Wednesday, January 16, 2013

ரேபிஸ்டுகளின் ரேபிஸ்டுகள்

இந்த டெல்லி ரேப் மேட்டர  பத்தி யாருகிட பேசுனாலும் எல்லாரும் சொல்ற ஒரே பதில், இந்த பொண்ணுங்க டிரஸ் பண்ற விதம் அப்படி. இதுங்க ஒழுங்கா டிரஸ் பண்ணா இந்த பிரச்சினையே வராதுனுதான்.இது மாதிரி ஆளுங்கள பார்த்தா  எனக்கு எப்படி தோனுதுனா , "எனக்கு அந்த ரேப் மாதிரி சந்தர்ப்பம்  அமையல, வந்தா நானும் பண்ணுவேன். " அப்படின்னு சொல்ற  மாதிரி தோணுது. இது மாதிரி சொல்ற எல்லாமே அவர்களுக்கு  தெரிந்தோ தெரியாமலோ ரேபிச்ச்டுகளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சொல்ற மாதிரி "இவர்கள் அவர்களை விட ஆபத்தானவர்கள் " தான் போல.

கேட்டா எல்லாரும் என்ன சொல்லுவாங்கனா ,அது மாதிரி டிரஸ் பண்ணா டெம்ப்ட்  ஆகுது , அதனால ரேப் பண்றாங்கன்னு. எனக்கு என்ன கேட்க தோனுதுனா "டெம்ப்ட்  ஆனா ரேப் பன்னிருவின்களா?". தெரியாமதான் கேட்குறேன் , நாம எத பார்த்துதான் டெம்ப்ட் ஆகாம  இருக்கோம்?எல்லாத்துக்கும்தான்  டெம்ப்ட் ஆகுறோம்.அப்படின்னு பார்த்தா உணர்ச்சிகள் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கா? பெண்களுக்கு இல்லையா? எத்தன ஆம்பளைங்க ரோட்ல முண்டா பனியனோட,லுங்கியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்கள பார்த்து பொண்ணுகளுக்கு டெம்ப்ட் ஆகாதா ? கண்டிப்பா ஆகும்...ஆனா அவங்க கண்ட்ரோல் பண்ணிக்கணும்.ஆனா ஆண்கள் கண்ட்ரோல்  பண்ணிகமாடாங்க. என்ன ஒரு ஆணாதிக்கம்?.ஆண்களுக்கு உள்ள அதே உணர்ச்சிகள் தான பெண்களுக்கும் இருக்கும்.

பெண்கள் ரோட்ல நடந்து போயிடு இருக்கும் போது , செயின் அறுத்துட்டு ஓடுறாங்க திருடனுங்க . அதுக்காக பெண்கள் வீட்ட விடு வெளிய வரும் போது நகைகள் எல்லாத்தையும் அவித்து வச்சிட்டுதான் வரணும் அப்படின்னு சொல்ல முடியுமா? திருடங்களுக்கு நகைய பார்த்தா டெம்ப்ட் ஆகும், அதுனால நகைய போடாதிங்கனு சொல்ல முடியுமா? வீடு புகுந்து இல்ல பேங்க் புகுந்து கொள்ளை அடிக்கிறாங்க...அதுனால பேங்க் நடத்தாதிங்கனு  சொல்ல முடியுமா? முடியாது . திருடர்கள் எல்லாம் சேர்ந்து இது மாதிரி  ஒரு அறிக்கை விடுறானுங்க " பெண்கள் நகைய போட்டுட்டு வரதுனாலதான் எங்களுக்கு டெம்ப்ட் ஆகுது.அதனால யாரும் நகை போடாம வெளிய வாங்க.நாங்க திருட மாட்டோம்னு" சொன்னா எப்படி இருக்குமோ அது மாதிரிதான் ரேப் விசயத்துக்கு நம்ம ஆளுங்க பேசுற விசயமும் எனக்கு தோணுது .

பர்தா போட்ட பெண்ணையே ரேப் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க . 5 வயது பொண்ணுங்கள கூட ரேப் பண்ணி கொன்னுகிட்டு இருக்காங்க. இதுக்கெல்லாம் நம்ம என்ன சொல்ல போறோம்? .....கண்டிப்பா பதில் இருக்காது . விட்டா பிறக்குற பெண் குழந்தைகள் கூட துணியோடதான் பிறக்கணும்னு ரூல்ஸ் கொண்டு வருவாங்க போல. கரெக்டுதான் ...அத பார்த்தும் நம்ம ஆளுங்க டெம்ப்ட் ஆகிடாங்கனா என்னா  பண்றது?

இது கூட பரவாயிலா...ஒருத்தர்கிட பேசிக்கிட்டு இருக்கும்போது சொல்றாரு...."சார்.....நாலு பசங்க நிக்கிற இடத்துல ஒரு பொண்ணு தனியா போனா , கைய பிடிச்சி இழுக்குறது மனித இயல்பு சார் " அப்படிங்கிறாரு. இத எப்ப மனித இயல்பா சேர்த்தாங்கன்னு  எனக்கு தெரியல?.அது உங்க பொண்ணா இருந்தா என்ன சார் பன்னுவிங்கன்னு திருப்பி கேட்டா பதில் இல்ல .

ஆக...நான் எப்படி இருக்கனும் , எப்படி டிரஸ் பண்ணனும்னு decide பண்றது நானாதான் இருக்கனும்.அடுதவங்களுகாக எல்லாம் யோசிச்சி என்னால பண்ணிக்கிட்டு இருக்க முடியாது ..அது  ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி .அது உடையிலும் பொருந்தும்.

பிரதீப்  

3 comments:

Alaguraja said...

###எத்தன ஆம்பளைங்க ரோட்ல முண்டா பனியனோட,லுங்கியோட சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்கள பார்த்து பொண்ணுகளுக்கு டெம்ப்ட் ஆகாதா ? கண்டிப்பா ஆகும்

மிகவும் சரியாக சொன்னிர்கள்...

ஒவ்வொரு ஆறு அறிவுள்ள ஜீவனும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டிய ஓன்று....

பிரதீப் அண்ணா , உங்கள் பதிவுகளுக்கு நன்றி....

Sathiya said...

பொண்னுங்க டிரஸ் போடற விதம் இதுக்கு ஒரு காரணம் இல்லன்னு முழுசா சொல்லி விட முடியாதுன்னு தான் என்ன எனக்கு தோனுது .ஒரு வேளை அந்த பெண் அந்த பேருந்தில் பயணம் செய்யாமல் இருந்திருந்தால் அப்படி ஒரு கொடுமையை அனுபவிக்காமல் இருந்திருப்பாளோ என்னமோ ..........
நம்மால் இதை பற்றி பேச மட்டுமே முடியும்.இனியும் இதுபோல் தொடராமல் இருக்குமா?

Dino LA said...

அருமையான கருத்துக்கள்.

Post a Comment