Sunday, February 15, 2009

திருநங்கை - எனது பார்வையில்

பொதுவாக எனக்கு இந்த சமுதாயத்தில் புரியாத சில விஷயங்கள் மனதை உறுத்தி கொண்டு தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு திருநங்கைகளை எடுத்து கொள்வோம்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அவர்களை எவ்வாறு அழைக்கிறோம்? அலி, ஒன்பது, அஜக்கு . இதில் புதிதாக நான் கேள்வி பட்டது பூனை.
இவர்களை தெருவிலோ அல்லது வேறு எங்கோபார்க்கும் பொழுது நாம் என்ன செய்கிறோம் ? கேலி கிண்டல் , அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்வது அல்லது அடித்து உடைப்பது அல்லது எதாவது செய்து விடுவார்களோ என்று பயந்து பணத்தை கொடுப்பது.

இதை தவிர என்றாவது நாம் அவர்களை மற்றவர்களை போல் மதிக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா?இல்லவே இல்லை. காரணம் அவர்கள் ஆணாகவும் இல்லை பெண்ணாகவும் இல்லை. இவ்வாறு அவர்கள் இருப்பதற்கு காரணம் என்னவென்று நாம் யோசித்து இருக்கிறோமா ?அதுவும் இல்லை....

இவர்களை போன்ற மனிதர்கள் உள்ள இந்த சமுதாயத்திடம் நான் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.
*) பிறக்கும் பொழுது ஒரு குழந்தை ஊனமுற்றதாக பிறந்தால் , அதை வளர்ப்பதற்கு நாம் என்னனென்ன பாடு படுகிறோம் ...? ....அதன் மேல் பரிதாப படுகிறோம்.....இட ஒதுக்கிடு கொடுக்கிறோம்....காரணம் இது அவர்களின் தவறல்ல....இது இயற்கை .

என்னை பொறுத்த வரையில் திருநங்கை ஆக துடிப்பதும் அவர்கள் தவறல்ல.மரபணுக்களின் மாற்றம் அல்லது ஜீன்களின் ஆதிக்கம். இதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? இதுவும் ஒரு ஊனமே. இந்த ஊனத்திற்கு அவர்கள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது , பரிதாபமோ அல்லது பணமோ இல்லை.
மற்றவர்களை போல மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதே...

அவர்களுக்கு உடல் சரி இல்லை என்றால் அவர்களால் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. உணவு அருந்த உணவகத்திற்கு செல்ல முடிய வில்லை.இது ஏன்? உச்ச கட்டமாக அவசரத்திற்கு அவர்களால் கழிவறைக்கு கூட செல்ல முடிவது இல்லை.

எப்பொழுதும் குட்ட குட்ட யாரும் குனிந்து கொண்டே இருப்பது இல்லை. சற்று நிமிர்ந்து உரிமையை கேட்க அவர்கள் எடுக்கும் ஒரு சின்ன முயற்சியில் கிடைத்த வெற்றிதான்.....இன்று அவர்களால் தேர்தலில் நிற்க முடிகிறது.

ஆக , அவர்களையும் மதிக்க இனிமேலாவது முயற்சி செய்வோம்.....அவர்களுக்கும் உணர்வு உண்டு மற்ற மனிதர்களை போல என்று புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

எப்பொழுது இந்த சமுதாயம் அவர்களுக்கு ஒரு சரியான அங்கிகாரத்தை கொடுக்க போகிறதோ?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்




7 comments:

Laksha said...

Agree that all you have said are the real fact about them

Good..awesome thinking Pradeep...

Anonymous said...

Good article - But I feel most of us are aware of these thoughts. Only problem is that they don't know the solution to these kind of problems - Please post any solution which you may think of - may be that can implemented atleast at the lowest end if not at the highest.

Anonymous said...

Nope!
People cannot give equal respect to them.
If people nod your point, then they would need be give equal respect to ladies, lower caste people, block people and all he whoever being disrespected by people, as it is real justice.
Although people think to give respect, cannot apply it in their real life and it is not practically feasible as the racism is strongly registered in their blood/gene.
So, It is only possible to person who has maturity and capability to think 360 degree aspects.
Do u think that it is easy to find out such person... then How could it be possible?

Pradeep said...

Yes.I agreed your point as it is registered in his genes.but if we compare with ladies and black peoples, Transgenders are rejected in their real life more.We can recognize ladies and black people as a human but we can not accept the same in their life..(I think caste is the diffrent topic as it is not only registered in his genes..it is registered in their blood , mind and total flesh.இந்தியா அழிந்தால் ஒழிய ஜாதியை அழிக்க முடியாது.)
I think, it is not possible to reach and accept by all peoples....but we can change first ourselves then we will try to change our generation.

Btw, Thanks for your comments.
P.Pradeep

Anonymous said...

Mr.Pradeep,
Agreed with you.
Try to change myself then... come back to you.
Bye.
I appreciate for the reasonable/prompt reply.

S a m u e l said...

Pradeep-san, its a Fantastic thinking. Yes, first lets change and then we will try to change others.

Keep up the good work Pradeep!

Pradeep said...

Sam,
Thanks for the contribution and the valuable inputs.

P.Pradeep

Post a Comment