Saturday, March 7, 2009

இப்ப சந்தோசமா உங்களுக்கு - ஐ.டி துறையின் வீழ்ச்சி

தமிழ் MA , அறை எண் 305 கடவுள் போன்ற படம் எடுத்தவர்களுக்கு மற்றும் அந்த படங்களை ரசித்தவர்களுக்கும் சந்தோஷமான காலம் என்றே நினைக்கின்றேன். காரணம் ஐ.டி துறையின் வீழ்ச்சி.

பொதுவாக ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்களை பார்த்தாலே ,மற்றவர்கள் பொறாமையுடனும் , தப்பான கண்ணோட்டத்துடனும் பார்கிறார்கள். அவர்கள் செய்த தவறுதான் என்ன?

பொதுவான காரணம் அவர்கள் மற்றவர்களை ஒப்பிடும் பொழுது அதிக சம்பளம் வாங்குகிறார்கள், அதிகம் செலவு செய்கிறார்கள் என்று. மேலே குறிப்பிட்ட படத்தை எடுத்தவர்கள் கூட அதே கருத்தை வலியுறுத்தி இருப்பார்கள். இவ்வாறு எடுத்த படத்தின் இயக்குனரிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றே ஒன்றுதான்.

*) இவர்கள் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு, இரண்டாவது படத்திற்கு வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?

*) இந்த படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் ஆயிர கணக்கிலா அல்லது கோடி கணக்கிலா?
இவர்கள் இவ்வாறு வாங்கி கொண்டு ஐ.டி துறையை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது? அதுவும் உச்ச கட்டமாக ஐ.டி துறையில் வேலை பார்ப்போறின் கை முடமாகி போவது போல படத்தில் காட்டுவதை என்னவென்று சொல்வதென்றே தெரிய வில்லை.

தவ்று அனைவரிடமும்தான் இருக்கிறது. ஒருவரை மற்றும் குறை கூறுவதில் எந்த புண்ணியமும் இல்லை. ஐ.டி ஊழியன் ஒருவன் ஆட்டோ பிடிக்க சென்றால் , அவனை பார்த்த மாத்திரத்தில் சாதாரண தொகையை விட இரண்டு மடங்காக கேட்பது ஆட்டோ காரரின் குற்றமா அல்லது ஐ.டி ஊழியனின் குற்றமா?
ஐ.டி ஊழியன் வீடு வாடகை எடுக்க சென்றால் , வாடகை தொகையை இரண்டு மூன்று மடங்காக கேட்பது யாரின் குற்றம்?

ஆனால் இப்போது ஐ.டி துறையில் சம்பள குறைப்பு நடந்து கொண்டு இருக்கிறது. வேலை இழப்பு என்பது சாதாரண விசயமாகி விட்டது. இப்பொழுது இவர்கள் ஏற்றிய வாடகை தொகையை குறைத்து விடுவார்களா ? இதை தட்டி கேட்பது யார்?

ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் அல்ல..சாதாரன குடும்பத்தில் பிறந்து , படித்து இன்று நல்ல நிலையை பிடிக்க போராடி கொண்டு இருப்பவர்கள் தான். பொதுவாக கீழ் தட்டு மக்கள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம்.. பொருளாதார சூழ்நிலை மாற வேண்டும் என்று ஊர் முழுவதும் மார்தட்டி கொள்கிறோம்.... ஆனால் அந்த நிலையை ஒருவன் எட்டினால் ஏற்று கொள்ள மறுக்கிறோம்...என்ன காரணம்?

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்பது இதுதானோ?

ப.பிரதீப்
வீழ்வது வெட்கமல்ல வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்

10 comments:

கணினி தேசம் said...

நானும் ஆதங்கப்பட்ட, ஐ.டி அல்லாத நண்பர்களுடன் விவாதித்த விடயம் இது.


நன்றாக எழுதியிருக்கிறீர்.

கணினி தேசம் said...

"Comments Word Verification"ஐ எடுத்து விடுங்கள் பின்னூட்டமிட வசதியாயிருக்கும்.

Pradeep said...

Hi, Kanini Desam,

Thanks for your comments and i have removed the comments word verification format.

Pradeep

ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கீறீர்கள்.. உங்கள் வாதம் நியாயமானதுதான்! ஒருவன் வெற்றிபெறும்வரை அவனை ஏளனமாகவும்,வெற்றிபெற்றவுடன் பொறாமையுடனும் பார்ப்பதுதான் இந்த சமுதாயம்....

senthilkumar said...
This comment has been removed by the author.
senthilkumar said...

