உண்மையிலேயே இந்த படத்தை ஒரு இந்தியர் இயக்கி இருந்தால் இந்த வரவேற்பு மற்றும் ஆஸ்கர் கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறியே ?
உதாரணம் ரஹ்மான் இசை அமைத்த " லகான் " படத்திற்கு இந்த அளவு வரவேற்பு இல்லை உலக அளவில் என்பது உண்மை மற்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்க பட்டு பின்னர் வெளியேற்ற பட்டது.
ரஹ்மானின் மற்ற படங்களை ஒப்பிடுகையில் இந்த படத்தின் இசை சுமார் என்பதே எனது கருத்து. ஆனால் இந்த படத்திற்கே இந்த அளவு வரவேற்பு உலக அளவில் என்றால் அவரின் மற்ற படங்களை உலக அளவில் எடுத்து சென்றால் அவரின் மதிப்பு என்னவென்று கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.
இன்று உலக அளவில் பெரிய இசை வல்லுனர்களாக காட்டி கொள்ளும் பல பாப் பாடகர்கள் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு ஆல்பத்தை வெளியிட்டு தன்னுடைய புகழை உலகம் முழுவதும் பறை சாற்றி கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய இசை அமைப்பாளர்கள் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களுக்கு இசை அமைத்து , அனைத்து படங்களிலும் ஆறு பாடல்களுக்கு மேல் இசை அமைத்து இன்னும் இந்திய அளவிலே மட்டும் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
எனினும் இந்த விருது , இந்திய இசை அமைப்பாளர்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்வதற்கு முதல் படியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னும் "இளையராஜா " போன்ற பெரிய ஜாம்பாவனை உலகம் அறியாமல் இருப்பதில் ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும் , இது ஒரு நல்ல தொடக்கம் என்பதே உண்மை.
வளர்க ரஹ்மான் புகழ்.
ப.பிரதீப்
வீழ்வது வெட்கம் அல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.
Monday, February 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரு இந்தியர் இந்த படத்தை இயக்கி இருந்தாலும் ஒரு வேளை விருது கிடைத்திருக்கும். தயாரிப்பு நிறுவனத்தால் எந்த அளவுக்கு படத்தை promote செய்ய முடிகிறது என்பது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். நிறைய பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். இந்திய தயாரிப்பாளர்களால் அந்த அளவுக்கு முடியாது. அமிர்கானால் லகான் படத்தை ஆஸ்கார் ஜூரி உறுப்பினர்கள் எல்லாருக்கும் போட்டு காண்பிக்க முடியவில்லை. அதுவும் அந்த படம் விருது பெறாததற்கு ஒரு காரணம் என்று பத்திரிகைகளில் படித்த ஞாபகம்.
உலகமயமாக்கலால் நமது தொழில்நுட்ப கலைஞர்கள் ஹாலிவுட் திரைபடங்களில் பணியாற்றும் வாய்ப்பு சமீப காலங்களில் அதிகமாகி இருக்கிறது. இதை ரஹ்மான் போன்றவர்கள் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இந்த தருணத்தில் ரஹ்மானை வாழ்த்துவோம்.விருதுக்காக பெருமை படுவோம். எதிர்காலத்தில் நேரடி இந்திய சினிமாக்களே சர்வதேச விருதுகளை குவிக்கட்டும்!
I agree with Varadha,
and another reason i think is ... lagan went in as a 'foreign movie' and SDM went in Hollywood category ...so there are lot of chances why lagan didn't get the award.......
Post a Comment