Sunday, January 24, 2010

ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்



இன்றைய கால கட்டதில் நிறைய பேர் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கூறி கொண்டு "பிராடு மைன்ட்" ஆகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.இது ஒரு வகை. இன்னும் சில பேர் இருப்பார்கள். அதாவது ஒரு தவறை ( என்று உலகம் சொல்வதை) யாருக்கும் தெரியாமல் செய்தால் அது தவறு இல்லை. ஆனால் பலருக்கு முன்பு செய்து விட்டால் அது தவறு என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். பொதுவாக இம்மாதிரியாக இருபவர்கள் ஒரு குறுகிய வட்டத்தில் உண்மையில் வாழ்ந்து கொண்டு ஊருக்காக அல்லது பெருமைக்காக நாங்கள் எல்லாம் "ப்ராட் மைன்ட்" என்று திரிபவர்கள். உதாரணத்திற்கு.......






- Pub மற்றும் பார் (bar ) போன்ற இடங்களை உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். அம்மாதிரியான இடத்திற்கு செல்பவர்களை பொதுவாக இவ்வுலகம் சரியான மதிப்போடு பார்ப்பது இல்லை. காரணம் கேட்டால், pubku சென்று தண்ணி அடிகிறார்கள் என்றும் , பெண்களோடு அப்படி, இப்படி இருக்கிறார்கள் என்றும் சொல்லி இவர்கள் இங்கு certificate கொடுப்பார்கள். இவர்கள் சொல்வது சரியா அல்லது தவறா என்பது என் கேள்வி அல்ல? இதை சொல்லும் ஆட்கள் சரியானவர்களா என்பது தான் என் கேள்வி? இவர்கள் இப்படி வாய் கிழிய தம்பட்டம் அடித்து விட்டு , வீட்டில் சென்று யாருக்கும் தெரியாமல் கதவை சாதி கொண்டு மேட்டர் படம் பார்த்து கொண்டு இருப்பார்கள் அல்லது இதே செயலை வேறு எங்கேயாவது செய்து கொண்டு இருப்பார்கள். எனக்கு தெரிந்து இம்மாதிரியான அனைத்து வக்கிர குணங்களையும் மனதில் வைத்து கொண்டு திரிவதை விட , pub அல்லது வேறு இடத்திற்கு சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது மேல். எனக்கு தெரிந்து இது தவறும் இல்லை , இந்த இருவருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.





- இன்னும் சில பேர் இருப்பார்கள். அழகான பெண்களை பார்ப்பது பிடிக்கும் , சைட் அடிப்பது பிடிக்கும் என்று சொல்லி கொண்டு கண்ணாலேயே கற்பழித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள். இதை சொல்லிவிட்டு தங்களை "ப்ராட் மைன்ட்" என்று சொல்லி கொண்டு இருப்பார்கள். இவர்களிடம் சில கேள்விகள் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
*) இவரும், இவரது மனைவியும் எங்கேயாவது செல்லும் போது, இவரோட மனைவியை யாரவது இது மாதிரி வலுவாக சைட் அடித்து விட்டு, " அழகை ரசிப்பது தவறு இல்லை, வர்ணிப்பது தான் தவறு" என்று சொன்னால் ஒத்து கொள்வார்களா. அல்லது இதே நிலை இவருடைய தங்கையை பார்த்து யாரவது சொன்னால் ஏற்று கொள்வார்களா.

ஏன் இந்த விளம்பரம் ? பார்த்தால் பார்த்தேன் என்று ஒத்து கொள்ள வேண்டியதுதானே.....எனக்கு தெரிந்து ஒரு திரைப்பட பாட்டில் வருவது போல, "ஆண்களில் ராமன் கிடையாது" என்பது உண்மைதான். ( ஆனால் உண்மையில் ராமன் அப்படிதானா என்று சீதையைத்தான் கேட்க வேண்டும் )

