Wednesday, November 17, 2010

என்னத்த சொல்றது ?







செட்டியாரா ...... அவன் நல்ல விவிரமாதான் இருப்பான். தேவரா...... அவன் நல்ல வீரமாதான் இருப்பான். நாயக்கனா.......அவன் இப்படி இருப்பான்...இந்த ஜாதி காரன் இப்படி இருப்பான் என்று ஒவ்வொரு இனத்தையும் , ஒவ்வெரு ஜாதியையும் பேசுவதை நீங்கள் நடைமுறை வாழ்கையில் கேட்டு இருக்கலாம். அதாவது ஒரு ஜாதியை வைத்து அல்லது ஒரு இனத்தை வைத்து அவன் எப்படி இருப்பான் என்று யூகித்து விடுகின்றோம், அதற்கு ஒரு பழமொழியையும் வைத்து விடுகின்றோம். உண்மையில் அவன் அப்படி இல்லை என்றாலும் ...நீ இப்படிதான் என்று முடிவே செய்து விடுன்கின்றோம். இது உண்மைதானா?..

செட்டியார் இனத்தில் மட்டும்தான் மக்கள் விவரமாக இருகின்றார்களா.. மத்த இனத்து மக்கள் எல்லாம் ஏமாளிகளா...? ....வீரமானவர்கள் அனைவரும் தேவர் இனத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா....மத்த இனத்து மக்கள் எல்லாம் கோழைகளா? இது ஒரு வகையில் பேச்சுக்காக சொல்வது என்றாலும்...சில பேர் இதை உண்மை என்றே நினைத்து கொண்டு அவர்களிடம் உறவாடுவதுதான் பிரச்சினையே......அவன் ஒரு விஷத்தை சாதாரணமாக கூறி இருந்தாலும் ..இவன் இப்படிதான் கூறி இருப்பான் என்று நாமே ஒரு முடிவு செய்து கொள்வதுதான் வேடிக்கையானது. உண்மையில் எவனுடைய குணத்தையும் , அவன் வளர்ந்த மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை வைத்து யூகிகலாமே தவிர...எவனுடைய குணத்தையும் நம்மால் நிர்ணயிக்க முடியாது என்பதே உண்மை.

இதே போலதான் பார்பனியத்தை பற்றி பல பேர் சொல்லி கொண்டு இருப்பதையும் , கூறி கொண்டு இருபதையும் பார்த்திருப்போம். பெரியார் சொல்வது போல் அந்த காலத்தில் சரி .....அவர்கள் பார்பனியத்தை வளர்த்தார்கள். உண்மைதான். ஆனால் இந்த காலத்திலும் அவர்கள் இன்னும் அதே மன நிலையில் இருப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்....அந்த இனத்தில் உள்ள மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு இல்லாமலா இருந்து இருக்கும். அல்லது ஐய்யர் இனத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் இந்து மதத்தையும், ஜாதியையும் வளர்கின்றார்களா .....வேறு இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களா.....அவர்கள் எல்லாம் ஜாதியை வளர்கவே இல்லையா....? நமக்கு கீழும் ஒரு ஜாதி இருக்கின்றது என்று இருபவர்கள் அனைவரும் ஜாதியை வளர்த்து கொண்டுதான் இருகின்றார்கள்....இது உண்மைதானே.....அந்த இனத்தில் உள்ளவர்கள் எல்லாம் அப்படிதான் இருக்க வேண்டும் என்றால் ....பாரதியார் எப்படி வந்தார் பார்பனர் இனத்திலிருந்து.....பெரியார் எப்படி வந்தார் நாயகர் இனத்தில் இருந்து.......அவர்கள் புரட்சி செய்ய வில்லையா?

இதே போன்றுதான் இஸ்லாமிய இனத்தையே கேவல படுத்துவது என்று ஒரு கூட்டமே இருக்கின்றது...... இன்னமும் தங்குவதற்கு ஒரு வீடு தேடி அலையும் இஸ்லாமியார்களை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.....காரணம் அவர்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள மாட்டார்களாம் .....அவர்களும் சுத்தமாக இருக்க மாட்டார்களாம். .என்னமோ கிறிஸ்தவ , இந்து இனத்தவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் நியமான்வர்கள் என்பதை போல.....இந்து மதத்தில் தீவிரவாதத்தை வளர்க்கும் இயக்கம் இல்லாமலா இருக்கிறது?




