Sunday, January 24, 2010

ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்இன்றைய கால கட்டதில் நிறைய பேர் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கூறி கொண்டு "பிராடு மைன்ட்" ஆகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு வகை. இன்னும் சில பேர் இருப்பார்கள். அதாவது ஒரு தவறை ( என்று உலகம் சொல்வதை) யாருக்கும் தெரியாமல் செய்தால் அது தவறு இல்லை. ஆனால் பலருக்கு முன்பு செய்து விட்டால் அது தவறு என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். பொதுவாக இம்மாதிரியாக இருபவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உண்மையில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக அல்லது பெருமைக்காக நாங்கள் எல்லாம் "ப்ராட் மைன்ட்" என்று திரிபவர்கள். உதாரணத்திற்கு.......


- Pub மற்றும் பார் (bar ) போன்ற இடங்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அம்மாதிரியான இடத்திற்கு செல்பவர்களை பொதுவாக இவ்வுலகம் சரியான மதிப்போடு பார்ப்பது இல்லை. காரணம் கேட்டால், pubku சென்று தண்ணி அடிகிறார்கள் என்றும் , பெண்களோடு அப்படி, இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி இவர்கள் இங்கு certificate கொடுப்பார்கள். இவர்கள் சொல்வது சரியா அல்லது தவறா என்பது என் கேள்வி அல்ல? இதை சொல்லும் ஆட்கள் சரியானவர்களா என்பது தான் என் கேள்வி? இவர்கள் இப்படி வாய் கிழிய தம்பட்டம் அடித்து விட்டு , வீட்டில் சென்று யாருக்கும் தெரியாமல் கதவை சாதி கொண்டு மேட்டர் படம் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லது இதே செயலை வேறு எங்கேயாவது செய்து கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்து இம்மாதிரியான அனைத்து வக்கிர குணங்களையும் மனதில் வைத்து கொண்டு திரிவதை விட , pub அல்லது வேறு இடத்திற்கு சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மேல். எனக்கு தெரிந்து இது தவறும் இல்லை , இந்த இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

- இன்னும் சில பேர் இருப்பார்கள். அழகான பெண்களை பார்ப்பது பிடிக்கும் , சைட் அடிப்பது பிடிக்கும் என்று சொல்லி கொண்டு கண்ணாலேயே கற்பழித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். இதை சொல்லிவிட்டு தங்களை "ப்ராட் மைன்ட்" என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
*) இவரும், இவரது மனைவியும் எங்கேயாவது செல்லும் போது, இவரோட மனைவியை யாரவது இது மாதிரி வலுவாக சைட் அடித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று சொன்னால் ஒத்து கொள்வார்களா. அல்லது இதே நிலை இவருடைய தங்கையை பார்த்து யாரவது சொன்னால் ஏற்று கொள்வார்களா.

ஏன் இந்த விளம்பரம் ? பார்த்தால் பார்த்தேன் என்று ஒத்து கொள்ள வேண்டியதுதானே.....எனக்கு தெரிந்து ஒரு திரைப்பட பாட்டில் வருவது போல, "ஆண்களில் ராமன் கிடையாது" என்பது உண்மைதான். ( ஆனால் உண்மையில் ராமன் அப்படிதானா என்று சீதையைத்தான் கேட்க வேண்டும் )

- போன வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அவர் மின்னஞ்சலில் அனைவர்க்கும் அழைப்பிதழை அனுப்பினார். அந்த அழைப்பிதழுக்கு பெயராக (1 .jpg ) என்று அனுப்பி இருந்தார். இதில் ஒரு தவறும் இல்லை. சில பேர் இதிலும் ஒரு குறை கூறி கொண்டு " அது எப்படி 1 .jpg என்று வைக்கலாம் . invitation .jpg " என்றுதான் வைத்து இருக்க வேண்டும் என்று அதிலும் குறை கூறி கொண்டு இருந்தார்கள். எனக்கு இதை கேட்டவுடன் ஜீரணிக்கவே முடிய வில்லை. இதில் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியுமா? ஆனால் இவர்கள் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கொண்டு இருப்பார்கள். என்ன சொல்வது என்றே எனக்கு தெரிய வில்லை.

உண்மையில் .......... ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்

9 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

இயல்பாக... யதார்த்தமாக இருப்பவனை
நம்பலாம். ஆனால், இந்த ப்ராட் மைண்ட் ஆசாமிகளை
நம்பவே முடியாது ...

திவ்யாஹரி said...

நல்ல பகிர்வு..

BULLET மணி said...

உண்மையான இடுகை என்று சொல்லலாம்.

BULLET மணி said...

இன்னொரு கோஸ்டி இருக்கு அழகான பொண்ணுங்கள தங்கச்சி கூப்பிட மாட்டாங்க
அந்த பொண்ணு கூடவே இவங்கள பொருத்தவர அந்த பொண்ண விட இவங்க நினைக்கிற அழகு குறைவா இருக்கும் ஒரு பொண்ணு அந்த பொண்ண தங்கைன்னு சொல்லி தூது அனுப்பி விளையாடுவாங்க தலைவனும், தலைவியும்...
அந்த பொண்ணோட மனசில தாழ்வு மன்ப்பான்மை ஏற்படுத்தி சகோதரத்துவத்த வளப்பாங்க.
அழகான பொண்ணுங்ககிட்ட சகோதரத்துவ வராது

Pradeep said...

Thanks to Ramamoorthy, Divya Hari and Bullet Mani.
Thanks for your support.

அண்ணாமலையான் said...

கரெக்ட்தான்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Elamurugan said...

1.jpg யை invitation.jpg என்று வைக்குமாறு அறிவுறுத்துவதில் ஏதும் தவறு இருபதாக தெரியவில்லை , காரணம் ஒரு ஒழுங்கு முறை அனைத்து செயல்களிலும் உள்ள போது அங்கே தவறுகள் குறையும்,மற்றபடி உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவை

Post a Comment