- போன வாரத்தில் நண்பர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அவர் மின்னஞ்சலில் அனைவர்க்கும் அழைப்பிதழை அனுப்பினார். அந்த அழைப்பிதழுக்கு பெயராக (1 .jpg ) என்று அனுப்பி இருந்தார். இதில் ஒரு தவறும் இல்லை. சில பேர் இதிலும் ஒரு குறை கூறி கொண்டு " அது எப்படி 1 .jpg என்று வைக்கலாம் . invitation .jpg " என்றுதான் வைத்து இருக்க வேண்டும் என்று அதிலும் குறை கூறி கொண்டு இருந்தார்கள். எனக்கு இதை கேட்டவுடன் ஜீரணிக்கவே முடிய வில்லை. இதில் எல்லாம் குறை கண்டு பிடிக்க முடியுமா? ஆனால் இவர்கள் தங்களை "ப்ராட் மைன்ட்" என்று கொண்டு இருப்பார்கள். என்ன சொல்வது என்றே எனக்கு தெரிய வில்லை.

உண்மையில் .......... ப்ராட் மைன்ட் = பிராடு + மைன்ட்

Monday, January 11, 2010

sex and resolution

இந்த வருஷம் பிறந்ததிலிருந்தே பார்த்த நூறு பேரில் 40 பேர் கேட்கும் கேள்வி ...இந்த வருஷம் என்ன resolution எடுத்து இருக்கீங்க அப்படிங்கிறதுதான்?
உண்மையை சொல்ல போனால் இந்த வருஷம் மட்டும் அல்ல எல்லா வருசமும் பிறக்கும் போது கேட்கபடுகின்ற சில கேள்விகளில் இதுவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்........ அதே போன்று எல்லா வருடமும் போல இந்த வருசமும் அதே பதிலைத்தான் சொல்ல போகிறோம்.

- தம் அடிகிரத குறைக்கணும்
- தண்ணி அடிகிரத குறைக்கணும்
- தொப்பைய குறைக்கணும்

இது மாதிரி பல. என்னைய கேட்டா இது மாதிரி சொல்றவங்க வாயதான் குறைக்கணும் முதல்ல. ஏன் என்றால் , இது மாதிரி சொல்றவங்க சொல்லிகிட்டுதான் இருப்பாங்களே தவிர செய்வதாக தெரியவில்லை.

ஆனால் உண்மை என்னவென்றால் , மேலே சொன்ன விசயங்களை கொஞ்சம் முயன்றால் செய்து விடலாம். ஆனால் முடியாத சில காரியங்கள், நம் உள்மனதில் ஆணி வைத்து அடித்ததை போன்ற சில விஷயங்கள் மனதை விட்டு அகறாமல் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அது மாதிரியான விஷயங்கள் நமக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்கள் யாருக்கும் தெரியாது. அது போன்ற சில விசயங்களை நாம் புது வருடம் அதுவுமாக அகற்ற நினைத்தால் நலம் என்று தோன்றுகிறது. அது போன்ற விசயங்களில் சில ..................................

1 ) தற்போது நடந்த திருநெல்வேலி சம்பவத்தை எடுத்து கொள்வோம். அனைவரும் அந்த அரசியல்வாதிகளையே குறை கூறினாலும், மக்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் செய்து இருக்கலாமே. அவர்களும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள். அடுத்தவர்களுக்கு நாம் மற்ற காரியத்தில் உதவி செய்யாமல் இருந்தாலும் , உயிர் போகும் தருவாயிலாவது உதவி செய்து இருக்கலாம். இது மாதிரி காரியங்களில் நாம் உதவி செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கமும் ஒரு காரணமாகவே அமைகிறது. அப்படி யாரவது உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தால் அவரை அலையவிட்டு , கேள்வி கணைகளை அவரிடம் தொடுத்து , அடுத்த தடவை அவர் நினைத்தாலும் அவரை செய்யவிடாமல் தடுப்பது , இந்த அரசாங்கமும் , காவல்துறையுமே. இனி வரும் காலங்களில் அரசாங்கம் , இது மாதிரி அவசர காலங்களில் உதவுபவர்களை , எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம் என்று கூறினால் , இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழி என்று தோன்றுகிறது.