ஆக ஒரு தனி பட்ட மனிதரின் நடவடிகையை வைத்து ஒரு இனத்தையே கூறுவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்படிதான் ஒரு முறை நண்பரிடம்......தீவிரவாதம் என்றால் இஸ்லாமிய இனத்தை குரிபிடுகிரிர்களே. ....அப்துல் கலாம் எந்த இனம் என்று கேட்டதற்கு .....அவர் மட்டும் என்ன அணு குண்டு, ராகேட் என்று ஆயுதம் தயாரிபதற்குதானே தலைவராக இருந்தார் என்றார் ............இந்த பதிலுக்கு அப்புறம்....அவரிடம் என்னத்த பேசுவது ?

என்னத்த சொல்றது ?

Thursday, September 16, 2010

எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!







பல மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் மகளை "pre -kg " இல் சேர்த்து விட்டோம் ஒரு நார்மலான பள்ளியில். ஜாதியில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் படிவத்தில் ஜாதி இடத்திற்கு ஒன்றும் போடாமல் விட்டு விட்டோம். அப்போது அவர்கள் பள்ளியில் ஆட்கள் சேர வேண்டும் என்பதற்காக சரி என்று ஏற்று கொண்டார்கள். ஆனால் சிறிது கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் உங்கள் ஜாதி என்ன என்று நச்சரித்து விட்டார்கள். நாங்களும் ஜாதியில் உடன்பாடு இல்லை , அதனால் ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை. "நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் , நாங்கள் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.

சரி,, கண்டிப்பாக கொண்டுக்கதான் வேண்டுமா என்று தெரிந்த சில வழகரிசர்களிடம் விசாரித்தபோது, அப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் இப்போது எல்லா பள்ளிகளிலும் , ஜாதியை கொடுக்க விருப்பம் இல்லை என்று பெற்றோர்கள் கூறினாலும், பள்ளி நிர்வாகம் விடுவதாக இல்லை, கட்டாயமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து விட்டால் , ஒரு விண்ணப்பம் எழுதி, அதில் என் குழந்தைக்கு ஜாதியை முன் வைத்து கொண்டிருக்கும் எந்த சலுகையும் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று ஒரு எங்களிடம் ஒரு ஐடியாவையும் கொடுத்தார். அதற்கும் ஒத்து வரவில்லை என்றால், வழக்கு போட்டு கொள்ளலாம் என்றார்.

அவர் சொல்வது சரிதான். பள்ளி நிர்வாகம் ஒத்து வரவில்லை என்றால் வழக்கு தொடரலாம். ஆனால் நாம் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நினைத்து அந்த பள்ளியும் அதே மாதிரி கேட்டு விட்டால் அந்த பள்ளியில் வழக்கு தொடர முடியும். ஆனால் அதற்கு பின்பு நமது குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க முடியுமா என்று நினைத்தால், கண்டிப்பாக முடியாது.பிரச்சினைதான் வளரும். ஜாதியிலும் உடன்பாடு இல்லை, ஆனால் பள்ளியிலும் சேர்கதான் வேண்டும். என்ன செய்வது என்று தெரிய வில்லை.ஒன்று சரி என்று ஜாதியை சொல்லி பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் நமது கொள்கை இதில் அடி பட்டு விடும். இல்லை கொள்கைதான் முக்கியம் என்று நினைத்தால் , குழந்தைகளை வீட்டில் வைத்து நாம்தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல..என்னதான் செய்வது......? ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள், இதில் கொள்கை பிடிப்பு அதிகம் உள்ளவர்கள் எல்லாம் இந்த சூழ்நிலையை எப்படி கையாண்டார்கள் என்று தெரிந்தால் நமக்கும் சிறிது புண்ணியமாக இருக்கும்..........

ஜாதியை தெரிவிப்பதினால், தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு நல்ல சலுகைகளும் கிடைப்பது உண்மைதான். இவ்வாறு தாழ்ந்த ஜாதியில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து படித்து, நல்ல வேளையிலும் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு , தன்னுடைய குழந்தைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று நினைகிரார்களா என்றால்.....இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்(ஜாதியில் விருப்பம் இல்லாதவர்கள்). இந்த சலுகையினால் ஓரளவு தாழ்ந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் முன்னேறி கொண்டு இருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சந்தோசம் முன்னேறட்டும்.பல நூற்றாண்டுகள் அடிமைகளாக , படிப்பறிவே இல்லாமல் இருந்தவர்கள் படிக்கதான் வேண்டும்...எல்லா சமுதாயரையும் போல முன்னேறதான் வேண்டும்.

