Sunday, April 26, 2009

1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.



சென்ற வாரம், தற்செயலாக ஒரு நல்ல பாம்பு திருச்சியில் உள்ள எங்கள் வீட்டின் குளியலறையில் புகுந்து விட்டது (வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை). இது எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது. இதை பார்த்த எங்கள் வீட்டின் பின்புறம் உள்ளவர்கள் என் அம்மாவிடம் சொல்ல , அவர் பதறி போய் வீட்டில் கதவை எல்லாம் அடைத்து விட்டு எங்களுடைய நண்பர்களை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.



அவர்கள் குளியலறையில் எல்லா இடத்தையும் அலசியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. பின்பு அடைத்த கதவை திறந்து வீட்டில் உள்ளே தேடும் போது பாம்பு கண்ணில் தென்பட்டிருக்கிறது(அந்த இடத்தில நின்றுதான் எங்கள் அம்மா கதவை எல்லாம் அடைத்து இருக்கிறார். நல்ல வேலை பாம்பு ஒன்றும் செய்யவில்லை. உண்மையிலேய அது நல்ல பாம்புதான் போல).



பின்பு நண்பர் ஒருவர் அதை விரட்டுவதற்காக, ஒரு குச்சியை எடுத்து விரட்டும் போது பாம்பு படம் எடுத்து மிரட்டி இருக்கிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது போல் அனைவரும் விலக, பின்பு அவர் சின்ன குச்சி சரி படாது என்று நினைத்து பெரிய இரும்பு எதுவும் கிடைக்குமா என்று வெளியில் சென்று விட்டார்.இதற்கிடையில் இதை கேள்வி பட்டு கூட்டமும் கூடி விட்டது. பின்பு அங்கு இருந்த ஒரு முஸ்லிம் பெண் ஒருவரும் அவருடைய மகனும் சேர்ந்து பாம்பை அடித்து கொன்று விட்டார்கள். ஒரு வழியாக பாம்பின் சகாப்தம் முடிந்தது.



பின்பு நடந்ததுதான் காமெடியே.



அங்கு கூடி இருந்த சில இந்து மத பெண்கள், நல்ல பாம்பை ஏன் அடித்தீர்கள் ? அதை அடிக்க கூடாது , விரட்டதான் வேண்டும். நல்ல பாம்பை அடித்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் கூறி எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கிலியை ஏற்படுத்தி , அதோடு மட்டும் அல்லாமல் அதை வீட்டில்தான் புதைக்க வேண்டும். பின்பு பால் ஊற்ற வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். நல்ல வேலை பாலை ஊத்த வில்லை. புதைத்து மட்டும் இருக்கிறார்கள்(நல்ல வேலை பாலை ஊற்றாமல் என் வயிற்றில் பாலை வார்த்தார்கள். இல்லை என்றால் பாலா போகியிருக்கும் நிலைமை.இல்லை என்றால் நாங்களும் மூடநம்பிகையை பால் ஊற்றி வளர்த்தது போல ஆகி இருக்கும்.)



இங்கு எனக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது இவைதான்.
*) இன்னும் இந்த காலத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கை தேவைதானா?
*) அது எப்படி நல்ல பாம்பை அடித்தால் மட்டும் குடும்பத்திற்கு ஆகாமல் போகும். நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல பாம்புகளை அடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறதா ?
*) நடைமுறை வாழ்கையில் நாய் , பன்னிகளை எல்லாம் அடித்து கொண்டுதான் இருக்கிறோம் . நாய் , பன்னி அல்லது வேறு சில விலங்குகளை அடித்தால் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாதா? அது என்ன நல்ல பாம்புக்கு மட்டும் தனி விசேசம்?(உங்களுக்கு ஏதாவது இதில் விசயம் தெரிந்தால் சொல்லவும்)
*) நல்ல பாம்பின் தோல்கள் அதிக விலைக்கு போகும். இதை வைத்து பெல்ட், ஹண்ட்பாக் போன்றவை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . அதற்காக பல நல்ல பாம்புகள் வேட்டையாட பட்டுதான் வருகின்றன. இப்படி வேட்டை ஆடுபவர்களின் குடும்பங்கள் எல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கின்றனவா?