2 ) அலுவலங்களில் நடக்கும் அரசியல். அரசியல் இல்லாத இடமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலங்களும் அதற்கு விதி விலக்கல்ல. சில பேர் இன்னும் , தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அடுத்தவர் வேலைக்கு ஆப்பு வைப்பது போன்ற சில கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவர்கள் இப்படி செய்து என்ன சாதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

3 ) எவ்வளவுதான் காலங்கள் மாறினாலும், உலகமே தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும் , இன்னமும் கேவலமான விஷயங்கள் நமக்கு தெரிந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கல்யாணத்தின் போது வாய்கூசாமல் கேட்கப்படும் வரதட்சணை பற்றிதான் சொல்கிறேன். சில பேர் சொல்வது உண்டு, இப்போது உள்ள generation மாறி விட்டது.மாப்பிள்ளை கேட்பது இல்லை, அவர்களுடைய தாய் , தந்தை தான் கேட்கிறார்கள் என்று. தெரியாமல் தான் கேட்கிறேன் ? இதுமாதிரி சொல்கிறவர்கள் அனைவரும் , தன்னுடைய தாய் தந்தையை கேட்டுதான் அனைத்து காரியத்தையும் செய்கிறார்களா ? கேட்காமல் தடுக்கவேண்டும் என்றால் தாரளமாக தடுக்கலாம். இது மாதிரி கேவலமான மக்களை வைத்து கொண்டு இன்னும் இந்தியா வல்லரசு ஆக போகிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறோம் ... காமெடியாகத்தான் இருக்கிறது.

தினமலர் நாளிதழில் அந்துமணி பக்கதில் ஒரு பெண் , அவருக்கு வரதட்சணை சம்பந்தமாக எழுதிய ஒரு கடிதத்தில் கிழித்து உள்ளார். கட்டாயமாக படிக்கவும்.

http://www.dinamalar.com/Supplementary/varamalar_detail.asp?news_id=1135

4 ) நமக்கு தெரிந்து , நம்முடைய சொந்தங்கள் அல்லது நம்முடைய நண்பர்கள் கஷ்ட படும்பொழுது , அவர்களுக்கு பணம் தேவை என்று தெரிந்தும், "கொடுத்தால் வராது" என்ற ஒரே காரணத்திற்காக கொடுக்காமல் இருக்கும் நல்ல உள்ளங்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இப்படி பட்ட நல்ல உள்ளங்கள் "கோவில்" என்று யாரவது கேட்டால், அதற்காக முழு பணத்தையும் தருவார்கள் . எடுத்துக்காட்டாக, திருப்பதி கோவிலிக்கு சென்று ஆயிர, லட்ச, கோடி ரூபாய்களை உண்டியலில் செலுத்தும் உள்ளங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. கேட்டால் சாமி குத்தம் ஆகி விடுமாம். சில பேர் நன்கொடை என்று கோவிலுக்கு கொடுப்பார்கள், காரணம் விளம்பரம் ஒன்று மட்டுமே. இன்னமும் சில கோவில்களில் , "உபயம்" என்று Fan , ஸ்பீக்கர் என்று பல இடங்களில் இவர்களுடைய பெயர்கள் பொரித்து இருப்பதாய் பார்க்கலாம்.

இது மாதிரியான கேவலமான புத்தி உடைய அல்பமானவர்கள் , நம்மில் பலர் இருந்து கொண்டுதான் இருக்கின்றோம். முடிந்த அளவுக்கு இது போன்ற விசயங்களை புது வருடம் அதுவுமாக மாற்ற முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது.

புரிகிறது .....செக்ஸ் என்று சொல்லிவிட்டு அந்த விஷயத்தை இன்னும் எடுக்காமல் இருக்கிறேனா......கீழே உள்ள லிங்கை படிக்கவும். நம்மில் உள்ள நாமை பிரித்து மேய்ந்து இருக்கிறார் ஒருவர். புதிய பதிவர்தான். படித்து தங்களுடைய பொன்னான கருத்துகளை முடிந்த அளவுக்கு இடவும்....


http://piesasu.blogspot.com/