ஆனால், நம்முடைய எண்ணம் ஜாதி என்ற ஒரு நிலையே இருக்க கூடாது என்பதுதான். ஆக இவ்வாறு சலுகைகளை பெற்று படித்து வந்தவர்கள் , தன்னுடைய அடுத்த வம்சதினற்கு ஜாதியை வைத்து வரும் எந்த சலுகையும் வேண்டாம் என்று உதறி தள்ளினால் ஓரளவு ஜாதி என்ற நிலையை குறைக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகத்தான் நான் கருதுகிறேன். பள்ளியில் ஜாதியை கேட்பது ஒரு விதத்தில் சலுகைகளுகாகதான் என்பதால், ஓரளவு முன்னேறியவர்கள் சலுகைகள் வேண்டாம் என்று ஜாதியை உதறி தள்ளினால், ஜாதி என்ற குறியீடு ஓரளவு நீக்க படும் , பள்ளி நிர்வாகமும் இதற்கு ஏதாவது வழி செய்யும்.

ஜாதி என்ற ஒரு நிலையை பள்ளியிலேயே நிறுத்தி விட்டோம் என்றால் ஓரளவு ஜாதியின் பயன் பாட்டை குறைத்து விடலாம். ஆனால் இதற்கு இந்த சமுதாயமும் , அரசாங்கமும் வழி விடுமா என்று யோசித்தால் கஷ்டம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இதை குறைபதற்கு, சிவப்பதிகாரம் படத்தில் சொல்வது போல " எதாச்சும் செய்யணும் சார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!"

Friday, July 23, 2010

அற்பங்களின் தேசபற்று





எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் தொலை காட்சியில் தேசிய கீதம் ஓடினால் கூட எழுந்து நின்று தேசத்தின் மீது பற்றை தெரிவிக்கும் பழக்கம் உடையவன். எனக்கு இந்த விஷயம் தெரிந்த போது சற்று வித்தியாசமாகவும் ஆச்சர்யமாகவும்தான் இருந்தது. உண்மையில் தேச பற்று என்பது தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதிலும், மூவர்ண கொடியின் சிறப்பை சொல்வதிலும், தேச தந்தை யார் என்று சொல்வதிலும் , தேசிய கீதத்தை யார் இயற்றினார்கள் என்று சொல்வதிலும் தான் இருக்கிறது என்றால் அப்பேற்பட்ட தேச பற்று எனக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய பேர் தேச பற்று என்பது கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்பதோடு முடிந்து விடுகிறது என்று நினைப்பார்கள் போலும். ஆனால் உண்மையாக அப்பேற்பட்ட சமுதாயத்தில்தான் நாம் வசித்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.

நம்மை நாமே சற்று கேட்டு கொண்டால், உண்மையாக தேச பற்று என்பது நம்மிடம் எந்த நிலையில் இருக்கிறது என்பது நமக்கு புரியும். ராணுவத்தில் ஆள் எடுக்கும் பொழுது கூட, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு , அங்கு பிடித்து இங்கு பிடித்து ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விடுகிறோம், விவரமே தெரியாத வயதில். அந்த 16 , 17 வயதில் உண்மையிலேயே தேச பற்று இருக்குமா என்று கேட்டால் சற்று கடினமே.

ஒரு விஷயம் புரிய வில்லை. நாம் வசிக்கும் வீடு சரி இல்லை என்றால் , அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டுக்கு சென்று விடுகிறோம். நான் வசிக்கும் ஏரியா மக்களே சரி இல்லை என்றால் , அந்த ஏரியா சரி இல்லை என்று கூறி வேறு ஊருக்கு சென்று விடுகிறோம். நாம் வேலை பார்க்கும் இடத்தில், சுற்றி உள்ளவர்கள் சரி இல்லை என்றாலோ அல்லது மேனேஜர் சரி இல்லை என்றாலோ , அந்த வேலையை விட்டே சென்று விடுகிறோம். இதுதான் உண்மையும் கூட. ஆக, நான் வசிக்கும் இடம் பிடிக்க வேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ள மக்கள் எனப்படும் சமுதாயம் மிகவும் முக்கியம். அதை வைத்துதான் ஒரு இடத்தையே நாம் தீர்மானம் செய்கின்றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது, உண்மையில் நம்மை சுற்றி உள்ள சமுதாயம் சரியாகதான் இருக்கிறதா ?

எப்பேர்பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? சற்று சிந்தித்து பாப்போம்.

*) தமிழ் நாட்டை எடுத்து கொண்டால், காவிரி பிரச்சினை. மும்பையை எடுத்து கொண்டால் மராட்டியர் பிரச்சினை. இன்னும் தமிழ் நாட்டை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிடமும் நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

*) இன்னும் சற்று உள்ளே சென்றால், முக்கியமாக ஜாதி பிரச்சினை, மத பிரச்சினை, இன பிரச்சினை.

