Sunday, June 6, 2010
ஏண்டா............ நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா?
சமீபத்தில் திருச்சிக்கு சென்று இருந்த போது உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் ஒரு கிறிஸ்தவர்.கல்லறையில் சடலத்தை வைத்து விட்டு , செபங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, குழி தோண்டும் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தது.ஒரு வழியாக எல்லாம் முடிந்து, புதைக்க வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கையில், அங்கு கூடி இருந்தவர்கள் செய்த பஞ்சாயத்துதான் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.
- இறந்தவர் பெண் என்பதால், ஒருவர் அவருடைய மூத்த பையனை கூப்பிட்டு போய் மொட்டை அடித்து விட்டு வா என்று கூறினார். இன்னொருவர், அதெல்லாம் தேவை இல்லை....உண்மையான கிறிஸ்தவன் மொட்டை அடிக்க மாட்டான் என்று கூற, இருவருக்கும் இடையே நடந்த அந்த பார்வை பரிமாற்றம் அங்கு அடித்த மதிய வெயிலை விட கொஞ்சம் உஷ்ணம் அதிகமாகவே இருந்தது.
- ஒரு வழியாக அந்த பையன் மொட்டை அடித்து விடு வர, பார்க்கிறவர்கள் அனைவரையும் முகத்தை பார்க்க சொல்லி விட்டு, சவ பெட்டியை மூடி ஆணி அடிக்க ஆரம்பித்தார் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர். அப்போது மீண்டும் அந்த உண்மையான கிறிஸ்தவன் அந்த ஊழியரிடம், எதுவாக இருந்தாலும் ஒத்தை படையில் ஆணி அடித்து முடித்து விடுங்கள், இரட்டை படை வேண்டாம் என்று கூற, அப்போது அடித்து இருந்த ஆணி 8 . சொல்லவா வேண்டும்....உண்மையான கிறிஸ்தவன் மீண்டும் வெகுண்டு எழுந்து, இன்னொரு ஆணியை அடித்தேஆக வேண்டும் என்று கூறி, 9 ஆணியை வைத்து ஒத்த
படையில் அடித்து முடித்தார்கள்.
- ஒரு வழியாக பெட்டியை கீழே இறக்கி, மண்ணை போட்டு மூடி, தண்ணியை ஊற்றி மொழுகி, ஒரு சிலுவையையும் சொருகி முடிக்க...அடுத்து.....பால் தெளிக்கும் படலம் ஆரம்பித்தது. மீண்டும் அந்த பையனை கூப்பிட்டு பால் தெளிக்க சொல்ல, அவன் பாலை தெளித்து கையை சற்று லேசாக உதறினான். அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து, ஏன் இப்படி கையை உதறினாய்? அப்படி எல்லாம் உதற கூடாது என்று சொல்லி ஆளாளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிந்து அந்த பையனுக்கு ( 15 வயது இருக்கும்) , அம்மா இறந்த வலியை விட , இவர்கள் செய்த கூத்தில் ஏற்பட்ட வலிதான் அதிகமாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
என்னிடம் இருந்த கேள்வி இதுதான்......
- மொட்டை அடிப்பதற்கும் , இறந்ததற்கும் என்ன சம்பந்தம்? முடியை கொடுப்பது ஒரு தியாகமா? அல்லது வருத்தத்தை மொட்டை அடித்துதான் காட்ட வேண்டுமா?
- பாலை தெளித்து உதறியது ஒரு குற்றமா? இன்னும் இது மாதிரியான சம்பிருதாயங்கள் இருக்கத்தான் வேண்டுமா? உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறும் இவர்கள், பைபிள் புத்தகத்தில் இருந்து , இது மாதிரி செய்ய சொல்லி இருக்கிறது என்று காட்ட முடியுமா....?
உண்மையில் இங்கு இருபவர்கள் எல்லாம் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? அப்படி உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டால் , திருச்சியில்
இரண்டு விதமான கல்லறைகள் இருப்பதற்கான காரணத்தை கூற முடியுமா? சில பேருக்கு தெரிந்து இருக்கும், சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை...திருச்சியில் இரண்டு கல்லறைகள் உள்ளன..ஒன்று உயர்ந்த சாதி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ..மற்றொன்று தாழ்ந்த சாதி உள்ளவர்களுக்கு. ...ஒருவன் இறந்து கல்லறையில் வைக்கும் போது கூட இந்த சாதி பிரிவினை தேவைதானா? ஒரு முறை திருமாவளவன் அவர்கள் இதை அறிந்து போராட்டம் நடத்தியதாக நியாபகம்.....அவ்வளவுதான்....இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டு ஜாதியையும் , கல்யாணத்திற்கு முன்பு ஜோசியம் பார்க்கும் இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்றால் ...அவர்களிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றுதான்....
இயேசு கிறிஸ்து என்ன ஜாதி ? என்ன கோத்ரம்? என்ன நட்சத்திரம்?
