Sunday, April 5, 2009

தடுமாறும் தாம்பத்யம்

சில நாட்களுக்கு முன்பு , நண்பர் ஒருவரிடம் உரையாடி கொண்டிருந்த பொழுது அவருடைய தங்கையை பற்றி வருத்தத்துடன் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய தங்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் , பின்பு சில நாட்களிலேயே மனவருத்தம் ஏற்பட்டு இப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டதாகவும், காரணம் சரியாக தெரிய வில்லை என்றும் கூறினார்.

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே , இன்னொரு நண்பரும் என்னுடைய தங்கைக்கும் இதுமாதிரிதான் , அவரும் இப்பொழுது எங்கள் வீட்டில்தான் உள்ளார் என்று கூறினார்.

பின்பு தீர விசாரித்த பொழுது , இவருக்கும் உள்ள பிரச்சினை பொதுத்தான் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் தாம்பத்யம் நடக்கவில்லை என்பதுதான் அது.

பொதுவாகவே இது மாதிரியான விஷயங்கள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன.சிலருக்கு தாம்பத்யம் நடக்கவில்லை என்றும், இன்னும் சிலருக்கு ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் அவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விஷயம் சற்று விஸ்வரூபம் எடுத்து விவாகரத்து வரையிலும் சென்று உள்ளன. மனோதத்துவ நிபுணர்களுக்கு வரும் பெரும்பாலான சந்திப்புகள் இதனுடன் சம்பந்த பட்டே வருகின்றன. பின்பு அவர்கள் கூறும் சிகிச்சைக்கு உட்பட்டு குணமாகி பின்பு குழந்தை பேறு உண்டாகி சந்தோசமாக வாழ்கை சென்றதாக கூறும் சம்பவங்களும் இங்கு உண்டு.
மேலே கூறிய விசயங்களை பார்க்கும் பொழுது , என்னிடம் சில கேள்விகள் எழுகின்றன.

திருமணத்திற்கு முன்பு அனைத்து விசயங்களையும் பார்த்து, விசாரித்து தன் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணம் செய்யும் பெற்றோர்கள் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. இன்னும் சற்று தீர சிந்திதோமானால் இது மாதிரியான விசயங்களை தனக்கு வரபோகும் மனபெண்ணிடமோ அல்லது ஆணிடமோ நேரடியாக கேட்க முடியாது என்பதுதான் உண்மை.

இதை தவிர்க்க சில முறைகளை நாம் மேற்கொள்ளலாம்.

*) ஆணோ அல்லது பெண்ணோ , தனக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் திருமணம் நடக்க போகிறது என்றால் , தானாகவே முன்வந்து "திருமணத்திற்கு நாம் மன மற்றும் உடல் அளவில் தகுதியாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள முறையான மருத்துவரிடம் சென்று முழு உடல் சோதனை எடுத்து கொள்ளலாம்". இதில் ஏதாவது குறை இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், திருமணத்திற்கு பிறகு எடுக்க போகும் சோதனையை இப்போதே எடுத்து கொண்டதுக்கு சமமாகி விடும். திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சில மனகசப்பை தவிர்கவும் இது ஒரு வாய்பாக அமையும்.

அல்லது

*) ஆண் மற்றும் பெண் இரு வீட்டிலும் , தனக்கு வரபோகும் ஆணோ அல்லது பெண்ணோ முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று முழு தைரியத்துடன் கேட்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் ரத்த பரிசோதனை சான்றிதலையாவது கேட்கலாம். இது ஓரளவு எய்ட்ஸ் போன்ற பிரச்சினைகளிலிருந்து தன் குடும்பத்தை காக்க ஓரளவு வழியாக அமையும் .

தாம்பத்யம் என்பது இல்லறத்தில் ஒரு பகுதிதான் என்றாலும் , அதுவே ஒரு குடும்பத்தை பிரிக்கும் அளவுக்கு ஒரு பெரிய சக்தியாக வளர்த்து நிற்கும் பொழுது மேலே கேட்க தூண்டும் கேள்விகள் தப்பு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

சமீபத்தில் செய்தித்தாளில் வந்த ஒரு நிகழ்வு படிக்கச் சற்று சந்தோசமாக இருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் எந்த ஒரு திருமணம் நடந்தாலும் , திருமணத்திற்கு முன்பு ஆண் மற்றும் பெண்ணிடம் இரத்த பரிசோதனை மேற்கொள்வார்களாம். அவ்வாறு ஒரு திருமணத்தின் பொது மன ஆணுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்க பட்டு பின்பு திருமணத்தை நிறுத்தினார்களாம். இல்லைஎன்றால் அந்த பெண்ணின் வாழ்கை கேள்விக்குறியே?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

13 comments:

sureஷ் said...

//வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் //

நல்ல வார்த்தை, நல்ல சிந்தனை

ராம்.CM said...

நீங்கள் எதிர்பார்க்கும் அள‌வுக்கு இன்னும் இந்தியாவில் கலாசாரம் முன்னேறவில்லை. எதிர்பார்ப்போம்...

R.Varadharajan said...

அவள் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமான தோழி. பெற்றோர்க்கு அவள் ஒரே குழந்தை. நன்றாக படிக்க கூடியவள். இளங்கலை இயற்பியலில் 85% பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள். மேற்கொண்டு படிக்க ஆசை பட்டாள். ஆனால் 20 வயது முடியும் போதே அவளுக்கு பெற்றோர் திருமணம் முடித்து வைத்தனர்.

மணமகனுக்கு ஆண்மை குறைவு இருந்தது திருமணத்திர்க்கு பிறகு தெரிய வந்தது. அதை வெளியில் சொல்ல கூடாது என்பதற்காக, புகுந்த வீட்டில் இவள் கொடுமை படுத்த பட்டுள்ளாள். பிறகு எப்படியோ இவளது பெற்றோர்க்கு விவரம் தெரிந்து, இவளை பிறந்த வீட்டிற்கே அழைத்து வந்து விட்டனர். விவாகரத்தும் எளிதாக கிடைத்து விட்டது. ஆனால் மனதாலும் உடலாலும் பாதிக்க பட்ட இந்த பெண் தற்கொலைக்கு முயன்று, நல்ல வேளையாக காப்பாற்ற பட்டாள். மனோ தத்துவ சிகிச்சையும் அளிக்க பட்டது.

தொடர்ந்து MCA படித்து விட்டு இப்போது ஒரு கணினி துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தவறு எதுவுமே இல்லாமல், அவளது வாழ்க்கை அலைக்கழிக்கப்பட்டது, மிகவும் வேதனையான விஷயம்.


திருமணத்திற்கு முன் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இந்த விஷயத்தில் கட்டாயம் விழிப்புணர்வு தேவை. ஒரு ஆரம்பமாக, பத்திரிக்கை மற்றும் matrimony இணைய தளங்கள் இதை ஒரு கட்டாய தகவலாக, திருமணத்திற்கு பெண்/மணமகன் தேட பதிவோர்களிடம் கேட்க வேண்டும்.


நன்றி

ஆர்.வி. அரசு

வெற்றி-[க்]-கதிரவன் said...

//வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் //

இன்னமா சொல்லிகிரபா... மனச தொட்டுட்ட

வெற்றி-[க்]-கதிரவன் said...

முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக மணமகனும் மணமகளும் கொடுக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் கூட தவறில்லை...

உங்கள் கருத்து வரவேற்க தக்கது

Pradeep said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.

/******நீங்கள் எதிர்பார்க்கும் அள‌வுக்கு இன்னும் இந்தியாவில் கலாசாரம் முன்னேறவில்லை. எதிர்பார்ப்போம்****/

கருத்துக்கு நன்றி ராம் . கூடிய விரைவில் முன்னேறும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்.

/*****
ஒரு ஆரம்பமாக, பத்திரிக்கை மற்றும் matrimony இணைய தளங்கள் இதை ஒரு கட்டாய தகவலாக, திருமணத்திற்கு பெண்/மணமகன் தேட பதிவோர்களிடம் கேட்க வேண்டும்*****/

நல்ல கருத்து வரதா.


/******
முறையான மருத்துவ பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக மணமகனும் மணமகளும் கொடுக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் கூட தவறில்லை...
******/

வருகைக்கு நன்றி பித்தன் . சட்டம் வந்தால் மிகவும் நல்லது.

Anonymous said...

வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் - கண்டிப்பாக உங்களுடையது இல்லை. நான் ஏற்கனவே 5 வருடங்களுக்கு முன்னர் என் விடுதி அறைக் கதவில் ஒட்டியிருந்த ஒரு கவிதையின் தலைப்பு. எழுதியது நீங்களா?

