சிறு வயதிலிருந்தே கிறிஸ்தவனாக வளர்ந்தவன் நான். ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் என் அப்பா இந்து , அம்மா கிறிஸ்டின். அம்மாவுக்கு பற்று கிறிஸ்தவ மதத்தில் அதிகம் என்பதால் நானும் இந்த மததிலேய வளர்த்தேன் , தாயை போல பிள்ளை என்பது போல. ஆனால் சமீப காலமாக இந்த மதத்திலும் சரி, இல்லை எந்த மதத்திலும் சரி , மனது சரியாக ஒத்து போவது இல்லை. நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால் , புது நன்மை என்ற சடங்கை பற்றி தெரிந்து இருக்கும்.மற்ற மதத்தவருக்கும் இதை பற்றிய தெளிவு இருக்கும் என்று நினைக்கிறன். ஒரு சின்ன அப்பத்தை பிட்டு நாக்கில் வைப்பார்கள், இதைதான் புது நன்மை என்று குறிபிடுவார்கள். நான் புது நன்மை வாங்கிய பிறகு, சில நேரம் வாங்குவேன் , சில சமயம் வாங்க மாட்டேன். ஆனால் நான் வாங்காத நாட்களில் என் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்வேன். அதனால் பிடிக்கிறதோ இல்லையோ , இதை வாங்கி விடுவதை ஒரு கடமையாக செய்து விடுவேன்.
இங்குதான் சங்கடமே ஆரம்பிக்கிறது , அந்த அப்பத்தை கொடுக்கும் முன்பு கோவிலில் , கிறிஸ்தவர்கள் மட்டுமே இதை வாங்க வேண்டும் என்று குறிபிடுவார்கள்.
- ஏன் இதை கிறிஸ்தவர்கள் மட்டும் வாங்க வேண்டும்?
- மற்ற மதத்தினர் வாங்கினால் என்ன தவறு ? அல்லது கொடுபதினால் என்ன தவறு?
- இயேசு கோபித்து கொள்வாரா? அல்லது இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தானா? அப்படி இருந்தால் அவர் கடவுளா?
இதை கொடுக்காமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆனால் கொடுபதினால் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து. அந்த காலத்தில் இயேசு, சில மீன் துண்டுகளை வைத்து ஊருக்கே பகிர்ந்து கொடுத்தார் என்று விவிலியத்தில் சொல்வது உண்டு. அப்படி இருக்க, இந்த சிறு அப்பத்தை கூட மற்றவர்களுக்கு பகிர்த்து கொடுக்காத இந்த மத கோட்பாடுகள் ஏற்று கொள்ள படாத ஒன்றாகவே எனக்கு படுகிறது.
பிரச்சினையே இங்குதான் இருக்கிறது. நாம் கடவுளை கடவுளாக பார்ப்பதே இல்லை. அவரையும் மனிதராகத்தான் நாம் பார்க்கிறோம். மனிதராக பார்பதினால்தான், இன்னமும் தேவை இல்லாமல் நம்மை வருத்தி, அவரிடம் நாம் , எனக்கு இதை செய், அதை செய் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். மனிதரிடம்தான் இந்த பண்பு உண்டு. உனக்கு நான் அதை செய்தேனே, எனக்கு நீ இதை கூட செய்ய மாட்டாயா? என்றெல்லாம் நாம் கேட்பது உண்டு.
இன்னமும் வேளாங்கண்ணி கோவிலில் சென்று பார்த்தீர்களேயானால் , முட்டி போட்டு ஒரு இடத்திலிருந்து கோவிலை சென்று அடையும் வரை, மணலில் தன்னை வருத்தி, வேண்டுதல் நிறைவேற்றி கொண்டு இருப்பார்கள் அல்லது தனக்கு ஏதாவது கேட்டு கொண்டு இருப்பார்கள். கோவிலை சென்று அடையும் பொழுது அவர்கள் முட்டியில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும். இந்த வேதனையில் இருந்து வெளிவர அவர்களுக்கு எப்படியும் மாத கணக்கு ஆகும். இப்படி எல்லாம் வேண்டுதல் கடவுள் கேட்கிறாரா? அல்லது அப்படி வருத்தி ஏதாவது செய்தால்தான் கடவுள் நமக்கு செய்வாரா? அப்படி செய்தால் அவர் கடவுளா? . இதை பற்றி நண்பர் joe கூட ஒரு பதிவு எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கிறிஸ்தவ மதத்தில் மட்டும் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது இல்லை..எல்லா மதத்திலும் இப்படி தேவை இல்லாத இந்த அநியாங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கின்றன. என அண்ணனின் நண்பர் ஒருவர், அவருக்கு ஒரு தேவை நடக்க வேண்டும் என்று நினைத்து , ஒரு இந்து கோவிலுக்கு சென்று தன கையில் சூடத்தை ஏற்றி அது அனையும்வரை கையில் ஏந்தி நின்று கொண்டு இருந்தார். அவருக்கு அவர் வேண்டியது நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய அன்றாட வேலைகள் ஒன்று கூட நடக்கவில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். அவரிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு "நம்பிக்கை" தான் என்று கூறினார். இதன் பெயர்தான் நம்பிக்கையா? எனக்கு புரியவில்லை!!!!!!.