உங்கள் கருத்துக்களை ஓரளவு ஓரவஞ்சனை இல்லாமல் ஏற்றுகொள்கிறேன்.பொதுவாக என்னுடைய வருத்தம் எப்பொழுதும் வெட்டி செலவு செய்பவர்கள் மீதுதானே ஒழிய அனைத்து IT நண்பர்கள் மீது அல்ல.// ஐ.டி ஊழியன் ஒருவன் ஆட்டோ பிடிக்க சென்றால் , அவனை பார்த்த மாத்திரத்தில் சாதாரண தொகையை விட இரண்டு மடங்காக கேட்பது ஆட்டோ காரரின் குற்றமா அல்லது ஐ.டி ஊழியனின் குற்றமா? //உங்கள் குற்றம் தான் நண்பரே..... இரண்டு மடங்கு தொகை கேட்கும் போது பஸ்ஸில் செல்ல வேண்டியது தானே. அப்படி என்ன அவசர வேலை .....satyam theater-இல் படம் போட்டு விடுவனோ.???..// ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் அல்ல..சாதாரன குடும்பத்தில் பிறந்து , படித்து இன்று நல்ல நிலையை பிடிக்க போராடி கொண்டு இருப்பவர்கள் தான். //..IT துறையில் முதல் மாதம் சம்பளம் வாங்கியதுமே தான் IT துறை நண்பர்கள் மேல்தட்டு மக்களை போல் நினைத்து கொண்டு தன்னை பெற்றவர்களையே கீழ் தட்டு மக்களை பார்ப்பது போல் பார்கிறார்களே .....அல்லது அவரின் குடும்பமே மேல்தட்டு குடும்பமாக பாவித்துக்கொண்டு குடும்ப நண்பர்களிடம் பெருமை பேசவே நேரம் பத்தவில்லை. பாவம் அவர்களுக்கு தெரியுமா தன் பிள்ளைக்கு இன்னமும் for loop புரியாதது...???
விலை ஏற்றத்துக்கு காரணமானவர்களை கீழ் தட்டு மக்கள் திட்டி தீர்ப்பது அவர்கள் தவறா? அல்லது IT nanbargal thavara??மற்றபடி tamil MA,அரை என் 108 ஆகியவை மேலும் வெறுப்பை சம்பாதித்து தருவதை தவிர வேறு எந்த ஒரு நல்ல தீர்வையும் தர தவறிவிட்ட மோசமான
எடுத்துக்காட்டுகள்.

Pradeep said...

.// ஐ.டி ஊழியன் ஒருவன் ஆட்டோ பிடிக்க சென்றால் , அவனை பார்த்த மாத்திரத்தில் சாதாரண தொகையை விட இரண்டு மடங்காக கேட்பது ஆட்டோ காரரின் குற்றமா அல்லது ஐ.டி ஊழியனின் குற்றமா? //உங்கள் குற்றம் தான் நண்பரே..... இரண்டு மடங்கு தொகை கேட்கும் போது பஸ்ஸில் செல்ல வேண்டியது தானே. அப்படி என்ன அவசர வேலை .....satyam theater-இல் படம் போட்டு விடுவனோ.???../////


அவசர வேலை என்பதால்தான் ஆட்டோவில் செல்கிறோம்(அது சத்யம் திரை அரங்கில் படம் பார்ப்பதாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகம் செல்வதாக இருந்தாலும் சரி).

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பது பழமொழி.
அதேபோல் ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாளிகள் இருக்கதான் செய்வார்கள். :)))

.???..// ஐ.டி துறையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் அல்ல..சாதாரன குடும்பத்தில் பிறந்து , படித்து இன்று நல்ல நிலையை பிடிக்க போராடி கொண்டு இருப்பவர்கள் தான். //..IT துறையில் முதல் மாதம் சம்பளம் வாங்கியதுமே தான் IT துறை நண்பர்கள் மேல்தட்டு மக்களை போல் நினைத்து கொண்டு தன்னை பெற்றவர்களையே கீழ் தட்டு மக்களை பார்ப்பது போல் பார்கிறார்களே ...////

ஐ.டி துறையில் உள்ள அனைவரும் நீங்கள் சொல்வது போல் இருக்கிறார்களா என்பது கேள்வி குறியே ? ..என்றாலும் உங்கள் வாதத்தை நான் ஏற்று கொள்கிறேன் . இருப்பினும் அல்ப தனமான மக்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

///...மற்றபடி tamil MA,அரை என் 108 ஆகியவை மேலும் வெறுப்பை சம்பாதித்து தருவதை தவிர வேறு எந்த ஒரு நல்ல தீர்வையும் தர தவறிவிட்ட மோசமான
எடுத்துக்காட்டுகள்..../////

அரை என் 108 படம் இன்னும் நான் பார்க்கவில்லை . முடிந்தால் எப்பொழுது அந்த படம் திரை இட பட்டது என்று விலக்கினால் புண்ணியமாக போகும். :)))))) ( நான் பார்த்தது அறை எண் 305 படம்தான் .)

senthilkumar said...

Balcony-ல இருந்து படம் பார்த்தா அறை எண் 305,second class டிக்கெட் வாங்கி படம் பார்த்தா அறை எண் 108...ஹ ஹ ஹ....

கவனக்குறைவிற்கு மன்னிக்கவும்.....

Pradeep said...

:))))))

Anonymous said...

i go with senthilkumars comments.

moreover i dont think that IT industry is falling down. the glamour(same with civil and mech engineers 30 yrs before...even now there are requirements and job prospects in civil and mech fields) is declining and it is marching towards an equilibrium. in one way it is good. it is not healthy for a country or for a society to depend on one sector for its prosperity.

then coming to the point of blaming IT ppl for hard hit on other sector employees. even though it is true that becoz of IT companies, ppl workin in other sectors and earning a meager amount (compared to IT) have to go out of city limits for their accommadation and have to commute more than 2 hrs to reach their work place. when compared to their suffering, yours(IT) is nothing.
however as senthil rightly put, blaming a particular sector of society or developing a hatred on them is not sensible(the movies u mentioned).they didnot talk abt any solution.i also condemn those creaters.

Govt could have anticipated this gap and should have done something. Now the world wide financial crisis will take care of it. lol!

Sorry pradeep. it is very difficult to write in tamil.

Post a Comment