இதை விட ஒரு பெரிய கொடுமை, இதை பற்றி நான் என்னுடைய அலுவலக நண்பர்களிடம் விவரித்து கொண்டிருக்கும் பொழுதே , " அட என்னங்க நல்ல பாம்ப போய் அடித்து விட்டிர்களே , என்ன போங்க" என்று கூறி கொண்டு இருந்தார்கள்.இதை விட ஒருவர் மேலே போய் , கடந்த 10 வருடங்களாக என் குடும்பம் படாத பாடு பட்டுவிட்டது . அதற்கு காரணம் 10 வருடங்களுக்கு முன்பு நான் அடித்த ஒரு நல்ல பாம்பே காரணம் என்று பெருமிதமாக கூறினார். இது எங்களுடைய நம்பிகை என்றும் கூறி கொண்டார். என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.



அறியாமை ஒழிந்திட , மூட நம்பிக்கைகளை அகற்ற படிப்பு அறிவு தேவை என்று கூறிக்கொண்டு அனைவர்க்கும் கல்வி அவசியம் என்று வாய் கிழிய கூறுகிறோம். ஆனால் அப்படியும் அது அழியாது என்றே நினைக்கிறன். ஏதாவது உதாரணம் கூற வேண்டும் என்றால் " இந்த கணினி காலத்தில் போய் இப்படி எல்லாம் கூறுகிறிர்களே" என்று சொல்லும் வழக்கு நம்மிடம் உண்டு. ஆனால் அந்த கணினி துறையில் உள்ளவர்களே இதை இன்னமும் நம்பி கொண்டு இருக்கும் பொழுது .................ஒன்றும் சொல்வற்கு இல்லை.



நல்ல பாம்பை பற்றி சில விசயங்களை பார்போம்.


*) உலகத்தில் உள்ள அதிக விசத்தை கக்கும் பாம்புகளில் இதுவும் ஒன்று.


*) இது ஒரு கடியில் 6-7 மில்லி விசத்தை கக்கும் தன்மை உடையது. இந்த விஷம் ஒரு யானையவே அழிக்கும்.


*) இது அதிக பட்சம் 12 அடி வளரும். இப்போதைய அதிகபட்ச சாதனை 5.58 meter


*) கோபத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய உடம்பின் மூன்றில் ஒரு பகுதியை நிமிர்த்தி படம் எடுக்கும்.


*) இனபெருக்க சமயத்தில் , பெண் நாகம் , ஆண் நாகத்தின் வாயில் ஒரு முத்தம் கொடுக்க முயற்சி செய்யுமாம். அவ்வாறு அது வெற்றிகரமாக நடந்தால், பெண் நாகம் பல முட்டைகளை இடுமாம். தோல்வியானால் ஒரு முட்டையும் இடாதாம்.



இவ்வளவு அச்சத்தை ஏற்படுத்தும் பாம்பு வீட்டிற்குள் வந்தால் , அதை அடிக்காமல் கொஞ்சவா முடியும் ?.



ஒன்று மட்டும் புரிகிறது ,,, 1000 பெரியார் வந்தாலும் நாட்டை திருத்த முடியாது.




ப.பிரதீப்

18 comments:

ராம்.CM said...

முதலிலே மூடநம்பிக்கை என்று ஆரம்பித்தபிறகு உங்களுக்கு சந்தேகம் வரகூடாது. எல்லாமே மூடநம்பிக்கைதான்...

Pradeep said...

கருத்துக்கு நன்றி திரு ராம்

வனம் said...

வணக்கம் பிரதிப்

அய்யய்யோ அடிச்சுட்டீங்களா..........

இதுக்கெள்ளாம் பெரியார் வந்து ஒன்னும் செய்ய முடியாது, நமக்குன்னு இருக்கின்ற மூளையை உபயோகிக்கனும்.

நான் யோசிக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்களும், தன்னுடைய முட்டாள்தனத்தை உணர மறுக்கும் அறிவுஜிவிகளும் இருக்கும்வரை எல்லோரையும் குழப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்

நன்றி
இராஜராஜன்

அண்ணன் வணங்காமுடி said...

வெயில் காலத்தில் அதிக வெப்பதிற்காக குளிக்க வந்ததோ என்னமோ தெரிய வில்லை//

இருக்காத பின்ன

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான விபரம்

விக்னேஷ்வரி said...

தகவல் நல்லா இருக்கு. ஆனா, போட்டோல எதுக்கு பாம்பு கூட ஒரு பொண்ணு.... ;)

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

ந்ண்பரே..இது மட்டுமல்ல இன்னும் முடை நாற்றமெடுக்கும் ஆயிரமாயிர மூட ந்ம்பிக்கைகள்
இங்கு மலிந்து கிடக்கினற்ன படித்தவர்களும் இதற்கு
விதி விலக்கல்ல...!

Pradeep said...

