகிவிட்டது. சிறிது காலம் நண்பர்கள் மூலமாக அல்லது வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தங்களுடைய Resume பதிவேற்றம் செய்து விட்டு அவர்களுடைய தொலைபேசி அழைப்பாக காத்திருப்பார்கள்.அதுவரையில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அதுக்கப்புறம்தான் கூத்தே ஆரம்பிக்கும்.

அழைப்பு எல்லாம் அநியாயத்துக்கு வரும். ஆனால் அங்கு பேசுவதில்தான் பிரச்சினையே. நாம் அங்கு தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசுவதற்குள் நம்முடைய நிலைமை பற்றி தெளிவாக தெரிந்து விடுவதால் அந்த நிலையிலேயே நாம் தவிர்க்க படுவது நமக்கு தெள்ள தெளிவாக தெரியும். எனக்கு தெரிந்து பல நண்பர்கள் பல தேர்வுகளை முடித்து விட்டு கடைசி தேர்வான HR ரௌண்டில் வெளியேறியவர்கள் பலர் இருக்கிறார்கள். பின்பு அடிபட்டு அடிபட்டு ஓரளவு தேறி நல்ல நிலையை அடைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

ஆக இவற்றில் எங்கு பிரச்சினை என்று ஆராய்ந்தால் அடிப்படையே காரணம் என்று தோன்றுகிறது. படித்து முடித்து விட்டு மற்றவர்கள் தங்களுடைய வேலைக்காக அவர்களுடைய துறையில் காலடி வைக்கும பொழுது நாம் ஆங்கில அறிவை தயார் படுத்தி கொண்டு நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் மிகை ஆகாது. குழந்தைகள் தங்களுடைய பத்து வயதிற்குள் பல மொழிகளை கற்கும் திறன் இருக்கிறதாம். ஆக அடிப்படையிலேயே இதை தீர்மானித்து விடோம் என்றால் எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் இல்லை.

எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். வட இந்தியர்களிடம் இந்த மாதிரியான பிரச்சினையே பார்த்ததே இல்லை. நமது தமிழ் நாட்டில் மட்டும்தான் தமிழ் தமிழ் என்று கூறி கொண்டு ஆங்கில மற்றும் ஹிந்தி முதலான மொழிகளுக்கு முன்னிரிமை அளிக்காமல் விட்டு விடுகிறோம்.
ஆக இனிவரும் காலங்களில் அடுத்த சந்ததியினரையாவது ஆங்கில மீடியத்தில் சேர்த்து ஆங்கில அறிவை ஏற்ற வேண்டும் அல்லது நம்முடைய அரசாங்கம் தமிழ் மீடியத்திலும் அதன் திறனை உயர்த்த வேண்டும்.

கடைசியாக, மொழி என்பது ஒருவருடைய கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்த்து கொள்ளும் ஒரு ஊடகமே தவிர அதுவே அனைத்திற்கும் மேல் என்று கூறி கொண்டு அடித்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்றே தோன்றுகிறது.
நமது தாய் தமிழ் மொழியின் தரம் எப்பொழுதும் குறைந்து போக போவதில்லை மற்ற மொழியை நாம் பயில்வதால்.

ப.பிரதீப்