சரி நமது அன்றாட வாழ்கையை எடுத்து கொள்வோம்....

சரி ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பி , ஆட்டோ வை பிடிக்க அழைத்தோம் என்றால், அவர்கள் கேட்கும் பணம்........இரண்டு மூன்று தடவை அவர்கள் ஆட்டோவில் சென்றால் அந்த ஆட்டோவையே வாங்கி விடலாம். அந்த அளவிற்கு இருக்கிறது. ஆட்டோவில் ஏறினால், மீட்டர் போட வேண்டும். எத்தனை ஆட்டோவில் மீட்டர் இருக்கிறது..? அப்படியே அவரை போட சொன்னோம் என்றால், அவர்கள் நம்மை கேனயனை விட கேவலமாக பார்த்து திட்டி , ஆட்டோவை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.

நம்மிடம் இரு சக்கர வாகனம் இருக்கிறது என்றால், இந்த மாநகரத்தில் ஒரு இடத்தில் இருந்து மறு இடத்திற்கு செல்வத்திற்குள், எவ்வளவு பிரச்சினை? முன்னாடி வாகனத்தில் செல்பவர்கள், பின்னாடி யார் வருகிறார்கள் என்று சற்றிலும் சிந்திக்காமல் எச்சிலை உமிழ்ந்து விட்டு செல்வார்கள்...இது முன்னாடி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் அல்ல....பஸ்ஸில் செல்பவர்களும் இப்படிதான் . இது மட்டும் அல்ல சிகரெட் சாம்பலை தட்டுவது..அல்லது அப்படியே அனைக்காமல் நடு ரோட்டில் போடுவது போன்ற பல கொடுமைகள்.

சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால், நம் மக்களிடம் இல்லாதது சுய ஒழுங்குதான். சரி....இந்த சுய ஒழுங்கை பாது காக்க நம்மிடம் உள்ள போலீஸ் காரர்கள் சுய ஒழுங்கோடுதான் இருக்கிறார்களா....? அதுவும் இல்லை. எங்கும் லஞ்சம்....எதிலும் லஞ்சம்.... ஏன்? போலீஸ் வேளையில் சேர்வதிலும் லஞ்சம்.....பின்பு அவர்களிடம் எங்கு நாம் சுய ஒழுங்கை பாது காக்க சொல்வது......வாய்ப்பே இல்லை.......சரி....அங்குதான் இல்லை....நீதிமன்றம் என்று சென்று நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் , நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள். எங்குதான் செல்வது......இவர்களிடம் கேட்டால் தேச பற்று என்பார்கள்..........இப்படி இருக்கும் சமுதாயத்தில் தேசபற்று எப்படி வரும் ?

ஒரு மாதத்திற்கு முன்பு , ஒரு நில வழக்கு முடிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நியாயமான வக்கீலிடம் சென்றால், அவர் விசாரித்து விட்டு உங்கள் நிலையில் நியாயம் இருக்கிறது என்றாலும் ....வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும் என்று சொல்ல என்னால் முடியாது....ஏன் என்றால் ஏன் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை....நீதிபதிக்கே லஞ்சம் கொடுத்து வழக்கை முடித்து கொண்டு இருக்கிறார்கள்.....போராடுவோம்....பார்போம் என்று கூறி விட்டார்.....இப்பேற்பட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் இருப்பது எல்லாம் தேச பற்று என்றால் ....தேச பற்றை என்னவென்று சொல்வது......?

இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை எடுதால் கூட , நம்மை சுற்றி உள்ளவர்கள் பலர் அலுப்பைகள் தான். இப்பேற்பட்ட அலுபைகள் இருக்கும் நாட்டில் , தேச பற்று என்பது எந்த நிலையில் இருக்கும்...அப்படியே இருந்தாலும் ,இந்த அலுபைகளிடமிருந்து எந்த அளவு தேச பற்று இருக்கும்? கேள்வி குறியே !!!!!!!!