நான் முன்பே கூறியது போல, எனக்கு எந்த மதத்திலும் இப்பொழுது நம்பிக்கை இல்லை. என் அப்பாவின் மதமான இந்து மதத்தில் முற்றிலுமாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் கீழ்வரும் இந்த மூன்று காரணங்கள் தான்.
1 ) மத சடங்குகள்.
2 ) கோட்பாடுகள்.
3 ) முக்கியமாக ஜாதி.
ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை என்பதே எனது கருத்து. தாயின் முன் , அவளுடைய அனைத்து குழந்தைகளுமே அவளுக்கு சமம்தான். அப்படி இருக்க, அது எப்படி ஒரு மதத்தில் இருந்தே ஒருவரை உயர்ந்தவராகவும் , மற்றவரை தாழ்ந்தவராகவும் பார்க்க முடியும். எனக்கு தெரிந்து கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் அப்படி இருக்க வாயப்பு இல்லை. இடைசெருகல்கல்தான் அனைத்து மதத்திலும் அதிகமாக இருக்கின்றன. இது அனைவர்க்கும் தெரியும். ஆனால் யாரும் அதை ஏற்று கொள்வதும் இல்லை, அல்லது கண்டு கொள்வதும் இல்லை.
உதாரணத்திற்கு ஜாதி இல்லை என்பது அனைவர்க்கும் தெரியும், காரணம் , ஒருவர் பல நாள் நமக்கு கீழ் வேலை பார்த்து விட்டு , திடிரென்று நமக்கு நிகராக வருவதை, நம்மால் ஏற்று கொள்ள முடிவது இல்லை. அதேதான் ஜாதியிலும் நடக்கிறது. இவ்வளவு நாள் நம்மை விட தாழ்ந்த ஜாதி என்று இருந்தவன், திடிரென்று நமக்கு நிகர் என்று சொல்லி கொள்வதை யாரும் விரும்புவது இல்லை. அதனால்தான் ஒவ்வொரு ஜாதியினரும், இந்த ஜாதி நம்மை விட தாழ்ந்தது என்று சொல்லி கொண்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் தாழ்த்த ஜாதியில் கூட இந்த இந்த பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் உள்ளவர்கள், இவன் நம்மை விட தாழ்ந்தவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க ஜாதி எப்படி ஒழியும்? முடியாத செயல் என்றே தோன்றுகிறது. இந்த காலத்திலும் ஜாதியை வைத்து கொண்டு, கோவிலுக்கு மற்றும் பல இடங்களில் அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது ஏற்று கொள்ள முடியாததாகவே இருக்கிறது........அங்கீகாரம் கிடைக்காத எந்த இடத்திலும் நாம் எதிர்த்து போராட வேண்டும்.........
முன்பே சொன்னது போல, ஜாதியை அங்கீகரிக்கிற எந்த மதமும் , மதமே இல்லை. அதனால் தான் அம்பேத்கர் கூட, கடைசி நாட்களில் புத்த மதத்தை தழுவினார். ஆக, இடை செருகல்களை அகற்றுவோம். தேவை இல்லாததை வளர்த்து விடாமல் , மனிதத்தை வளர்ப்போம்.
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
மிக அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
வாங்க.. வாங்க..! வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க! :) :0
இதையெல்லாம் பார்த்து பார்த்து வெறுத்துப் போய்... இப்பல்லாம் இதைப் பத்தி பேசறதை கூட நிறுத்திட்டேன்.
மிக அருமையான சிந்தனை.
கடவுள் நம்பிக்கை வேறு, மதம் வேறு, இதை பற்றி நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
"ஒருவர் பல நாள் நமக்கு கீழ் வேலை பார்த்து விட்டு , திடிரென்று நமக்கு நிகராக வருவதை, நம்மால் ஏற்று கொள்ள முடிவது இல்லை". இந்த மன பான்மைதான் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையாய் அமைகிறது.ஆண்டான் அடிமை மனோபாவம்.சாதி,மதம் எல்லாமே அதனை நிலை நிறுத்தி கொள்வதற்கான உபகரணங்கள்(Tools).ஆண்டான் அடிமை மனோபாவம் எந்த மதத்தில்,சாதியில்,இனத்தில் இல்லாமல் இருக்கிறது.சக மனிதனை நம்மை போன்றதொரு மனிதன் என்று எண்ணத்தொடங்கினாலே பல்வேறு பிரச்னைகள் தீரும்.
மதமும் சாதியும் உடன் பிறந்தது. எங்கெல்லாம் மதம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரிவினைவாதம் (பிரித்தாளுதல் சரியான வார்த்தை) இருக்கிறது. நல்ல தைரியமான பதிவு.