எல்லாமே பேரசை பிடிச்ச் பெண்களால வாறது தான். அல்லாவிட்டால் படிச்சும் அறிவில்லாத பெண்களால் வருவது தான்.
எனது ஒன்று விட்ட அக்காவுக்கும் இப்படி நடந்தது. ஆண்கள் கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும்.

pradeep kumar chandrasekaran said...

These daya this type of things are so common... And Ur concept of getting certificates is a good idea..but people(mostly the parents) will see this as a prestigous matter and will be restraining themselves from doing so...but One day this will be in practice that is pretty sure...

Pradeep said...

வருகைக்கு நன்றி புகழினி .

/*****
வீழ்வது வெட்கமல்ல , வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் - கண்டிப்பாக உங்களுடையது இல்லை.
****/
கண்டிப்பாக என்னுடையது இல்லை. என்னுடையது என்று நான் சொல்லவும் இல்லை. நானும் உங்களை போல் எங்கேயோ படித்ததாக நியாபகம்.

/*****
எல்லாமே பேரசை பிடிச்ச் பெண்களால வாறது தான். அல்லாவிட்டால் படிச்சும் அறிவில்லாத பெண்களால் வருவது தான்.
*****/
இந்த விஷயத்திற்கும் , பெண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.
இதில் தவறு அனைவரிடமும்தான் உள்ளது என்றே நான் நினைக்கிறன்.
நான் உணர்த்த விரும்பியது , இந்த விசயத்தில் விழிப்புணர்வு வேண்டும் என்பதே.

வருகைக்கு நன்றி பிரதீப் சந்திரசேகரன்

senthilkumar said...

RVeeArasu
// திருமணத்திற்கு முன் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இந்த விஷயத்தில் கட்டாயம் விழிப்புணர்வு தேவை. ஒரு ஆரம்பமாக, பத்திரிக்கை மற்றும் matrimony இணைய தளங்கள் இதை ஒரு கட்டாய தகவலாக, திருமணத்திற்கு பெண்/மணமகன் தேட பதிவோர்களிடம் கேட்க வேண்டும். //

RVeeArasu கருத்துக்களுடன் நான் ஒத்து போகிறேன்.....

பெண்வீட்டார் இன்னமும் மாப்பிள்ளையின் ஜாதகம்,தொழில்,சம்பாத்தியம் இவற்றில் மட்டும் அக்கறை காட்டாமல் மருத்துவ சான்றிதல்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்....பெண்ணின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை கொடுத்துவிட்டு மணமகனின் சான்றிதல்களை கேட்டாலே போதும், குற்றம் உள்ளவர்கள் கோபித்து கொண்டு சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்....இதன் மூலமே 50 சதவிகித பிரச்சனையை தவிர்த்துவிடலாம் ...

பிரதீப் ... தங்கள் பதிவுகளின் தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது ...வாழ்த்துக்கள் ....

Pradeep said...

வருகைக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றி செந்தில்.

/*****
பெண்ணின் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை கொடுத்துவிட்டு மணமகனின் சான்றிதல்களை கேட்டாலே போதும், குற்றம் உள்ளவர்கள் கோபித்து கொண்டு சென்று விடுவார்கள் என்று நினைக்கிறேன்
*****/

உண்மைதான். நீங்கள் கூறிய கருத்து உண்மையில் மற்றவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செய்பவர்களுக்கு பொருந்தும்.

இன்னும் சில பேர் , தங்களுக்கு உள்ள குறையை தெரியாமலே திருமணம் செய்து கொண்டு , அதற்கு பின்பு அவஸ்தை படுகின்றார்கள். அவர்கள் இம்மாதிரியான பரிசோதனை செய்து கொண்டால் , வர கூடிய பிரச்சினையை முன்னரே தவிர்த்து , முறையான சிகிச்சை எடுத்து கொண்டு திருமணம் செய்யலாம்.

Joe said...

நல்ல பதிவு பிரதீப்.
தொடர்ந்து எழுதுங்கள்.

இதே போல் ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் சிலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக இந்தியப் பெண்களை திருமணம் செய்து விட்டு, ஒரு வருடத்துக்குள் விவாகரத்து செய்து விரட்டி விடுவதாகவும் செய்திகள் வருகின்றன.

Anonymous said...

பெண்களுக்கு பெண்மை இல்லாவிட்டால் என்ன செய்யலாம். அதை பற்றி எழுதுங்களேன். ஒரு பக்கம் மட்டும் பேசக் கூடாது.

Post a Comment