ஜப்பான் நாடு சிறிய நாடாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியதற்கு காரணம் சுய ஒழுங்கே.....அந்த நாட்டில் எனக்கு சில வருடங்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு பார்த்த ஒரு சம்பவத்தோடு முடிக்கிறேன்......இங்கெல்லாம் நாம் சரக்கு அடித்து விட்டால் , அம்மா , அக்க, தங்கையை தவிர மற்ற அனைவரையும் கையை பிடுத்து இழுத்து பார்க்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். யாரையாவது வம்பு இழுத்து ஆக வேண்டும் .....அப்போதுதான் நமக்கு மனது சாந்தி அடையும்.....ஆனால் அங்கு அப்படி இல்லை....சரக்கு அடித்தாலும் அந்த மப்பிலும் அடுத்தவர்களை வம்பு இழுக்க மாட்டார்கள். ஒரு முறை வேலை காரணமாக வீட்டுக்கு கிளம்ப மணி அதிகாலை 2 ஆகிவிட்டது. வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தேன்....வரும் வழியில் ஒரு சிக்னல். என் முன்பு புல் மப்பில் ஒரு 25 வயது உள்ள ஆள் ஒருவர் சென்று கொண்டு இருந்தார் .....ரோட்டில் யாரும் இல்லை....அதனால் சிக்னலை கிராஸ் செய்து விடலாம் என்று நினைத்து முன்னோக்கி சென்று கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கு முன்பு சென்ற குடிமகன் அந்த மப்பிலும் கிரீன் சிக்னலுக்கு காத்து கொண்டு இருந்தார்..சரி என்று நானும் நின்று விட்டேன்......அதிகாலை 2 மணிக்கு.....இங்கு காலை 10 மணிக்கே சிக்னலை மதிக்க மாட்டோம்.....இதுதான் சுய ஒழுங்கு.

ஆக , தேச பற்று என்று சொல்லி ஊரை ஏமாற்றாமல் , ஏதாவது மாறுவதற்கு வழி செய்வோம்......

முன்பெல்லாம் கிரிக்கெட்டில் இந்திய ஆடினால் , நாம் வின் பண்ண வேண்டும் என்று ஒரு எண்ணம் வரும்....ஆனால் இப்போதெல்லம் அந்த மாதிரி எண்ணம் கனவில் கூட வருவது இல்லை.......

Sunday, June 6, 2010

ஏண்டா............ நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா?



சமீபத்தில் திருச்சிக்கு சென்று இருந்த போது உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் ஒரு கிறிஸ்தவர்.கல்லறையில் சடலத்தை வைத்து விட்டு , செபங்கள் ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, குழி தோண்டும் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டு இருந்தது.ஒரு வழியாக எல்லாம் முடிந்து, புதைக்க வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கையில், அங்கு கூடி இருந்தவர்கள் செய்த பஞ்சாயத்துதான் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.

- இறந்தவர் பெண் என்பதால், ஒருவர் அவருடைய மூத்த பையனை கூப்பிட்டு போய் மொட்டை அடித்து விட்டு வா என்று கூறினார். இன்னொருவர், அதெல்லாம் தேவை இல்லை....உண்மையான கிறிஸ்தவன் மொட்டை அடிக்க மாட்டான் என்று கூற, இருவருக்கும் இடையே நடந்த அந்த பார்வை பரிமாற்றம் அங்கு அடித்த மதிய வெயிலை விட கொஞ்சம் உஷ்ணம் அதிகமாகவே இருந்தது.
- ஒரு வழியாக அந்த பையன் மொட்டை அடித்து விடு வர, பார்க்கிறவர்கள் அனைவரையும் முகத்தை பார்க்க சொல்லி விட்டு, சவ பெட்டியை மூடி ஆணி அடிக்க ஆரம்பித்தார் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர். அப்போது மீண்டும் அந்த உண்மையான கிறிஸ்தவன் அந்த ஊழியரிடம், எதுவாக இருந்தாலும் ஒத்தை படையில் ஆணி அடித்து முடித்து விடுங்கள், இரட்டை படை வேண்டாம் என்று கூற, அப்போது அடித்து இருந்த ஆணி 8 . சொல்லவா வேண்டும்....உண்மையான கிறிஸ்தவன் மீண்டும் வெகுண்டு எழுந்து, இன்னொரு ஆணியை அடித்தேஆக வேண்டும் என்று கூறி, 9 ஆணியை வைத்து ஒத்த
படையில் அடித்து முடித்தார்கள்.
- ஒரு வழியாக பெட்டியை கீழே இறக்கி, மண்ணை போட்டு மூடி, தண்ணியை ஊற்றி மொழுகி, ஒரு சிலுவையையும் சொருகி முடிக்க...அடுத்து.....பால் தெளிக்கும் படலம் ஆரம்பித்தது. மீண்டும் அந்த பையனை கூப்பிட்டு பால் தெளிக்க சொல்ல, அவன் பாலை தெளித்து கையை சற்று லேசாக உதறினான். அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து, ஏன் இப்படி கையை உதறினாய்? அப்படி எல்லாம் உதற கூடாது என்று சொல்லி ஆளாளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிந்து அந்த பையனுக்கு ( 15 வயது இருக்கும்) , அம்மா இறந்த வலியை விட , இவர்கள் செய்த கூத்தில் ஏற்பட்ட வலிதான் அதிகமாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.