- முக்கியமாக ....அது ஒன்ன ஒத்த படை, இரட்டை படை? இறந்ததற்கு மட்டும் அல்ல....கல்யாணத்திற்கு பொண்ணு பார்பதிலும் கூட , மாப்ளைக்கு ஒத்த படையில்தான் வயது இருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை இங்கு நிலவி கொண்டுதான் இருக்கிறது. கல்யாணத்திற்கு மொய் வைப்பது கூட (101 , 1001 ) இந்த காரனதில்தானோ?
- ஒத்த படை என்று கூறும் ஒருவர் பிறந்தது...இருவர் இணைந்ததால்தான்....அது இரட்டை படை.
- தாய் வயிற்றில் இவர்கள் இருக்கும் மாதம் 10 .....அதுவும் இரட்டை படை.
இப்படி இருக்க.....எங்கிருந்து வந்தது இந்த ஒத்த படை.......தெரிந்தவர்கள்......பதில் இருந்தால் சொல்லவும்.....
ஒன்று மட்டும் தெரிகிறது.......1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது...........
சரி புரகிறது....ஒத்த படையிலேயே சொல்ற்கிறேன்......1001 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.........
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
// எதுவாக இருந்தாலும் ஒத்தை படையில் ஆணி அடித்து முடித்து விடுங்கள், இரட்டை படை வேண்டாம் //
இதில் என்ன இருக்கிறது,பெட்டியை நன்றாக மூடிவிட எத்தனை ஆணி தேவையோ அத்தனை அடித்தால் போதுமானது.இப்படி ஆணியை எண்ணி பார்பவர்கள் அந்த பையனின் நிலைமையை எண்ணி பார்க்க மறந்துவிட்டனர்.
இதுவே ஒரு ஆண் இறந்து இருந்தால் அவரின் மனைவிக்கு இந்த சமுதாயம் என்ன கொடுமை பண்ணும் என்று நான் சொல்லி தெரிய வேண்டாம்.
இப்படி பார்க்காத கடவுளின் பெயரை சொல்லி இவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளை தான் நிகழ்த்தப்போகிறார்களோ !!!!
என்ன இருந்தாலும் தமிழர்கள் அல்லவா? வேறென்ன நடக்கும்?
Well, all of these are of course absurd! I do agree.
But M.S.E.R.K avargaley, such things happen everywhere in India. Not just with Tamilian.
And as a Tamilian, all of us do have the "responsibility" to make people realize that these things are value less and wrong.
Blame game will never help. You are a part of it too!
US la irundukittu.. enna India da idu nu namma sonna epdi irukkum.. iduvum apdi daan!!
ரொம்ப வெளிப்படையான கருத்துக்கள்....பொதுவா கிறிஸ்தவர்கள் யாரும் சம்பிரதாயங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று மிகுந்த கட்டுப்பாடு இருக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்....இதுநாள் வரை கிறிஸ்தவம் ஜாதியை ஒழித்துவிட்டது என்றெண்ணியிருந்தேன்....நம்ம ஆட்கள் அதையும் விட்டு வைக்கவில்லை...ம் ம் ம்.....
தமிழர்கள் மட்டும் ஜாதியை வளர்க்கவில்லை என்று நினைக்கிறேன்...ஜெய்பூரில் நான் வாடகை வீடு தேடியபொழுது அனைவரும் கேட்ட ஒரே கேள்வி உன்னுடைய Sur name என்ன ??? ஏன் இந்த கேள்வியை எல்லா வீட்டுகாரர்களும் கேட்கிறார்கள் என்றால்..இங்கு நாம் அப்பா பெயரை Sur name -ஆக கொண்டதுபோல் ஜாதி பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துள்ளார்கள் அங்கு சேர்த்துள்ளார்கள் .....இங்கு ஜாதி வெறி என்றால் அயல்நாடுகளில் நிறவெறி.....
நல்ல பதிவு பிரதீப்....
Hi,
Touchingly written blog. I appreciate your honesty in expressing your views. Yes , these questions do come to our mind when we travel across two religious practices.
But, I feel it in my bones there are no differences in any religous practice. Sometimes it is binding and sometimes it is liberating.
After all God is "பொங்குபல சமயமெனும் நதிகள் எலாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத கடல்" தானே!
Enjoyed your blog. Thanks.
good job !!
முதலில் அந்த மறைந்த அம்மாவுக்காக பிரார்த்திக்கிறேன்.
நம் சமூகத்தில், இறந்தவர்களுக்கான இறுதி சடங்குகள் மிகவும் கர்ம சிரத்தையுடன் செய்யப்படுகின்றன.
கடனை வாங்கியாவது நல்ல முறையில் மறைந்தவரின் ஆன்மாவை வழியனுப்பவது நமது கலாச்சாரம்.
இதில் சாதி மத வித்தியாசம் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, தங்கள் மூதாதையர்களின் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தான். இதன் அடிப்படையிலேயே, நடந்த சர்ச்சைகளை (அந்த அம்மாவை அடக்கம் செய்த இடத்தில்) புரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
Well said..
Post a Comment