பார்த்ததும் காதல் தோன்றி காதல் செய்பவர்களை பார்த்தால் முன்பெல்லாம் ஏற்று கொள்ள மனம் மறுத்ததுண்டு. அது எப்படி பார்த்ததும் காதல் தோன்றும் ? அவ்வாறு தோன்றினாலும் அது எவ்வாறு நிலைக்கும் ? ஒருவருடைய குணாதிசயங்கள் தெரியாமல் ஒருவரை காதல் செய்வது என்பது சரியானதா ? என்றெல்லாம் சிந்தித்தது உண்டு.
ஆனால் அதுவே இங்கு நடக்கும் திருமண முறைகளை பார்க்கும் பொழுது " பார்த்ததும் காதல் என்பதற்கும் ,இங்கு நடக்கும் திருமண முறைகளுக்கும் " பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிய வில்லை.
இங்கு திருமணம் எவ்வாறு நடைபெறுகிறது?
ஆண் வீட்டிலிருந்து பெண் வீட்டுக்கு ஒரு புகைபடம் , அது போல் பெண் வீட்டிலிருந்து ஒரு புகைப்படம் ஆண் வீட்டிற்கு . ஆண் , பெண் படத்தை பார்கிறான். அழகாக இருக்கிறாளா , அவன் நினைத்தவாறு இருக்கிறாளா என்று பார்த்து விட்டு அவ்வாறு இருந்தால் சரி என்று சொல்கிறான். அது போல பெண் , அவன் படத்தை பார்த்து ஸ்மார்டாக இருக்கிறானா என்று பார்த்து விட்டு சரி என்று சொல்கிறாள் . இருவீட்டிலும் சரி என்றால் அடுத்த கட்ட பேச்சுக்கு தயாராகி இறுதியாக திருமணத்தில் சென்று முடிகிறது.
கூட்டி கழித்து பார்த்தால் இரண்டுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை. பெண் பார்க்க செல்லும் பொது , எவ்வளவு பெரிய வாயாடியாக இருந்தாலும் அல்லது அடங்கா பிடாரியாக இருந்தாலும் , சாதுவாக , அமைதியாக நின்று விட்டுத்தான் செல்லும். அதை வைத்து எவ்வாறு பெண்ணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்?
அதுபோல் எவ்வளவு பெரிய தண்ணி லாரியாக இருந்தாலும் , அவன் அந்த இடத்தில் சாந்த சொருபியாக இருந்து விட்டுத்தான் செல்வான். இதை வைத்து எவ்வாறு ஆணின் குணாதிசயங்களை நிர்ணயிக்க முடியும்? ஆனால் இவ்வாறுதான் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது இந்த நாட்டில்.
இவ்வாறு விவாதித்தோம் என்றால் சில பேர் இவ்வாறு சொல்வதுண்டு. குடும்பத்தின் பின்னணியை வைத்துதான் நாங்கள் பெண்/ ஆண் தீர்வு செய்கிறோம். அந்த குடும்பத்தில் பிறந்த பெண்/ ஆண் தவறானவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்று.
இது சாத்தியம்தானா? நல்ல பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாகத்தான் வளர்கிரார்களா? அல்லது தாய் , தந்தை கெட்ட வழியில் சென்றாலும் அவர்களிடம் வளரும் குழந்தைகள் அனைவரும் கெட்டவர்களாக தான் வளர்கிரார்களா? ஆக தாய் தந்தையரை வைத்து பிள்ளைகளை தரம் பிரிப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆக ஒருவரை பற்றி ஒருவருக்கு சரியாக தெரியாமல் , மாத வருமானம் மற்றும் குடும்ப பின்னணியை வைத்து நடக்கும் திருமணம் சரிதானா?
என்னை பொறுத்த வரையில் இங்கு நடக்கும் திருமண முறைகள் ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு திருமணம் நடந்து பின்பு ஒருவருக்கு ஒருவர் பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து வரை போகும் மக்களை எண்ணி விட முடியும். இன்னும் சில குடும்பங்களில் விவாகரத்து என்று பேசினாலே குடும்ப மானம் போய்விடும் என்று சொல்லி , அந்த வாழ்கையை விட்டு வெளியேறவும் முடியாமல் , வாழவும் பிடிக்காமல் வாழ்ந்து செத்து கொண்டிருக்கும் பெண்கள் எத்தனையோ பேர். இதற்குள் குழந்தை பிறந்து விட்டால் , அவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருபவர்கள் நிறைய பேர்.
ஆக இங்கு நடக்கும் திருமண முறைகள் சரிதானா என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை சரிதான் என்றால் , பார்த்ததும் காதல் என்பதை நாம் என் ஏற்று கொள்ள மறுக்கிறோம்?
ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்.
Saturday, March 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
I think love marriage and arrange marriage both carries their own advantages and disadvantages.In all the cases if the couples are able to achieve mutual understanding no issues.If they are able to adjust on various differences both the marraiges are good otherwise it will be bad.
திருமணத்தைப் பற்றி நீங்கள் எழுதியது சரிதான். இருந்தாலும் எதிலும் சில நன்மைகளும் உண்டு. அதே போல் பார்த்தது காதல் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.அதிலும் குறைகள் உண்டு. யோசித்து பாருங்கல்.புரியும். இதெல்லாம் சமுதாயத்திற்கு எழுதப்பட்ட விதி.
The fact what you have told is obviously correct, but I dont accept that who are getting love marriage are living a smooth, even I say that who are getting love marriage are more prone to problems because how they behaved during their love life will be different from the life after marriage, there comes a problem between them. So you cant say that love marriage is the best...
நன்றி சுதர்சன் .
நன்றி ராம். பார்த்ததும் காதல் என்பதை சரி என்று சொல்ல வில்லை. ஆனால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே எனது கருத்து. நன்றி .
நன்றி Mr.H
Thanks Mr. Anonoymous c.pradeep
இரண்டிலும் சாதக பாதகங்கள் இருக்கிறது.
எதுவாக இருந்தாலும்
அதை நாம் எந்த அளவுக்கு நம்புகிறோம் என்பதே முக்கியம்.
ஆர்வீஅரசு
பதிவாளருக்கு பெண் பார்க்கிறார்கள். அவரது கவலையும் குழப்பமும் புரிகிறது. ஹிஹி!
நூறு சதவிகிதம் சரியான கருத்து பிரதீப் ,
காதல் திருமணத்திற்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை ,ஒன்றை தவிர ...நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பெற்றோர்கள் ,தன் மகன்/மகள் இன்றளவும் நம் சொல்லிற்கு மதிப்பு கொடுத்து நாம் பார்க்கும் வரனை திருமணம் செய்கிறாள்/செய்கிறான் என்ற மன திருப்தியாகத்தான் அது இருக்கும்.
மற்றபடி சந்தோஷமான திருமண வாழ்விற்கு மணமக்களின் வாழ்வியல் புரிதல் தான் உதவி செய்யுமே தவிர மற்றபடி திருமண முறைகள் எந்த விதத்திலும் துணை நிற்காது என்பது எனது எண்ணம்.
Post a Comment