Tuesday, April 14, 2009

"விரோதி" தமிழ் வருட பிறப்பும், அம்பேத்கர் பிறந்த நாளும்

இன்று அம்பேத்கர் பிறந்த நாள் என்ற பொழுதும் , காலையிலிருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்ன காரணமோ தெரிய வில்லை யாரும் அம்பேத்கர் பிறந்த நாளை ஏற்று கொள்ளும் மன நிலையில் இல்லை.

காலையில் நண்பர் ஒருவரிடம் இருந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தது. நான் அதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினேன். அதற்கு அவர் "இல்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கு. நமக்கு இல்லை " என்று கூறினர். திரும்ப பதில் அளிக்க மனம் இல்லாத நிலையில் நிறுத்தி விட்டேன் பதில் அளிப்பதை.

இந்த மாற்றத்தை மக்கள் ஏற்று கொள்ளாததற்கு காரணம் அவர் தலித் என்பதாக கூட இருக்கலாம். இதே இன்று ஒரு வேறு ஒரு ஜாதி தலைவர் பிறந்த நாள் என்றால் மக்கள் ஏற்று கொள்வார்கள் என்று நினைக்கிறன்.எது எப்படியோ, இன்று வாழ்த்துக்குள் கூறி கொண்டாலும் , இன்னும் ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் கழித்து கண்டிப்பாக இது அம்பேத்கர் பிறந்த நாளாக மட்டும் கொண்டாட படும் என்பது மாற்ற மடியாது உண்மை. மாறும்.

இதில் பெரிய கொடுமை , அவருடைய இனத்தை சார்ந்தவர்களே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பதுதான். " வேறு என்ன சொல்ல 'அறியாமை' ". இந்த அறியாமை இருப்பதால்தான் தலித் இனம் இன்னும் அப்படியே இருந்து கொண்டு இருக்கிறது.

நண்பர் ஒருவரிடம் இதை பற்றி விவாதித்த பொழுது , அவர் சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். வட மாநிலங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று மற்ற பண்டிகையை போல் நன்றாக கொண்டாட படுகிறதாம். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் அன்றே அவர்கள் அம்பேத்கர் சிலை எங்கு இருக்கிறதோ அங்கு சென்று மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கலாம். இன்று அவர்கள் உடுத்தும் உடை வெள்ளை. பின்பு அவர்கள் மேடை கூட்டமிட்டு அவருடைய புகழை எடுத்து உரைபார்கலாம்.

இந்த மாற்றத்தை அங்குள்ள இந்து பழம்பெருமைவாதிகள் ஏற்று கொள்ள முடியாமல் திட்டமிட்டு சில காரியத்தை செய்ததாகவும் சில கருத்துகள் நிலவுகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாள் - ஏப்ரல் 14.
இறந்த நாள் -- டிசெம்பெர் 6.

இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.

தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது. இந்த நோக்கில்தான் அவர் மாற்றினார் என்றால் இது வரவேற்கத்தக்கது. தமிழ் வருட பிறப்பை தை ஒன்றுக்கு மாற்றினால் இங்கு உள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இப்படி இருக்க , ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறகும் பொழுது ஒரு பெயரை வைத்து அழைக்கும் பழக்கம் இங்கு உண்டு. அது போல இந்த வருடம் "இந்தபுத்தாண்டுக்கு பெயர் "விரோதி". சரியாகத்தான் அமைந்திருக்கிறது என்று நினைகிறேன் இந்த புத்தாண்டை மாற்றியது பல பேருக்கு விரோதத்தைதான் ஏற்படுத்துகிறது.

"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.

5 comments:

ers said...

ஒரு முறை வந்து பாருங்கள். உங்கள் உள்ளம் கவரும் புக்மார்க் தளம்.

nellaitamil

senthilkumar said...

// இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது. //


எல்லா விசயங்களிலும் யூகங்கள் பல இருப்பது தவிர்க்க முடியாதது...இந்த விசயமும் அப்படியே என்று நினைக்கிறேன்...மேலும் ஒரு தலைவரின் பிறந்தநாள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பது சற்றே மிகையான கற்பனையே...ஒரே நாளில் இரண்டு விசேசங்கள் வந்தாலும் அந்த அந்த சமுதாயத்தால் கொண்டடபட்டுதான் வருகிறது .....


// "விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது. //

உங்கள் பதிவின் மூலமே இந்த செய்தி எனக்கு தெரியவந்தது...

ராம்.CM said...

நல்லதகவல்! அருமையாக இருந்தது. சில தகவல்களை உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன்.

R.Varadharajan said...

நல்ல பதிவு.ஆனால்,எந்த தேசிய தலைவர்களை தான் நாம் நினைவு கூறுகிறோம்?


//இந்த நாளை மறக்க அடிக்க வேண்டும் என்பதற்காகவே, பாபர் மசூதியை இடிக்க அவர்கள் எடுத்து கொண்ட நாள் டிசம்பர் 6. இப்படியும் ஒரு கருது நிலவுகிறது.//
அறை எடுத்து யோசிப்போர்களால் மட்டுமே இந்த கண்டு பிடிப்பு சாத்தியம்.

//தமிழ் வருட பிறப்பை, தை ஒன்றுக்கு மாற்றிய பிறகுதான் இன்று அம்பேத்கருக்கு பிறந்த நாள் என்றே பல பேருக்கு தெரிய வருகிறது. //
உண்மை தான். அந்த பல பேரில் நானும் ஒருவன்.

//இந்த நோக்கில்தான் கருணாநிதி அவர்கள் தமிழ் வருட பிறப்பை மாற்றினார் என்றே தோன்றுகிறது.//

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

//"விரோதி" என்பதை போல மொத்தம் 60 பெயர்கள் உண்டாம். 60 வருடம் முடிந்த பிறகு திரும்பவும் இதே பெயர் தொடரும். இதை வைத்துதான் 60வது கல்யாணத்தை நடத்தும் வழக்கம் இங்கு இருக்கிறது.//

இந்த செய்தி நானும் உங்களின் பதிவிலிருந்தே அறிகிறேன்.நன்றி.

ரெ.வ. அரசு

Pradeep said...

வருகைக்கு நன்றி வரதா , செந்தில் மற்றும் ராம்.

/***
எல்லா விசயங்களிலும் யூகங்கள் பல இருப்பது தவிர்க்க முடியாதது...இந்த விசயமும் அப்படியே என்று நினைக்கிறேன்...மேலும் ஒரு தலைவரின் பிறந்தநாள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பது சற்றே மிகையான கற்பனையே...ஒரே நாளில் இரண்டு விசேசங்கள் வந்தாலும் அந்த அந்த சமுதாயத்தால் கொண்டடபட்டுதான் வருகிறது ..... ****/

/*****
அறை எடுத்து யோசிப்போர்களால் மட்டுமே இந்த கண்டு பிடிப்பு சாத்தியம்.
*****/

இப்படி இருக்கலாம் என்று சொல்லவில்லை. இப்படியும் இருக்கலாம் என்றே சொல்கிறேன்.

/*****
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.
****/
உங்களுக்கும் நகைச்சுவை உணர்ச்சி அதிகம் என்றே நினைக்கிறன்

Post a Comment