இந்த உலகின் மிக வலிமையான ஆயுதம் மதம் தான்....நம்மைப் போன்ற ஓரிருவர் சொல்வதால் யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்போம்.
நன்றி உலவு.காம்
நன்றி பாலா. நீங்க இந்த ஜோதின்னு தெரியாம போச்சு. :))
நன்றி சிங்கக்குட்டி. வருகைக்கு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சிவா.
நன்றி ஜோதி.
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராம்.
ரொம்ப நாளாச்சுல்ல உங்க வலைப்பூ பக்கம் வந்து.
யானைக்கு மதம் பிடித்தால் என்னா ஆகும்... அதிகபட்சம் நாலும் மரம் ஒடியும், மனிதர்கள் வாழும் இடங்களுக்கு அருகில் இருந்தால் சில மனிதர்களுக்கு ஆபத்து உண்டாகும். மனுஷனுக்கு மதம் பிடித்தால்..
கவியரசு கண்ணதாசன் வரிகள்.. “எதனைக் கண்டான் மதங்களைப் படைத்தான்” - மனுஷனைப் பிரிச்சு, அன்பு, பாசம், நேசமில்லாமல் அடிப்பதில் மதங்கள் பெரும் பங்க்காற்றுகின்றன...
நல்ல இடுகை. மதம் என்ற ஒன்று இருப்பதாலேயே ஜாதி அல்லது பகுப்புகள் வந்தே விடுகின்றன. மனிதம் என்பது மதமாகும் வரை இப்படித்தான்.
வருகைக்கும் தங்களது ஆழ்ந்த கருத்துக்கும் நன்றி ராகவன் சார்.
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்,..
இனி வரும் காலங்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கட்டும்
//அல்லது இயேசு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் தானா? அப்படி இருந்தால் அவர் கடவுளா//
// இப்படி எல்லாம் வேண்டுதல் கடவுள் கேட்கிறாரா? அல்லது அப்படி வருத்தி ஏதாவது செய்தால்தான் கடவுள் நமக்கு செய்வாரா? அப்படி செய்தால் அவர் கடவுளா? //
நெத்தி அடி. இது எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மண தைரியம் தான் இல்லை.
Thanks for your coming and thoughts AATHI MANITHAN.
பிரதீப்,
அற்புதம்!
தன்னைத் தானே துன்புறுத்தி கொள்ளும் மேசோச்சிஸம் எல்லா மதங்களிலும் இருப்பத்து உண்மை.
இதை இவர்களே விரும்பி ஏற்கிறார்களா? என்று கேட்டால் சத்ததையே காணோம். நீங்கள் சொன்னது போல் 'நம்பிக்கை' என்கிறார்கள்.
நாங்க மட்டும் ஒன்னும் சும்மா இல்ல, எங்க கிட்டயும் அப்பம் இருக்கு, அத நாங்க மட்டும் தான் சொல்லலாம் என்றபடி மந்திரம் என்று வைத்திருக்கிறார்கள் ஒரு கோஷ்டி.
ஆனால் பாவம் இப்பொழுது அந்த அப்பத்திற்கு ஆப்பு வைக்கும் விதம், பர்மா பஜாரில் எலக்ட்ரானிக் புண்ணியத்தில், ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது:-)
நண்பரே உங்களுடைய கட்டுரை அருமை, இறைவன் இதை போன்ற பகுதுநர்வைதான் மனிதனிடம் எதிர்பார்க்கிறான், அதற்காகத்தான் ஆறாம் அறிவையும் கொடுத்திருக்கிறான்.
எந்த ஒரு மதமும் அனைதுமநிதனையும் சமமாகவே கருதுகின்றன. அது ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லிம் எது ஆனாலும்சரி. இதனை ஒவ்வொரு மதத்தின் பழைய கோட்பாடுகளில் இருந்து நாம் தெளிவாக அறியலாம்.
மதங்களில் உள்ள அணைத்து தவறான விடயங்களுக்கும் மனிதனின் இடைசெருகளினால் உண்டான பிரச்சினையே முழுமுதல் காரணம் ஆகும்.
மாதங்கள் மனிதன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான வழிமுறை என்பது எனதுகருது.
உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இஸ்லாம் மதத்தின் குரானை அதன் மொழிபெயர்பினை படிக்கவேண்டுகிறேன். எனக்குதெரிந்தவரை இது மட்டுமே 1450 வருடங்களாக எந்தவொரு மாற்றமோ, இடைசெருகளோ இல்லாமல் இருக்கின்றன.
முஸ்லிம் மதத்திற்கு பரிந்துறை செய்வதாக நினைக்கவேண்டாம். பைபிள் அல்லது எந்தவொரு மதத்தின் உண்மையான, பழமையான, இடைச்செருகல் இல்லாத புனித நூல்கள் கிடைத்தாள் அதனையும் படிக்கவேண்டுகிறேன்.
இவ்வாறு படிக்கும்போது நமக்குபுரியும் பிரச்சினை மதத்தில் இல்லை அது மனிதனால் மதத்தில் உருவாக்கப்பட்டதே.
Post a Comment