Friday, July 23, 2010

அற்பங்களின் தேசபற்று





எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் தொலை காட்சியில் தேசிய கீதம் ஓடினால் கூட எழுந்து நின்று தேசத்தின் மீது பற்றை தெரிவிக்கும் பழக்கம் உடையவன். எனக்கு இந்த விஷயம் தெரிந்த போது சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருந்தது. உண்மையில் தேச பற்று என்பது தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதிலும், மூவர்ண கொடியின் சிறப்பை சொல்வதிலும், தேச தந்தை யார் என்று சொல்வதிலும் , தேசிய கீதத்தை யார் இயற்றினார்கள் என்று சொல்வதிலும் தான் இருக்கிறது என்றால் அப்பேற்பட்ட தேச பற்று எனக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய பேர் தேச பற்று என்பது கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதோடு முடிந்து விடுகிறது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் உண்மையாக அப்பேற்பட்ட சமுதாயத்தில்தான் நாம் வசித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

நம்மை நாமே சற்று கேட்டு கொண்டால், உண்மையாக தேச பற்று என்பது நம்மிடம் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். ராணுவத்தில் ஆள் எடுக்கும் பொழுது கூட, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு , அங்கு பிடித்து இங்கு பிடித்து ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விடுகிறோம், விவரமே தெரியாத வயதில். அந்த 16 , 17 வயதில் உண்மையிலேயே தேச பற்று இருக்குமா என்று கேட்டால் சற்று கடினமே.

ஒரு விஷயம் புரிய வில்லை. நாம் வசிக்கும் வீடு சரி இல்லை என்றால் , அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுகிறோம். நான் வசிக்கும் ஏரியா மக்களே சரி இல்லை என்றால் , அந்த ஏரியா சரி இல்லை என்று கூறி வேறு ஊருக்கு சென்று விடுகிறோம். நாம் வேலை பார்க்கும் இடத்தில், சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்றாலோ அல்லது மேனேஜர் சரி இல்லை என்றாலோ , அந்த வேலையை விட்டே சென்று விடுகிறோம். இதுதான் உண்மையும் கூட. ஆக, நான் வசிக்கும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ள மக்கள் எனப்படும் சமுதாயம் மிகவும் முக்கியம். அதை வைத்துதான் ஒரு இடத்தையே நாம் தீர்மானம் செய்கின்றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது, உண்மையில் நம்மை சுற்றி உள்ள சமுதாயம் சரியாகதான் இருக்கிறதா ?

எப்பேர்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? சற்று சிந்தித்து பாப்போம்.

*) தமிழ் நாட்டை எடுத்து கொண்டால், காவிரி பிரச்சினை. மும்பையை எடுத்து கொண்டால் மராட்டியர் பிரச்சினை. இன்னும் தமிழ் நாட்டை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிடமும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

*) இன்னும் சற்று உள்ளே சென்றால், முக்கியமாக ஜாதி பிரச்சினை, மத பிரச்சினை, இன பிரச்சினை.

சரி நமது அன்றாட வாழ்கையை எடுத்து கொள்வோம்....

சரி ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி , ஆட்டோ வை பிடிக்க அழைத்தோம் என்றால், அவர்கள் கேட்கும் பணம்........இரண்டு மூன்று தடவை அவர்கள் ஆட்டோவில் சென்றால் அந்த ஆட்டோவையே வாங்கி விடலாம். அந்த அளவிற்கு இருக்கிறது. ஆட்டோவில் ஏறினால், மீட்டர் போட வேண்டும். எத்தனை ஆட்டோவில் மீட்டர் இருக்கிறது..? அப்படியே அவரை போட சொன்னோம் என்றால், அவர்கள் நம்மை கேனயனை விட கேவலமாக பார்த்து திட்டி , ஆட்டோவை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.

நம்மிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது என்றால், இந்த மாநகரத்தில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வத்திற்குள், எவ்வளவு பிரச்சினை? முன்னாடி வாகனத்தில் செல்பவர்கள், பின்னாடி யார் வருகிறார்கள் என்று சற்றிலும் சிந்திக்காமல் எச்சிலை உமிழ்ந்து விட்டு செல்வார்கள்...இது முன்னாடி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அல்ல....பஸ்ஸில் செல்பவர்களும் இப்படிதான் . இது மட்டும் அல்ல சிகரெட் சாம்பலை தட்டுவது..அல்லது அப்படியே அனைக்காமல் நடு ரோட்டில் போடுவது போன்ற பல கொடுமைகள்.

சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், நம் மக்களிடம் இல்லாதது சுய ஒழுங்குதான். சரி....இந்த சுய ஒழுங்கை பாது காக்க நம்மிடம் உள்ள போலீஸ் காரர்கள் சுய ஒழுங்கோடுதான் இருக்கிறார்களா....? அதுவும் இல்லை. எங்கும் லஞ்சம்....எதிலும் லஞ்சம்.... ஏன்? போலீஸ் வேளையில் சேர்வதிலும் லஞ்சம்.....பின்பு அவர்களிடம் எங்கு நாம் சுய ஒழுங்கை பாது காக்க சொல்வது......வாய்ப்பே இல்லை.......சரி....அங்குதான் இல்லை....நீதிமன்றம் என்று சென்று நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் , நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள். எங்குதான் செல்வது......இவர்களிடம் கேட்டால் தேச பற்று என்பார்கள்..........இப்படி இருக்கும் சமுதாயத்தில் தேசபற்று எப்படி வரும் ?

ஒரு மாதத்திற்கு முன்பு , ஒரு நில வழக்கு முடிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நியாயமான வக்கீலிடம் சென்றால், அவர் விசாரித்து விட்டு உங்கள் நிலையில் நியாயம் இருக்கிறது என்றாலும் ....வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும் என்று சொல்ல என்னால் முடியாது....ஏன் என்றால் ஏன் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை....நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.....போராடுவோம்....பார்போம் என்று கூறி விட்டார்.....இப்பேற்பட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் இருப்பது எல்லாம் தேச பற்று என்றால் ....தேச பற்றை என்னவென்று சொல்வது......?

இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எடுதால் கூட , நம்மை சுற்றி உள்ளவர்கள் பலர் அலுப்பைகள் தான். இப்பேற்பட்ட அலுபைகள் இருக்கும் நாட்டில் , தேச பற்று என்பது எந்த நிலையில் இருக்கும்...அப்படியே இருந்தாலும் ,இந்த அலுபைகளிடமிருந்து எந்த அளவு தேச பற்று இருக்கும்? கேள்வி குறியே !!!!!!!!

ஜப்பான் நாடு சிறிய நாடாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் சுய ஒழுங்கே.....அந்த நாட்டில் எனக்கு சில வருடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்த்த ஒரு சம்பவத்தோடு முடிக்கிறேன்......இங்கெல்லாம் நாம் சரக்கு அடித்து விட்டால் , அம்மா , அக்க, தங்கையை தவிர மற்ற அனைவரையும் கையை பிடுத்து இழுத்து பார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். யாரையாவது வம்பு இழுத்து ஆக வேண்டும் .....அப்போதுதான் நமக்கு மனது சாந்தி அடையும்.....ஆனால் அங்கு அப்படி இல்லை....சரக்கு அடித்தாலும் அந்த மப்பிலும் அடுத்தவர்களை வம்பு இழுக்க மாட்டார்கள். ஒரு முறை வேலை காரணமாக வீட்டுக்கு கிளம்ப மணி அதிகாலை 2 ஆகிவிட்டது. வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன்....வரும் வழியில் ஒரு சிக்னல். என் முன்பு புல் மப்பில் ஒரு 25 வயது உள்ள ஆள் ஒருவர் சென்று கொண்டு இருந்தார் .....ரோட்டில் யாரும் இல்லை....அதனால் சிக்னலை கிராஸ் செய்து விடலாம் என்று நினைத்து முன்னோக்கி சென்று கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கு முன்பு சென்ற குடிமகன் அந்த மப்பிலும் கிரீன் சிக்னலுக்கு காத்து கொண்டு இருந்தார்..சரி என்று நானும் நின்று விட்டேன்......அதிகாலை 2 மணிக்கு.....இங்கு காலை 10 மணிக்கே சிக்னலை மதிக்க மாட்டோம்.....இதுதான் சுய ஒழுங்கு.

ஆக , தேச பற்று என்று சொல்லி ஊரை ஏமாற்றாமல் , ஏதாவது மாறுவதற்கு வழி செய்வோம்......

முன்பெல்லாம் கிரிக்கெட்டில் இந்திய ஆடினால் , நாம் வின் பண்ண வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்....ஆனால் இப்போதெல்லம் அந்த மாதிரி எண்ணம் கனவில் கூட வருவது இல்லை.......

6 comments:

Manikandan said...
This comment has been removed by the author.
Manikandan said...