/****
நான் யோசிக்க மாட்டேன் என அடம்பிடிப்பவர்களும், தன்னுடைய முட்டாள்தனத்தை உணர மறுக்கும் அறிவுஜிவிகளும் இருக்கும்வரை எல்லோரையும் குழப்பிக்கொண்டுதான் இருப்பார்கள்
*****/
நன்றாக சொன்னீர்கள் இராஜராஜன். வருகைக்கு நன்றி.

நன்றி வணங்காமுடி அவர்களே.

/****
தகவல் நல்லா இருக்கு. ஆனா, போட்டோல எதுக்கு பாம்பு கூட ஒரு பொண்ணு.... ;)
*****/
சும்மாதான் விக்னேஸ்வரி. அந்த போடோதான் அப்போதைக்கு கிடச்சது அவ்வளவுதான்.
வருகைக்கு நன்றி விக்னேஸ்வரி அவர்களே.

/*****
ந்ண்பரே..இது மட்டுமல்ல இன்னும் முடை நாற்றமெடுக்கும் ஆயிரமாயிர மூட ந்ம்பிக்கைகள்
இங்கு மலிந்து கிடக்கினற்ன படித்தவர்களும் இதற்கு
விதி விலக்கல்ல...!
******/
மிகவும் சரி தமிழ் வெங்கட் அவர்களே. வருகைக்கு நன்றி.

Subankan said...

நல்ல பாம்பு யாரையும் கடிக்காது, நாமாக அதோடு வம்புக்குப் போகாதவரை. நீங்கள் சொன்னது போல பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதால் இந்த நல்ல பாம்பையும் அடித்துக் கொன்று விடக் கூடாது என்பதற்காகவே அது கூறப்பட்டது.இதனால் அந்தப் பாம்பு இனம் அழிந்து விடாதல்லவா? . ஆனால் அது ஒன்றும் செய்யாது என்று கூறினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற காரணத்தால் தான் இப்படியான காரணங்கள் சேர்க்கப்பட்டன. பின் அவையே தொடர்ந்துவிட்டது. எந்த ஒரு நீங்கள் மூட நம்பிக்கை என்று நினைக்கும் விடயத்திற்குப் பின்னாலும் காரணம் இருக்கும். அதை நேரடியாகக் கூறினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற காரணத்தால்தான் இவ்வாறான காரணங்கள் புகுத்தப்பட்டன. அவற்றைப் பின்பற்றுங்கள், அவற்றுக்குக் கூறப்படும் காரணங்களை களைந்துவிட்டு.

Gifariz said...

நல்ல பாம்பி (நாகப் பாம்பு) ற்கு கோபம் வருவது உண்மை அதனால் அதனை அடித்தால் முழுமையாக அடித்து கொன்றுவிட வெண்டும். அடித்து பாதியில் விட்டால் அது கொபம் வைத்துக் கொண்டு திரும்ப வரும் என்று கூறப்படுகின்றது இதைப்பற்றி கொஞ்சம் தகவல் தர முடியுமா?

Joe said...

உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது!!!
;-)

2009-லேயும் நம்ம மக்கள் மூடநம்பிக்கைகளின் மூட்டையாக அலைவது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

kailash,hyderabad said...

It was started from early man.man worshiped the things which were beyond his knoweldge,mighty than him,cant he cotrolleed.so he woshiped rain,snake,elephant,mountain,sea.
he was not adored to ants,frogs.but even nowadays we fallow this is foolishness.
we cant change all. atleast we will give awareness to uour children.

R.Varadharajan said...

கோடையின் வெப்பம் தாங்காமல் தான் இது போன்ற உயிரினங்கள் ஈரமான பிரதேசங்களை நோக்கி இடம் பெயருகின்றன. நல்ல பாம்பாக இருந்தாலும், அதற்கும் கெட்ட நேரம் உண்டல்லவா,அதான் வழியில் உங்கள் வீட்டில் சிக்கி விட்டது.


பெரியாரை விட சிறந்த சிந்தனையாளர்கள் தோன்றிய நாடுகளிலும் இன்றும் மூட நம்பிக்கைகள் உண்டு.

நம்ப ஊரில் ஒருவர் தும்மினால், அதை ஒரு அப சகுனம், காரியம் உருப்படாது என்பார்கள். ரஷ்யாவில் ஒருவர் தும்மினால், அந்த நேரத்தில் வேறு யாராவது பேசி கொண்டிருந்தால், பேசுபவர் உண்மை பேசுகிறார் என்று அர்த்தமாம். அவரை நம்பலாமாம். இது எப்படி இருக்கு? இதுவும் மூட நம்பிக்கை தான். ஆனால் இதில் எந்த கெட்ட விளைவும் இல்லை. ஆனால் பெரும்பாலான மூட நம்பிக்கைகள் மனிதனை பின்னோக்கியே இழுக்கிறது. அதை களைவது அவசியம்.