என்னிடம் இருந்த கேள்வி இதுதான்......
- மொட்டை அடிப்பதற்கும் , இறந்ததற்கும் என்ன சம்பந்தம்? முடியை கொடுப்பது ஒரு தியாகமா? அல்லது வருத்தத்தை மொட்டை அடித்துதான் காட்ட வேண்டுமா?
- பாலை தெளித்து உதறியது ஒரு குற்றமா? இன்னும் இது மாதிரியான சம்பிருதாயங்கள் இருக்கத்தான் வேண்டுமா? உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறும் இவர்கள், பைபிள் புத்தகத்தில் இருந்து , இது மாதிரி செய்ய சொல்லி இருக்கிறது என்று காட்ட முடியுமா....?

உண்மையில் இங்கு இருபவர்கள் எல்லாம் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? அப்படி உண்மை கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டால் , திருச்சியில்
இரண்டு விதமான கல்லறைகள் இருப்பதற்கான காரணத்தை கூற முடியுமா? சில பேருக்கு தெரிந்து இருக்கும், சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை...திருச்சியில் இரண்டு கல்லறைகள் உள்ளன..ஒன்று உயர்ந்த சாதி வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ..மற்றொன்று தாழ்ந்த சாதி உள்ளவர்களுக்கு. ...ஒருவன் இறந்து கல்லறையில் வைக்கும் போது கூட இந்த சாதி பிரிவினை தேவைதானா? ஒரு முறை திருமாவளவன் அவர்கள் இதை அறிந்து போராட்டம் நடத்தியதாக நியாபகம்.....அவ்வளவுதான்....இன்னமும் கிறிஸ்தவர்கள் என்று கூறி கொண்டு ஜாதியையும் , கல்யாணத்திற்கு முன்பு ஜோசியம் பார்க்கும் இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்றால் ...அவர்களிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றுதான்....
இயேசு கிறிஸ்து என்ன ஜாதி ? என்ன கோத்ரம்? என்ன நட்சத்திரம்?




- முக்கியமாக ....அது ஒன்ன ஒத்த படை, இரட்டை படை? இறந்ததற்கு மட்டும் அல்ல....கல்யாணத்திற்கு பொண்ணு பார்பதிலும் கூட , மாப்ளைக்கு ஒத்த படையில்தான் வயது இருக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை இங்கு நிலவி கொண்டுதான் இருக்கிறது. கல்யாணத்திற்கு மொய் வைப்பது கூட (101 , 1001 ) இந்த காரனதில்தானோ?
- ஒத்த படை என்று கூறும் ஒருவர் பிறந்தது...இருவர் இணைந்ததால்தான்....அது இரட்டை படை.
- தாய் வயிற்றில் இவர்கள் இருக்கும் மாதம் 10 .....அதுவும் இரட்டை படை.
இப்படி இருக்க.....எங்கிருந்து வந்தது இந்த ஒத்த படை.......தெரிந்தவர்கள்......பதில் இருந்தால் சொல்லவும்.....

ஒன்று மட்டும் தெரிகிறது.......1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது...........
சரி புரகிறது....ஒத்த படையிலேயே சொல்ற்கிறேன்......1001 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.........

Sunday, January 24, 2010

ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்



இன்றைய கால கட்டதில் நிறைய பேர் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கூறி கொண்டு "பிராடு மைன்ட்" ஆகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு வகை. இன்னும் சில பேர் இருப்பார்கள். அதாவது ஒரு தவறை ( என்று உலகம் சொல்வதை) யாருக்கும் தெரியாமல் செய்தால் அது தவறு இல்லை. ஆனால் பலருக்கு முன்பு செய்து விட்டால் அது தவறு என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். பொதுவாக இம்மாதிரியாக இருபவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உண்மையில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக அல்லது பெருமைக்காக நாங்கள் எல்லாம் "ப்ராட் மைன்ட்" என்று திரிபவர்கள். உதாரணத்திற்கு.......