அடுத்தவன் எப்படி போனால் நமக்கு என்ன, நம்ம நல்லா இருந்தா போதும் என்கிற எண்ணம் தான் இவை அனைத்திற்கும் காரணம்.
நம்ம இந்த சமுதாயத்திற்கு எதுவும் பெரிசா செய்யாவிட்டாலும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு தொந்தரவு தராமல் இருந்தாலே மிகவும் பெரிய விஷயம். இதை தான் சுய ஒழுக்கம் என்று நான் கருதுகிறேன்.
நம்ம ஊரில் எப்படிபட்ட தவறையும் ஏதாவது ஒரு வழியில் மறைத்து விடலாம் அல்லது மறக்கடித்து விடலாம் என்பது அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஏதோ ஒரு படத்தில் கேட்ட வசனம் "தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்." நிசப்தமான வசனம்.

R.Varadharajan said...

நேத்திக்கு தான் மாப்ள அந்நியன் படம் 101 ஆவது தடவ பாத்தேன்.
உங்க பதிவு அந்நியனோட மக்கள் சந்திப்பு பேச்சு மாதிரியே இருக்கு.
இன்று நாடும் மக்களும் இருக்கும் நிலையில்,நீங்க சொல்ற மாதிரி தனக்கு தேச பற்று இருப்பதாக மார் தட்டி கொள்பர்கள் இருக்கிறார்களா என்ன? அப்படி இருக்கும் பட்சத்தில் அது நல்ல விஷயம் தானே?(அவர்கள் எந்த வழியில் தனது தேசபற்றை காட்டினாலும்)...

பாரதசாரி said...

Excellent one Pradeep.This does reflect the opinion of any individual who cares for a better ambiance around.Unfortunately such people are scattered in the society and they stay away from politics!

senthilkumar said...

//ஒரு விஷயம் புரிய வில்லை. நாம் வசிக்கும் வீடு சரி இல்லை என்றால் , அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுகிறோம். நான் வசிக்கும் ஏரியா மக்களே சரி இல்லை என்றால் , அந்த ஏரியா சரி இல்லை என்று கூறி வேறு ஊருக்கு சென்று விடுகிறோம். நாம் வேலை பார்க்கும் இடத்தில், சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்றாலோ அல்லது மேனேஜர் சரி இல்லை என்றாலோ , அந்த வேலையை விட்டே சென்று விடுகிறோம். இதுதான் உண்மையும் கூட. ஆக, நான் வசிக்கும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ள மக்கள் எனப்படும் சமுதாயம் மிகவும் முக்கியம். அதை வைத்துதான் ஒரு இடத்தையே நாம் தீர்மானம் செய்கின்றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது, உண்மையில் நம்மை சுற்றி உள்ள சமுதாயம் சரியாகதான் இருக்கிறதா ? //

நல்ல வேலை இப்படி மகாத்மா காந்தி நினைக்காம போனாரு.....நினசிருந்தா நம்ம நிலைமை ரொம்ப கஷ்டம்.....

// நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.//

// "தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்." நிசப்தமான வசனம். //


இந்த நிலைமையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் பாதிக்கப்படபோவது நிச்சயம் நிரபராதிகள்தான் மணிகண்டன்....

இன்றைய கவிதை said...

தங்கள் கூற்று ஆற்றாமை என்று கொள்ளலாம், அவ்வளவுதான். நம் சமுதாயம் என்றூ நம் சொல்வது நம்மையும் சேர்த்து தான் நாம் எத்த்னை விஷயத்தில் சரியாக இருக்கிறோம் கொள்கை நம்மிடத்தில் நம் ஒவ்வொருவர் இடத்திலும் நிலையாக இருக்குமானால் சமுதாயம் மேம்படும் தங்கள் ஆதங்கமும் விடியும். ஆயின் அப்படி நடக்க இந்த நாட்டின் சுதந்திரம் தடைக்கல்லாய் இருக்கிறது

தேசிய கீததிற்க்கு எழுந்து நிற்பது என்பது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே... எங்கே தேசியம் வெளிபடுகிற்தென்றால் இது என்ன என்று யோசிக்காமல் நம் நாடு என்ற ஒரு சொல்லிற்க்கு நம்மின் தன்னிச்சையான் செயல்பாடே அதற்க்கு முக்கிய உதாரணம் தங்களின் இந்த பதிவைப்போல்

இது என் தாழ்மையான கருத்து ...

நன்றி ஜேகே

Post a Comment