Sunday, May 8, 2011

சும்மா...................... டைம் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

சென்ற வாரம் வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது ஒரு போஸ்டரை பார்த்தேன்...புனித நீராட்டு விழா என்று கூறி அந்த பெண்ணின் போட்டோ வையும் போட்டு இருந்தார்கள்....பார்பதற்கு சற்று வியப்பாகவும், அந்த சிறு பெண்ணை நினைக்கும் பொழுது சற்று வருத்தமாகவும் இருந்தது....இன்னமும் இது போன்ற கேவலமான சம்பிருதாயங்கள் நமக்கு தேவைதானா என்று....இது ஒரு பெண்ணிற்கு தேவைதான் என்று கூறி 1000 காரணங்கள் கூறினாலும், இந்த காலத்திற்கு இது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. சாதாரணமாக வீட்டில் வைத்து செய்வதை செய்து விட்டு முடித்து கொண்டால் போதுமானது என்றே தோன்றுகிறது. இதை பற்றி ஒரு தெரிந்த நபரிடம் விவாதித்த போது, ஒரு பெண் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பால், ஆகவே செய்து விடுவது நல்லது என்று கூறினார். இப்படி இது போல ஒரு பெண் வளர்ந்த பிறகு எதிர் பார்த்தால் என்றால், நாம் அந்த பெண்ணை சரியான முறையில் வளர்க்கவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இது போன்று , ஒரு நண்பரிடம் பேசி கொண்டு இருக்கையில், நண்பரின் கல்யாணத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..ஆனால் அவர் போன் மட்டும் செய்து வர சொன்னார்..பத்திரிகை வைக்க வில்லை, ஆகவே நான் போகவில்லை என்று. நாம் இன்னும் இது போன்ற சில தேவை இல்லாத அல்ப தனமான விசயங்களை வைத்து கொண்டுதான் இருக்கிறோம் . ஒன்று புரியவில்லை ....நேரிலோ அல்லது போனிலோ சம்பந்த பட்ட நபரே சொல்லும் போது..அதற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை ..ஒன்றுமே இல்லாத காகிதத்திற்கு ஏன் கொடுக்கிறோம் என்று.

இன்னும் சில பேரை பார்க்கலாம்,வேலைக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்லும் போது, தான் இந்த சாதி அல்லது இந்த மதம் என்பதை அவர்கள் தன் நெற்றியில் வைத்து உள்ள சந்தனத்தின் வடிவத்தை வைத்தே கண்டு பிடித்து விடலாம். சில பேர் நிலா,நாமம் , அது இது என்று வரைந்து வைத்து தான் யார் என்பதை சொல்லாமல் சொல்லி விடுவார்கள். நீங்கள் யார் அல்லது எந்த ஜாதி என்பதை இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. சில சமயம் இது போன்ற நபர்களை பார்க்கும் பொழுது , அவர்களிடம் பழகாமலே அவர்களை வெறுக்க வைக்க தோன்றுகிறது. ஏன் என்று தெரிய வில்லை.

சில சமயம் ஊருக்கு ரயிலில் செல்லும் பொழுது, ஒரு சில குறிபிட்ட சந்திப்புகளில் திருநங்கைகள் ஏறி பயணிகளிடம் காசு கேட்பதை பார்த்து இருக்கலாம். அவர்களை பார்க்கும் பொழுது ஏன் இந்த சமுதாயம் அவர்களுக்கு இன்னும் ஏன் ஒரு அங்கீகாரத்தை வழங்க வில்லை என்றே தோன்றுகிறது. அவர்களை சில பேர் மனிதர்களாக கூட பார்ப்பது இல்லை. இயற்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது பெண்ணாகவே உருவாகிறது. (XX ). இந்த குரோமோசோமுடன் y சேரும் பொழுது அது ஆணாக மாறுகிறது. இல்லையென்றால் அது பெண்ணாக இருக்கும். சில சமயம் y உடன் சேரும் பொழுது சில குறைபாடுகள் ஏற்பட்டு உடலளவில் ஆணாகவும் , உள்ளத்தில் பெண்ணாகவும் இருந்து விடுகிறது. அவர்கள்தான் திருநங்கைகள். இந்த குறைபாட்டிற்கு அவர்கள் என்ன செய்ய முடியும். மற்ற ஊனத்தை போல இதுவும் ஒரு ஊனம் அவ்வளவுதான். என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும்.

4 comments:

Sandiya said...

சற்றே தாமதமான பதிவானாலும் நல்ல பதிவு !!!!!!!!!!

எனக்கும் திருநங்கைகல் பார்த்தாள் ஒரு விதமான பயம் தோன்றுகிறது உங்கள் வரிகளை படித்தபின் எதற்கு தேவை இல்லாமல் இந்த பயம் என்று சிந்திக்றேன்.மேலும் அவர்களின் சில வித்யாசமா செயல்களுக்கு நம் சமுதாய நடவடிக்கைகளே காரணம்....
"என்றைக்கு விண்ணபங்களில் ஆண் , பெண் போன்று இவர்கள் இனமும் சேர்க்க படுகிறதோ ....அன்றுதான் அவர்களுக்கு விடுதலை உருவாகும். "

நீங்கள் கூறியது சரியான தீர்வு
நாம்முடைய நடவடிக்கைகள் தான் அவர்கலின் செயல்கலுக்கு காரனமொ என்று தோன்ருகிறது....
நன்றி
இன்னும் நல்ல பதிவுகலுக்கு காத்றுக்கும்,

Anonymous said...

Good One.. Keep Writing :)

Anonymous said...

These irritating customs and unnecessary ego trips , have affected me so many times. When , oh, when our society will improve? I wonder.

I appreciate your thinking in these respects.

பாரதசாரி said...

இந்தப் பதிவு ஒரு கோபக் கலவை! நியாயமானதும் கூட.
போஸ்டர் போய் இப்போது டிஜிட்டல் பேனர்களின் ஆதிக்கம்.
நேரில் வந்து பத்திரிக்கை கொடுத்தால் தான் வருவேன் என்று சொல்லும் அதி மஹா **ங்கிகள் வந்து நிச்சயம் மனதார வாழ்த்தப்போவதில்லை, குறை சொல்லவே தான் வருவார்கள்.அவர்கள் வராமல் இருப்பதே மேல்.
சாதி - அதைப்பத்தி பேசி நம்ம நேரத்த வீண் செய்யக் கூடாது.புத்தரையே புத்திஸ்டாக ஆக்கிய உலகம் இது!
திருநங்கைகளின் முதல் புறக்கணிப்பு பெற்றோர்களிடமிருந்து தொடங்குகிறது.அவர்கள் அளவிலும், அந்த விழிப்புணர்வு வரவேண்டும் என்று கருதுகிறேன்.
அவர்களை கேலி செய்யும் வார்ததைகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாக்கபட வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.கிராமபுறங்களில் இன்றும் பெண்களை, குறிப்பாக படிக்க விரும்பும் பெண்ணை மட்டம் செய்ய என்று தனி அகராதியே இருப்பதும் வேதனை. சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படும் திருநங்கைகள் , இப்போது பல விதமாக தஙகளை வளர்த்துக்கொள்ள நம்மாலான உதவிகளை நிச்சயம் செய்யலாம். ஒரு ஆட்டோ அல்லது டேக்சி ஓட்ட முடியுமானால் பொதுமே அவர்கள் ஏன் பிச்சை எடுக்கவோ , பாலியல் தொழிலிலோ ஈடுப்படப்போகிறார்கள்?

Post a Comment