- Pub மற்றும் பார் (bar ) போன்ற இடங்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அம்மாதிரியான இடத்திற்கு செல்பவர்களை பொதுவாக இவ்வுலகம் சரியான மதிப்போடு பார்ப்பது இல்லை. காரணம் கேட்டால், pubku சென்று தண்ணி அடிகிறார்கள் என்றும் , பெண்களோடு அப்படி, இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி இவர்கள் இங்கு certificate கொடுப்பார்கள். இவர்கள் சொல்வது சரியா அல்லது தவறா என்பது என் கேள்வி அல்ல? இதை சொல்லும் ஆட்கள் சரியானவர்களா என்பது தான் என் கேள்வி? இவர்கள் இப்படி வாய் கிழிய தம்பட்டம் அடித்து விட்டு , வீட்டில் சென்று யாருக்கும் தெரியாமல் கதவை சாதி கொண்டு மேட்டர் படம் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லது இதே செயலை வேறு எங்கேயாவது செய்து கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்து இம்மாதிரியான அனைத்து வக்கிர குணங்களையும் மனதில் வைத்து கொண்டு திரிவதை விட , pub அல்லது வேறு இடத்திற்கு சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மேல். எனக்கு தெரிந்து இது தவறும் இல்லை , இந்த இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.





- இன்னும் சில பேர் இருப்பார்கள். அழகான பெண்களை பார்ப்பது பிடிக்கும் , சைட் அடிப்பது பிடிக்கும் என்று சொல்லி கொண்டு கண்ணாலேயே கற்பழித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். இதை சொல்லிவிட்டு தங்களை "ப்ராட் மைன்ட்" என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
*) இவரும், இவரது மனைவியும் எங்கேயாவது செல்லும் போது, இவரோட மனைவியை யாரவது இது மாதிரி வலுவாக சைட் அடித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று சொன்னால் ஒத்து கொள்வார்களா. அல்லது இதே நிலை இவருடைய தங்கையை பார்த்து யாரவது சொன்னால் ஏற்று கொள்வார்களா.

ஏன் இந்த விளம்பரம் ? பார்த்தால் பார்த்தேன் என்று ஒத்து கொள்ள வேண்டியதுதானே.....எனக்கு தெரிந்து ஒரு திரைப்பட பாட்டில் வருவது போல, "ஆண்களில் ராமன் கிடையாது" என்பது உண்மைதான். ( ஆனால் உண்மையில் ராமன் அப்படிதானா என்று சீதையைத்தான் கேட்க வேண்டும் )

- போன வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அவர் மின்னஞ்சலில் அனைவர்க்கும் அழைப்பிதழை அனுப்பினார். அந்த அழைப்பிதழுக்கு பெயராக (1 .jpg ) என்று அனுப்பி இருந்தார். இதில் ஒரு தவறும் இல்லை. சில பேர் இதிலும் ஒரு குறை கூறி கொண்டு " அது எப்படி 1 .jpg என்று வைக்கலாம் . invitation .jpg " என்றுதான் வைத்து இருக்க வேண்டும் என்று அதிலும் குறை கூறி கொண்டு இருந்தார்கள். எனக்கு இதை கேட்டவுடன் ஜீரணிக்கவே முடிய வில்லை. இதில் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியுமா? ஆனால் இவர்கள் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கொண்டு இருப்பார்கள். என்ன சொல்வது என்றே எனக்கு தெரிய வில்லை.

உண்மையில் .......... ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்

Monday, January 11, 2010

sex and resolution

இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே பார்த்த நூறு பேரில் 40 பேர் கேட்கும் கேள்வி ...இந்த வருஷம் என்ன resolution எடுத்து இருக்கீங்க அப்படிங்கிறதுதான்?
உண்மையை சொல்ல போனால் இந்த வருஷம் மட்டும் அல்ல எல்லா வருசமும் பிறக்கும் போது கேட்கபடுகின்ற சில கேள்விகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்........ அதே போன்று எல்லா வருடமும் போல இந்த வருசமும் அதே பதிலைத்தான் சொல்ல போகிறோம்.

- தம் அடிகிரத குறைக்கணும்
- தண்ணி அடிகிரத குறைக்கணும்
- தொப்பைய குறைக்கணும்

இது மாதிரி பல. என்னைய கேட்டா இது மாதிரி சொல்றவங்க வாயதான் குறைக்கணும் முதல்ல. ஏன் என்றால் , இது மாதிரி சொல்றவங்க சொல்லிகிட்டுதான் இருப்பாங்களே தவிர செய்வதாக தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் , மேலே சொன்ன விசயங்களை கொஞ்சம் முயன்றால் செய்து விடலாம். ஆனால் முடியாத சில காரியங்கள், நம் உள்மனதில் ஆணி வைத்து அடித்ததை போன்ற சில விஷயங்கள் மனதை விட்டு அகறாமல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அது மாதிரியான விஷயங்கள் நமக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. அது போன்ற சில விசயங்களை நாம் புது வருடம் அதுவுமாக அகற்ற நினைத்தால் நலம் என்று தோன்றுகிறது. அது போன்ற விசயங்களில் சில ..................................