ஆர்.வி. அரசு

Pradeep said...

வருகைக்கும், தங்களது விரிவான கருத்துக்கும் நன்றி சுபாங்கன் .

/*****
நல்ல பாம்பு யாரையும் கடிக்காது, நாமாக அதோடு வம்புக்குப் போகாதவரை. நீங்கள் சொன்னது போல பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பதால் இந்த நல்ல பாம்பையும் அடித்துக் கொன்று விடக் கூடாது என்பதற்காகவே அது கூறப்பட்டது.இதனால் அந்தப் பாம்பு இனம் அழிந்து விடாதல்லவா? .
/*****
நீங்கள் சொல்வது சரி , ஒருவேளை அந்த பாம்பை நாங்கள் காட்டில் கண்டிருந்தால். ஆனால் இங்கு வந்தது வீட்டில். ஆகையால் அடித்துதான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.
/******
எந்த ஒரு நீங்கள் மூட நம்பிக்கை என்று நினைக்கும் விடயத்திற்குப் பின்னாலும் காரணம் இருக்கும். அதை நேரடியாகக் கூறினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற காரணத்தால்தான் இவ்வாறான காரணங்கள் புகுத்தப்பட்டன. அவற்றைப் பின்பற்றுங்கள், அவற்றுக்குக் கூறப்படும் காரணங்களை களைந்துவிட்டு
*****/
நான் ஒத்து கொள்கிறேன் எந்த ஒரு விசயத்திற்கு பின்னாலும் ஒரு காரணம் உண்டு என்பதை. ஆனால் சொல்லப்பட்ட விஷயம் எந்த காலத்தில் சொல்லப்பட்டது என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். ஒரு வேளை அந்த விஷயம் அந்த காலத்திற்கு ஒத்து போகலாம்.அது எல்லா காலத்துக்கும் ஒத்து போகாது. ஆக சொல்ல பட்ட விசயத்தின் காரணத்தை தொலை நோக்கு பார்வையோடு ஆராய்ந்து சரி என்றால் ஏற்று கொள்ளலாம். இல்லைஎன்றால் அது கண்டிப்பாக மூடநம்பிகையே என்பது எனது கருத்து.

வருகைக்கு நன்றி Gifarz.

/******
நல்ல பாம்பி (நாகப் பாம்பு) ற்கு கோபம் வருவது உண்மை அதனால் அதனை அடித்தால் முழுமையாக அடித்து கொன்றுவிட வெண்டும். அடித்து பாதியில் விட்டால் அது கொபம் வைத்துக் கொண்டு திரும்ப வரும் என்று கூறப்படுகின்றது இதைப்பற்றி கொஞ்சம் தகவல் தர முடியுமா?
******/
கண்டிப்பாக கோபம் வைத்து கொண்டு திரும்ப பலி வாங்கும் என்பது முற்றிலும் உண்மை அது திரைப்படமாக இருந்தால். நடைமுறை வாழ்கையில் இது சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
பொதுவாக பாம்பின் கண்களுக்கு அனைத்தும் ஒரு நிழல்படமாகதன் தெரியும் என்று கேள்வி பட்டுஇருக்கிறேன். நீங்கள் சமீபத்தில் "நீயா " அல்லது "அனகொண்டா" படம் எதுவும் பார்த்தீர்களா?


வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி Joe.

வருகைக்கு மிகவும் நன்றி கைலாஷ்.

வருகைக்கு நன்றி வரதா.

/******
ரஷ்யாவில் ஒருவர் தும்மினால், அந்த நேரத்தில் வேறு யாராவது பேசி கொண்டிருந்தால், பேசுபவர் உண்மை பேசுகிறார் என்று அர்த்தமாம். அவரை நம்பலாமாம். இது எப்படி இருக்கு? இதுவும் மூட நம்பிக்கை தான். ஆனால் இதில் எந்த கெட்ட விளைவும் இல்லை
*****/
அப்படியா , புதுசாக இருக்கிறது.

ராம்.CM said...

அருமை...

Joe said...

Are you in Bangalore?

mail me at joeanand1974@gmail.com.
Let's try to meet up sometime.

Pradeep said...

no... am in chennai.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

Post a Comment