1 ) தற்போது நடந்த திருநெல்வேலி சம்பவத்தை எடுத்து கொள்வோம். அனைவரும் அந்த அரசியல்வாதிகளையே குறை கூறினாலும், மக்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் செய்து இருக்கலாமே. அவர்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அடுத்தவர்களுக்கு நாம் மற்ற காரியத்தில் உதவி செய்யாமல் இருந்தாலும் , உயிர் போகும் தருவாயிலாவது உதவி செய்து இருக்கலாம். இது மாதிரி காரியங்களில் நாம் உதவி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கமும் ஒரு காரணமாகவே அமைகிறது. அப்படி யாரவது உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவரை அலையவிட்டு , கேள்வி கணைகளை அவரிடம் தொடுத்து , அடுத்த தடவை அவர் நினைத்தாலும் அவரை செய்யவிடாமல் தடுப்பது , இந்த அரசாங்கமும் , காவல்துறையுமே. இனி வரும் காலங்களில் அரசாங்கம் , இது மாதிரி அவசர காலங்களில் உதவுபவர்களை , எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம் என்று கூறினால் , இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழி என்று தோன்றுகிறது.

2 ) அலுவலங்களில் நடக்கும் அரசியல். அரசியல் இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலங்களும் அதற்கு விதி விலக்கல்ல. சில பேர் இன்னும் , தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அடுத்தவர் வேலைக்கு ஆப்பு வைப்பது போன்ற சில கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவர்கள் இப்படி செய்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

3 ) எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும், உலகமே தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும் , இன்னமும் கேவலமான விஷயங்கள் நமக்கு தெரிந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாணத்தின் போது வாய்கூசாமல் கேட்கப்படும் வரதட்சணை பற்றிதான் சொல்கிறேன். சில பேர் சொல்வது உண்டு, இப்போது உள்ள generation மாறி விட்டது.மாப்பிள்ளை கேட்பது இல்லை, அவர்களுடைய தாய் , தந்தை தான் கேட்கிறார்கள் என்று. தெரியாமல் தான் கேட்கிறேன் ? இதுமாதிரி சொல்கிறவர்கள் அனைவரும் , தன்னுடைய தாய் தந்தையை கேட்டுதான் அனைத்து காரியத்தையும் செய்கிறார்களா ? கேட்காமல் தடுக்கவேண்டும் என்றால் தாரளமாக தடுக்கலாம். இது மாதிரி கேவலமான மக்களை வைத்து கொண்டு இன்னும் இந்தியா வல்லரசு ஆக போகிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ... காமெடியாகத்தான் இருக்கிறது.

தினமலர் நாளிதழில் அந்துமணி பக்கதில் ஒரு பெண் , அவருக்கு வரதட்சணை சம்பந்தமாக எழுதிய ஒரு கடிதத்தில் கிழித்து உள்ளார். கட்டாயமாக படிக்கவும்.

http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1135

4 ) நமக்கு தெரிந்து , நம்முடைய சொந்தங்கள் அல்லது நம்முடைய நண்பர்கள் கஷ்ட படும்பொழுது , அவர்களுக்கு பணம் தேவை என்று தெரிந்தும், "கொடுத்தால் வராது" என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் "கோவில்" என்று யாரவது கேட்டால், அதற்காக முழு பணத்தையும் தருவார்கள் . எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிலிக்கு சென்று ஆயிர, லட்ச, கோடி ரூபாய்களை உண்டியலில் செலுத்தும் உள்ளங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. கேட்டால் சாமி குத்தம் ஆகி விடுமாம். சில பேர் நன்கொடை என்று கோவிலுக்கு கொடுப்பார்கள், காரணம் விளம்பரம் ஒன்று மட்டுமே. இன்னமும் சில கோவில்களில் , "உபயம்" என்று Fan , ஸ்பீக்கர் என்று பல இடங்களில் இவர்களுடைய பெயர்கள் பொரித்து இருப்பதாய் பார்க்கலாம்.

இது மாதிரியான கேவலமான புத்தி உடைய அல்பமானவர்கள் , நம்மில் பலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றோம். முடிந்த அளவுக்கு இது போன்ற விசயங்களை புது வருடம் அதுவுமாக மாற்ற முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.

புரிகிறது .....செக்ஸ் என்று சொல்லிவிட்டு அந்த விஷயத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறேனா......கீழே உள்ள லிங்கை படிக்கவும். நம்மில் உள்ள நாமை பிரித்து மேய்ந்து இருக்கிறார் ஒருவர். புதிய பதிவர்தான். படித்து தங்களுடைய பொன்னான கருத்துகளை முடிந்த அளவுக்கு இடவும்....


http://piesasu.blogspot.com/